Friday, October 5, 2012

அமைதியான உள்ளம்!

அவசர கதியில் இயங்கும் இந்த உலகத்தில், பலர் உள்ளம் அமைதி இழந்து தவிப்பதை பார்க்கிறோம். அமைதியான உள்ளத்துக்கான (peace of mind) மருந்தை நம்மிடையே வைத்துக்கொண்டு, அதைத்தேடி எங்கெங்கோ அலைகிறோம். எங்கும் செல்லத்தேவையில்லை. தொடர்ந்து படியுங்கள் செயல்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ் உள்ளம் அமைதி பெறும்.

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி on 9th May 2011

உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக!

இன்பமும் துன்பமும்

இன்பமும் துன்பமும் 

  உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும்  இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.
    எப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்



மறுமை நாள் கியாமத் நாள் நியாயத் தீர்ப்புநாள்.இப்படி முஸ்லிம்களிடம் அறியப்பட்டுள்ள-உலகம் அழிந்து மறு உலகம் என்று அறியப்பட்டுள்ள – நாள் பற்றியும், அதற்கு முன் ஏற்படும் அடையாளங்கள் பற்றியும் இங்கே தொகுத்து வழங்கி உள்ளேன்.
1400 ஆண்டுகளுக்கும் முன்பே இவை நடக்கும் என்று சிலவற்றைச் சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் கூறிச்சென்ற அடையாளங்களில் பல நடந்து முடிந்து விட்டன. அவர்களின் முன்னறிவிப்பு நடந்ததிலிருந்து அவர்கள் ஒர் ‘ இறைத்தூதர் தான்’ என்பது நிரூபணமாகி உள்ளது.
நடந்தது போக இனியும் நடக்கும் என அவர்கள் கூறியுள்ள சில அடையாளங்கள் நிச்சயம் நடந்தே தீரும். இதில் சந்தேகமே இல்லை. அவை நிகழ்ந்து முடிந்ததும் மறமை நாள் வந்து விடும்.
மறுமை நாளில் நல்லவன், தீயவன் யார்? யார்? என இறைவன் விளக்கி, சொர்க்கம், நரகம் யாருக்கு எனத் தீர்ப்பு வழங்குவான். அதுவே நிரந்தர வாழ்வும் கூட.

இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள்

அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது.
எனவே அதை நிவர்த்தி செய்யும் வகையில் நம் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள், இஸ்லாமிய பொது அறிவு, மற்றும் குண நலன்கள் என மூன்று தலைப்புகளாக இத்தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம். அந்த அன்புச் செல்வங்கள் ஈருலகிலும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.

சிறுவர்களுக்கான இஸ்லாமியப் பொதுஅறிவு

1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.

2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்? 

ஹபஸா (அபிசீனியா)

3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்?

எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.

2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்?

நான் இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன்.

3. எதையும் பாராட்டும் போது?

மாஷா அல்லாஹ்- எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன்.

4. பிறர் எதையும் புகழும் போது நீ என்ன கூறுவாய்?

சுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய் மையானவன்என்று கூறுவேன்.

இஸ்லாமிய குண நலன்கள்


1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

கோபம், கோபம்

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

திரும்பி வந்துவிடு என் வளைகுடா கணவா..!!


திரும்பி வந்துவிடு என் வளைகுடா  கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு 
கெஞ்சுபவனைப்போல.

உங்கள் உடலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

நாம் சாப்பிடும் சாப்பாடு எந்தளவுக்கு நமக்கு சத்தைக் கொடுக்கிறது? நாம் சாப்பிடும் சாப்பாடு நமது உடலுக்கு ஏற்றது தானா? நாம் தவறான உணவுப் பழக்கத்தை கொண்டிருந்தால் நமது உடல் நமக்கு அதை அறிவுறுத்துகிறதா? இவற்றில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக உங்களிடம் சில கேள்விகள். கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள். மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்து உங்களின் உடல் நலன் மற்றும் உணவுப் பழக்கம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

100 மருத்துவக் குறிப்புகள்

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

முந்தைய நபிமார்கள் வாழ்ந்த இடம் வீடியோ.

அஸ்ஸலாமு அலைக்கும்.


கிழே உள்ள  இரண்டு லிங்கில்   குரானில்  சொல்லப்பட்ட  முந்தைய  நபிமார்கள் வாழ்ந்த இடம் மற்றும் அவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்ற வீடியோ ,  பழைய அத்தாட்சிகள் இன்றும் உள்ளது. அதை, நமது கேரளா சார்ந்த முஸ்லிம் அணைத்து நாடுக்கும் சென்று எடுத்த  வீடியோ  படம். 

தமிழ் விளக்கத்துடன் உள்ள வீடியோ .


இது நமக்கு ஒரு படிப்பினை. நாம் சென்று பார்க்க முடியாத இடங்கள். 

http://tharjuma.wordpress.com/video-in-tamil/




வஸ்ஸலாம்

Wednesday, October 3, 2012

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? கொஞ்சம் இத படிங்க!

காப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்? கொஞ்சம் இத படிங்க!

Hot Coffee
சூடாக காப்பி, டீ குடிப்பவரா? சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”
இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.
சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.

கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்



கோபத்தை கட்டுப் படுத்துபவர்களை சிறந்த வீரன் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்:புகாரி 6114.

இன்றுக் கோபத்தைக் காட்டுவதே வீரத்தின் வெளிப்பாடு என்று மாற்றப்பட்டு விட்டது. காட்டுக் கூச்சல் இடுவதும் கை,கால்களை உதறுவதும் கோபம் வரவில்லை என்றாலும் வரவழைக்க முயற்சி செய்வதும்  இன்றைய மக்களிடத்தில் சகஜமாகி விட்டது,

இவ்வாறு செய்வது அவரது அமலையும், ஆரோக்கியத்தையும் சீர்குலைப்பதை அவரகள்; அறிவதில்லை அறிந்தால் அடக்கத்துடன் நடந்து கொள்ளத் தவற மாட்டாரகள்;. 

கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாப் புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்தும் விடும். 

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

 

Healthy Diet Tips - Food Habits and Nutrition Guide in Tamil

 


உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: 

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

உடல் வலிகளும் காரணங்களும் - அறிய வேண்டிய மருத்துவம்!




எப்போதாவது கடுமையான வலி ஏற்பட்டு அவசரம், வேலைப்பளு அல்லது மருத்துவச் செலவு காரணம் அதை அலட்சியப் படுத்தியிருக்கிறீகளா? ஜாக்கிரதை! சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும். அப்படிப்பட்ட வலிகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் தொடர்ந்து படியுங்கள்.

1. மிகமோசமான தலைவலி
தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான் வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...