Sunday, August 31, 2014

கால்களில் துர்நாற்றம் வீச காரணம்

சிலருக்கு கால்களில் அதிகளவு வியர்வையால் துர்நாற்றம் வீசும். கால்களில் உற்பத்தியாகும் வியர்வையை நாம் அணிந்திருக்கும் சில வகையான செருப்புகளால் உறிஞ்ச முடியாது. இதனால், கால்களில் வியர்வை தங்கி அதன் காரணமாகத் துர்நாற்றம் உண்டாகலாம்.

அல்லது கால்களில் பாக்டீரியா கிருமிகள் இருந்தால் சிறிது வியர்த்தாலும் இதுபோன்ற துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குளிக்கும்போது உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கால்களுக்கும் கொடுத்து, நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

சாதாரண சோப்புகளைத் தவிர்த்து, ஆன்ட்டி பாக்டீரியல் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது. செருப்பு அல்லது ஷூ போடுவதற்கு முன்னர் கால்களை ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும். நீங்கள் எந்த வகையான செருப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம்.

வியர்வையை உறிய முடியாத தன்மை கொண்டனவற்றைத் தவிர்த்து, எம்.சி.பி. ரப்பர் செருப்புகளைப் பயன்படுத்தலாம். ஷூ அணிபவராக இருந்தால், நைலான் சாக்ஸ்களுக்குப் பதில், பருத்தியால் ஆன சாக்ஸை உபயோகப்படுத்தலாம்.

பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கூடிய சில வகை பவுடர் உண்டு. அவற்றைப் பயன்படுத்தியும் துர்நாற்றம் இல்லாமல் இருக்க முடியும். இவற்றில் எல்லாம் கட்டுப்படவில்லை என்றால், தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...