Thursday, January 2, 2014

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு!

குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்:

* குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பால் குறைவான மில்க்ஷேக், சப்பாத்தி, சாண்ட்விச், தானிய சுண்டல், முட்டை, பருப்புசாதம், கலவைசாதம், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

* நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாக குழந்தைகளுக்குக் காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள்.

கணினியில் இருந்து கண்களைக் காக்க

கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புத வழிகள்

ஒரு மனிதனின் சராசரி ரத்த அழுத்தமானது 120/80 என்ற இரண்டு அளவுகளில் கணக்கிடப்படுகின்றது. முதல் அளவானது அவரது இதயம் எந்த அளவிற்கு தமனிகளில் ரத்தததைத் செலுத்துகின்றது என்பதினையும், இரண்டாவது அளவு தொடரும் துடிப்புகளுக்கிடையே இதயமானது சீராக செயல்படுவதைக் கண்டறியவும் உதவுகின்றது.

இந்த அளவானது ஒருவருக்கு 140/90 என்ற அளவு வரை இருக்கலாம். அதனைவிட அதிகரிக்கும்போது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்றவை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் இத்தகைய நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும் வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளனர்.

Tuesday, December 24, 2013

பாகற்காய் மருத்துவ குணம்

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது உடலில் உள்ள ஒருவிதமான வளர்சிதை மாற்றக் கோளாறே ஆகும். எனவும் நீரிழிவை முழுமையாக குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அதிலும் பாகற்காயை நம்பி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை நிறுத்துவதும் கூடாது.

மருந்து மாத்திரைகளுடன் பாகற்காயையும் வேண்டுமானால்

குழந்தைகளை தாக்கும் பல் நோய்கள்

மனிதன் முக அழகில் மட்டும் அல்ல உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகிப்பது பற்கள். சிலருக்கு பற்கள் முன்பக்கமாக நீண்டும், வரிசையாக இல்லாமலும் இருக்கும். இதன் காரணமாக அவர்களது முக அழகு சிதைந்து விடும். இதனால் ஏராளமானோர் தன்னம்பிக்கை இழந்து வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள்.

பற்களின் அழகு சிதைந்து போவதற்கு குழந்தை பருவத்தில் அதை முறையாக கவனித்து பராமரிக்காதது தான் காரணம். குழந்தை பருவத்தில் இருந்தே பல் குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் குழந்தைகளை காண்பித்தால், பற்களின் ஆரோக்கியம், அழகு

Tuesday, December 17, 2013

குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்

குளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்குப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந் நாட்களில், உங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும்.

இந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும். ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த குளிர்காலம் அமைந்து விடுகிறது.

கடும் வெயிலையும் தாங்கி கொள்ளும் இந்த உடல் குளிர்காலத்தில் பாடாய்படுத்தி விடுகிறது. இனி வரும் இரண்டு மாத குளிரை சமாளித்து நோயற்ற வாழ்வை பெற நாம் முயற்சிக்க வேண்டும்.

Tuesday, December 10, 2013

சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் சிறந்த மருந்து

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் பற்றிய விபரங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி. எம்.ஆர்.) சேகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 6.2 கோடிப் பேர் (62 மில்லியன்) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகரங்களில் வாழ்வோரில் 11 சதவிகிதம் பேருக்கும், கிராமங்களில் வாழ்வோரில் 3 சதவிகிதம் பேருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. மொத்த செலவில் 2.1 சதவிகிதம் இந்நோய்க்கான மருத்துவத்துக்கு செலவிடப்படுகிறது.

காஸ்ட்லி டிஸீஸ் அதாவது, பணக்கார நோய் என்று குறிப்பிடுகின்றனர். இதற்கான மருந்து, மாத்திரைகளின் விலை, மிகவும் அதிகம். 2025-ம்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...