Saturday, September 28, 2013

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நாவல் பழம்

வேறு பெயர்கள்: நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் . நாவல் பழம் எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம். நாவல் மரத்தின் பழம், இலை, மரப் பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கல்லீரல் கோளா றுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் இடம் பெற்ற இந்தப் பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.

Wednesday, September 25, 2013

நீண்ட ஆரோக்கியம் பெற சித்தா காட்டும் வழிகள்

இறைவன் பூமியை படைத்து அதில் இயற்கை வளங்களை உருவாக்கி அவற்றை அனுபவிக்க மனிதனையும் படைத்தான். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அனைத்தையும் படைத்துள்ளான். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பது மனிதன் மட்டுமே. அவனது பேராசை இதற்கு காரணமாக உள்ளது எனலாம்.

இதனால் பல்வேறு நோய்கள் உண்டாகி, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மகிழ்ச்சியை தொலைத்து மன உளைச்சலோடு வாழ்ந்து வருகிறான். தற்போது நம் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இருப்பினும் நோயின்றி வாழ முடியாத நிலையே நிலவுகிறது.

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு

குங்குமப் பூவில் மருத்துவகுணம் உள்ளது

கருவில் இருக்கும் குழந்தை 'கலராக' பிறக்கும் என்று பலரும் குங்குமப்பூவை சாப்பிடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மிக அதிக விலைகொண்ட நறுமணப் பொருட்களில் ஒன்று குங்குமப்பூ. அதன் மருத்துவகுணம் அதற்கு விலை உயர்ந்த மதிப்பைக் கொடுத்துள்ளது. அதிலுள்ள சத்துக்களை பார்ப்போம்...

குங்குமப்பூ என்பது நிஜமான மலரல்ல. 'குரோகஸ் சட்டைவஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்ட தாவர மலரின், சூல்முடிகளே 'குங்குமப்பூ' ஆகும். இதன் வழக்கு மொழிப் பெயர் 'சப்ரான்'. தெற்கு ஐரோப்பாவை தாயக மாகக் கொண்டது குங்குமப்பூ. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் மிகுதியாக விளைகிறது.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...