Tuesday, October 14, 2014

குடல் புண்களை ஆற்றும் வாழைப்பூ

வாழையின் மருத்துவப் பயன்கள்: ஒரு சாதாரண அளவுடைய வாழைப் பழத்தில் 95 கலோரி சத்தும் வைட்டமின் `சி' சத்தும் நிறைந்துள்ளது. இது உடலுக்கு உடனடியாகப் புத்துணர்வு தருவதோடு எளிதில் செரிமானமாகக் கூடியது. கொழுப்புச் சத்தோ உப்புச் சத்தோ இல்லாதது.

வாழைப்பூ உணவாகவும், மருந்தாகவும் பயன் தரக் கூடியது. வாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ் , புரோட்டீன் (புரதம்)கள் நிறைந்துள்ளது. பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும் (பிராங்க்கைடிஸ்) மலச்சிக்கலை (கான்டிபேஷன்) தணிக்கவும்,

குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாதவிலக்கு நேரத்தில் அடிவயிற்றையும் இடுப்பையும் கடுமையாக வலிக்கச் செய்து துன்பம் தருகின்ற (மென்ஃட்ருவல் கிராம்ப்) நோயைப் போக்க வல்லது. வாழைப்பூவினின்று எடுக்கப்படும் சத்தில் (எக்ஸ்ராக்ட்) உடலின் திசுக்களை அழிவிலிருந்து காப்பதும், நச்சுக்களைத் தடுப்பதும் ஆன உற்சாகப் பொருள் நிறைந்துள்ளது. (ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்).

வாழைப்பூவில் பேச்சிலஸ் செரியஸ் எக்னேசியா காலி, மலேரியாவைப் பரப்பும் ப்ளாஸ்மோடியம் பால்சிபாரம் ஆகிய நோய்க் கிருமிகளைத் தடுக்கும் வல்லமை உள்ளது என நவீன ஆய்வுகள் தெரியப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...