Wednesday, July 6, 2022

கல்வியின் சிறப்பு அல்லாஹ் கூறுகிறான்

 

இறைவா கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 20:114 )
உங்களில் இறை நம்பிக்கையாளர்களுக்கும், அறிவுடையோருக்கும் பல பதவிகளை அல்லாஹ் வழங்குவான். ( அல்குர்ஆன் : 58:11 )
அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? என, (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 39:9 )
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. (அல்குர்ஆன் :

(11:85 )

முஆவியா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ் ஒருவருக்கு நல்லதை நாடிவிட்டால், மார்க்க விஷயத்தில் அவரை அறிஞராக்குவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1376 )

இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''இருவர் விஷயத்திலே தவிர பொறாமை கூடாது. 1) அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அதை உரிய வழியில் செலவு செய்பவர். 2) அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதன் மூலம் தீர்ப்பளித்து, பிறருக்கு கற்றுத் தருபவர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1377 )

இஸ்லாத்தின் பர்வையில் மது அருந்துதல்!

 மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் -

Monday, July 4, 2022

என் தலை எழுத்து

 அஸ்ஸலாமு அலைக்கும்.

யாருக்கு எது நடந்தாலும் 'இறைவன் உனக்கு எழுதி வைத்த தலைஎழுத்து என்று சொல்லுவார்கள்' அப்படியிருக்கும் போது அதன் படிதான் மனிதனும் நடக்கின்றான்.குடிக்காரன் குடிக்கிறான் கெட்டவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், இதுவும் இறைவன் எழுதிய எழுத்து என்றால், ஏன் தண்டனை தர வேண்டும்இறைவன். இது என் தோழியின் கேள்வி.


எல்லாமும் இறைவனின் விதிப்படிதானே நடக்கின்றது. பிறகு நாம் எப்படி குற்றவாளியாவோம் என்ற எண்ணம் பரவலாக எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கின்றது. இறைவன் நாடியதுதான் நடக்கும், இறைவன் நாடாமல் எதுவொன்றும் நடக்காது என்ற கருத்தில் அமைந்த குர்ஆன் வசனங்களை இவர்கள் தங்களின் விதி நம்பிக்கைக்கு சாதகமாக நினைத்துக் கொள்கின்றார்கள். விதியைப் பற்றியோ அல்லது குர்ஆன் வசனங்களை விளங்காமையோதான் இத்தகைய சிந்தனைக்கு அவர்களைத் தள்ளுகின்றது.

அவர்கள் விளங்கும் விதத்தில் நாமும் சில கேள்விகளைக் கேட்போம்.

இறைவன் விதித்தப்படிதான் எல்லாமும் நடக்கின்றது என்று கூறினால் அதே இறைவன் தான் தூதர்களை அனுப்பி, வேதங்களை வழங்கி 'தூதர் காட்டிய வழியிலும், வேதத்தின் வழியிலும் வாழுங்கள்' என்கிறான். இதுவும் இறைவனின் விதிதான். விபச்சாரம் செய்து விட்டு 'இது விதி' என்று சொல்லுபவர்கள், தவறான காரியங்களில் ஈடுபட்டு விட்டு 'இது விதி' என்று கூறுபவர்கள் இறைவன் விதித்த "நல்வழியில் செல்லுங்கள்' என்ற விதியை ஏன் புறக்கணிக்கிறார்கள். அதுவும் விதிதானே..

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...