Friday, November 30, 2012

இலவங்கப்பட்டை

உலகின் மிக முக்கிய நறுமணப்பொருளான இலவங்கப்பட்டை மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து தாவரம் ஆகும். யூதர்களின் நூலான டோராவில் இது பற்றி குறிப்பு உள்ளது. எகிப்து மற்றும் இந்தியாவில் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பே லவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் எகிப்தில் கி.மு. 500 – ம் ஆண்டு முதல் மருந்தாக உபயோகிப்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டை மற்றும் இலைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

சர்க்கரை நோயை குணப்படுத்தும்


தினமும் அரை டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி உட்கொண்டால் கெட்ட கொழுப்புகள் கரைவதாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து.

மழைக்காலத்தில் ஆரோக்கியம் மிக அவசியம்,,

பருவகாலம் மாறுவது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். அதிலும் மழைக்காலம் வந்துவிட்டால், உடலில் இருமல், சளி மற்றும
் வைரஸ் காய்ச்சல் போன்றவை வந்துவிடும். ஆகவே வரும் முன் காப்பதே சிறந்தது என்னும் பழமொழிக்கேற்ப நோய்கள் வருவதற்கு முன் எப்படி இருக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்று இருக்கிறது. அப்படி எதுவும் வராமல் ஆரோக்கியமாக இருக்க ஒரு சில டிப்ஸ்கள் இருக்கிறது.

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க


1. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம்: கோடை காலத்தில் வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து குடிப்போம்.

பெற்றோர்களின் பராமரிப்பு


ஒருவர் திருமனத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியத்தைப் பெறவில்லை என்றால் அவர்படும் வேதனையை வரையருக்க முடியாது. குழந்தையைப் பெறுவதற்காக அவர் எவ்வளவு காசு வேண்டுமானாலும் செலவு செய்வார். காரணம் குழந்தை இருந்தால் பாச மழையைப் பொழிய முடியும் என்பது தான்.

தனக்கு குழந்தை உருவாகிறது என்ற செய்தி தெரிய வந்தால் அன்றிலிருந்து அந்தக் குழந்தையை சுமக்கும் தாயுடைய தியாகம் ஆரம்பமாகிறது.தன் குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்காக எத்தனையோ உணவு வகைகளைத் தியாகம் செய்கிறாள். தான் விரும்பிய உணவை சாப்பிட முடியாத நிலை அவளுக்கு ஏற்படுகிறது.


குடும்பத்தில் அனைவரும் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சுற்றுலா சென்றாலும் அந்த பயணத்தில் அவள் இடம் பெற மாட்டாள் இடம் பெறவும் முடியாது.

மனைவியை மகிழ்விப்பது



மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.

நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

Tuesday, November 27, 2012

உங்களுக்காக வைக்கப்படும் அந்த கடைசீத் தொழுகையைக்கூட சுன்னத்தான முறையில் தொழ வைக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லையா?

உங்களுக்காக வைக்கப்படும் அந்த கடைசீத் தொழுகையைக்கூட சுன்னத்தான முறையில் தொழ வைக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லையா?

தமிழகத்திலுள்ள ஹனஃபீ மத்ஹபை பின்பற்றும் ஆலிம்களுக்கு ஒரு வேண்டுகோள். மாபெரும் அறிஞர் இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு நீங்கள் ஏன் மதிப்பளிக்க மறுக்கிறீர்கள்? மறுமையில் அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதில் அப்படியென்ன ஆசை உங்களுக்கு?!

இறையச்சத்துடன் அவர்கள் சொல்லிவிட்டுச் சென்ற மிக முக்கியமான ஒரு விஷயத்தை ஏன் அலட்சியப்படுத்துகிறீர்கள்.? (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையே அலட்சியப்படுத்தக்கூடியவர்கள் தானே நீங்கள் என்பது ஒருபுறமிருக்க...)

புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை!



1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?

"உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியரிடத்தில் சிறந்தவரே" (நபி மொழி ) !!!!


சகோதர்களே இதோ சில டிப்ஸ்
1).முதலில் மனைவி என்பவள் உங்களில் சிறந்த பாதி.(Better Half).ஆதலால்அவர்களது தேவைகளை முழு மனதுடன் பூர்த்தி செய்யுங்கள்.


2).வேலையை அலுவலகத்திலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு வாருங்கள்.

3).அவர்களது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

4).ஒவ்வரு நாளும் நடந்த விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது மனது விட்டு பேசுங்கள்.

5).அவர்களுடைய சிறிய சிறிய ஆசைகளை நிறைவேற்றுங்கள்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...