Sunday, August 31, 2014

வெற்றிலை இருமல், சளித்தொல்லையை குணப்படுத்தும்

வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி பொறுத்துக் கொள்ளும் வெது வெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.

ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கட்டி கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினில் பத்து துளிகள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுக்க சளி, இருமல் குணமாகும். நெஞ்சு சளி கரைந்து மலத்தோடு வெளியேறும். வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது.

வெற்றிலையை மைய அரைத்து சீல்வாதம் விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக வைத்துக் கட்ட வீக்கமும் வலியும் குறைந்து நல்ல தீர்வு ஏற்படும். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகளின் மேல் பற்றாக போட்டு வைக்க கட்டிகள் சீக்கிரத்தில் பழுத்து உடையும். வெற்றிலைக் கொடியின் வேரைச் சுவைத்து விழுங்க பாடகர்களின் தொண்டை வெண்கலத்தைப் போல ஒலியைப் பெருக்கும். வெற்றிலைச் சாற்றோடு சமபங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சுவாச கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.

திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய், நெஞ்சுச் சளி இருமல் குணமாகும். பாம்பு கடித்தவருக்கு உடன் வெற்றிலைச் சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும் இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.

வெற்றிலைச் சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாகக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப் பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும். இரவு தூங்கச் செல்லும் முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச் சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்து சேர்த்து குடித்துவர மூட்டு வலி எலும்புவலி ஆகியன குணமாகும்.

வெற்றிலையின் மருத்துவத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேதனை தரும் நோய்களை விலக்கி வளமான வாழ்வுக்கு வழி கோலுங்கள்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...