Monday, September 1, 2014

ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு உடலில் போதிய ஹார்மோன்கள் இருக்க வேண்டும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அதில் பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரோனும், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோனும் போதிய அளவில் இருக்க வேண்டியது அவசியம். ஆண்களின் உடலில் சுரக்கப்படும் டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன்.

இந்த ஹார்மோன் தான் ஆண்களின் ஆண்மையை வெளிப்படுத்தும். குறிப்பாக இந்த டெஸ்டோஸ்டிரோன் தான் பாலுணர்ச்சியைத் தூண்டும். ஆனால் இவை ஒரு ஆணின் உடலில் குறைய ஆரம்பித்தால், அவை உடலை மட்டுமின்றி, கணவன் மனைவி உறவுகளையும் பாதிக்கும்.

Free SMS & Free Call - இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கும் இலவசமாகப் SMS மற்றும் Free Call!

என்னிடம் நிறைய நண்பர்கள் எல்லா நாடுகளுக்கும் இலவசமாகப் SMS மற்றும் Call இவ்வாறு எடுப்பதுக்கு ஏதும் மென்பொருள் உள்ளதா என்று நானும் பல முயற்சிகளுக்கு மத்தியில் ஒரு மென்பொருள் உள்ளது என்று கண்டறிந்து கொண்டேன்,,

அந்த மென்பொருளை என்னுடைய iPod மூலமாக செயற்படுத்தி பார்த்ததில் இந்த மென்பொருள் வெற்றி அளித்துள்ளது இருந்தாலும் என்னுடைய நண்பர்களும் இந்த பயனை பெற்றுக்கொள்ளுங்கள்.

Sunday, August 31, 2014

கால்களில் துர்நாற்றம் வீச காரணம்

சிலருக்கு கால்களில் அதிகளவு வியர்வையால் துர்நாற்றம் வீசும். கால்களில் உற்பத்தியாகும் வியர்வையை நாம் அணிந்திருக்கும் சில வகையான செருப்புகளால் உறிஞ்ச முடியாது. இதனால், கால்களில் வியர்வை தங்கி அதன் காரணமாகத் துர்நாற்றம் உண்டாகலாம்.

அல்லது கால்களில் பாக்டீரியா கிருமிகள் இருந்தால் சிறிது வியர்த்தாலும் இதுபோன்ற துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குளிக்கும்போது உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கால்களுக்கும் கொடுத்து, நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

சாதாரண சோப்புகளைத் தவிர்த்து, ஆன்ட்டி பாக்டீரியல் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது. செருப்பு அல்லது ஷூ போடுவதற்கு முன்னர் கால்களை ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும். நீங்கள் எந்த

வெற்றிலை இருமல், சளித்தொல்லையை குணப்படுத்தும்

வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி பொறுத்துக் கொள்ளும் வெது வெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.

ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கட்டி கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினில் பத்து துளிகள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுக்க சளி, இருமல் குணமாகும். நெஞ்சு சளி கரைந்து மலத்தோடு வெளியேறும். வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது.

வெற்றிலையை மைய அரைத்து சீல்வாதம் விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக வைத்துக் கட்ட வீக்கமும் வலியும் குறைந்து நல்ல தீர்வு ஏற்படும். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகளின் மேல் பற்றாக போட்டு வைக்க கட்டிகள் சீக்கிரத்தில் பழுத்து உடையும்.

வெந்தயக்கீரை கண் பார்வை குறைவை தீர்க்கும்

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு தொல்லை போகும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

Monday, August 18, 2014

பழங்களை கழுவாமல் சாப்பிடுவது நல்லதா?

காய்கறிகளை வாங்கி வந்தவுடன் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யுங்கள். நறுக்கியப் பின்பும் தண்ணீரில் அலசுங்கள்.

* பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு, காப்பர் சல்பேட் பயன்படுத்தப்படுகிறது. சிலசமயம் திராட்சைப் பழங்களின் மீது வெள்ளைப் புள்ளிகளைப் பார்க்கலாம். இது காய்ந்து போன பூச்சி மருந்தின் எச்சங்கள் ஆகும். பழங்களைச் சாப்பிடும் முன் தண்ணீரில் நன்றாக அலசி சாப்பிடுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி கொஞ்சம் உப்பைப் போட்டு கலக்குங்கள். அதில் கொய்யா, மாம்பழம், உதிர்த்துப் போட்ட திராட்சைப் பழங்களைச் சில நிமிடங்களுக்கு ஊற விட்டு எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி பின் துணியால் துடைத்து விட்டுப் பயன்படுத்துங்கள்.

உணவுப்பொருட்களை கெடாமல் பாதுகாக்கும் எலுமிச்சை

வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் நாம் பல்வேறு பொருட்களை வைப்பது வழக்கம். பெரும்பாலும் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் கிருமிகளால் தாக்கப்படுவதால் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.

அந்நிலையில் பஞ்சினை சிறிய பந்துபோல் சுருட்டி அதை எலுமிச்சை சாற்றில் நனைத்து அல்லது ஸ்பாஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் சில மணி நேரங்கள் வைத்திருக்க துர்நாற்றம் விலகும்.

* வெண்மை நிறமுடைய காய்கறிகளை சமைக்கும் போது அவை எளிதில் செம்மையாக மாறுவது இயற்கை. உதாரணம் காலிபிளவர். இவற்றை

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...