Monday, August 18, 2014

பழங்களை கழுவாமல் சாப்பிடுவது நல்லதா?

காய்கறிகளை வாங்கி வந்தவுடன் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யுங்கள். நறுக்கியப் பின்பும் தண்ணீரில் அலசுங்கள்.

* பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு, காப்பர் சல்பேட் பயன்படுத்தப்படுகிறது. சிலசமயம் திராட்சைப் பழங்களின் மீது வெள்ளைப் புள்ளிகளைப் பார்க்கலாம். இது காய்ந்து போன பூச்சி மருந்தின் எச்சங்கள் ஆகும். பழங்களைச் சாப்பிடும் முன் தண்ணீரில் நன்றாக அலசி சாப்பிடுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி கொஞ்சம் உப்பைப் போட்டு கலக்குங்கள். அதில் கொய்யா, மாம்பழம், உதிர்த்துப் போட்ட திராட்சைப் பழங்களைச் சில நிமிடங்களுக்கு ஊற விட்டு எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி பின் துணியால் துடைத்து விட்டுப் பயன்படுத்துங்கள். * தோல் நீக்கி சாப்பிட வேண்டிய பழங்களைத் தண்ணீரில் கழுவி, துணியால் துடைத்துவிட்டுப் பின் தோல் உரித்துச் சாப்பிடுங்கள்.

* ஆப்பிளின் மெழுகு பூச்சு போக, வெந்நீரில் சில வினாடிகள் ஆப்பிளைப் போட்டு வைத்து, பின் சொர சொரப்பான துணியால் அழுத்தத் துடைத்துவிட்டு (மெழுகு போன பின்) தோலுடன் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...