Tuesday, October 14, 2014

எலுமிச்சை புற்றுநோயை தடுக்கும்

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் ஏராளம், அவற்றில் சில:-

* எலுமிச்சை விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் ஸ்கர்வி என்னும் நோயைப் போக்க வல்லது. (விட்டமின் `சி' குறைவால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு ரத்தம் கசிகிற நிலையாகும். மேலும் இது ரத்த சோகையை உண்டு பண்ணுவதாகும். கணுக்கால் மற்றும் காலிலுள்ள தசைகளில் சற்று சிவந்த வீக்கத்தையும் தருகிற நோய்).

* வயிற்றிலுள்ள வாயுவைப் போக்கி சீரண உறுப்புகளை பலப்படுத்தக் கூடியதாகும்.

* வயிற்றுக் கோளாறுகள் அத்தனையும் எலுமிச்சையால் போகும்.

* ஒவ்வாமையால் வரும் நோய்களைத் தடுக்க கூடியது.
* தொற்று நோய்க் கிருமிகளை அழிக்க வல்லது.

* யுனானி மருத்துவர்கள் இதன் சர்பத்தை நீரிழிவுக்கு பரிந்துரை செய்வார்கள்.

* இருமல், கக்குவான், சளி, காய்ச்சல், பித்த சம்பந்தமான நோய்கள் எலுமிச்சையால் விலகும்.

* எலுமிச்சை சாற்றை மேல் பூச்சாகப் பூச தேமல் தொழு நோய் வெண்ம நிறத்தோல் ஆகியன குணமாகும்.

* எலுமிச்சையின் இலைகளும், காம்புகளும் தொற்று நோய்க் கிருமிகளைப் போக்க வல்லது.

* 100கிராம் எலுமிச்சம் பழச்சாற்றில் 4 முதல் 50மி.கி வரையிலான விட்டமின் சி சத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் "கரோட்டின்'' விட்டமின் `பி' சத்துக்களும் உள்ளன.

* எலுமிச்சையில் உள்ள "பைப்ளேவனாய்ட்'' என்னும் சத்து ரத்த நாளங்களின் உட்சுவர்ப் பகுதியை பலப்படுத்துகிறது. குறிப்பாக சிறைகள், தமனிகள் ஆகியவற்றை செம்மைப்படுத்துகிறது. இதனால் நரம்புச் சுற்று தவிர்க்கப்படுகிறது. மேலும் "ஆர்ட்டிரியோ செலிரோஸிஸ்'' என்னும் ரத்த நாளங்களின் அடைப்பையும் தடுத்து தடையற்ற குருதி ஓட்டத்தைத் தருகின்றது. மேலும் ஈரல் வயிறு, குடல் பகுதிகளில் ஏற்படும் நோய்த் தொற்றினைப் போக்க வல்லது.

* பழச்சாற்றுடன் போதிய தேன் கலந்து பருகி வந்தால் உற்சாகத்தை தருவதோடு உடலிலுள்ள அனைத்து தாதுக்களும் பலம் பெறுகின்றன.

* நகச் சுற்று என்னும் கொடும் நோய் குணமாக எலுமிச்சம் பழத்தை நகத்துக்கு செருகி வைப்பது பன்னெடுங்காலமாகப் பழக்கத்தில் உள்ளது.

* எலுமிச்சை சாறு பருகுவதால் மார்பகப் புற்று நோயை உண்டாக்கும் செல்கள் பரவுவது தடுக்கப்படுவதோடு, புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* சிறுநீரகக் கற்கள் உருவாவதை எலுமிச்சை தடுக்கிறது. அன்றாடம் எலுமிச்சை சாறு பருகுவதால் "யூரினரி சிட்ரேட்'' என்னும் தாதுப் பொருள் உற்பத்தியாகி சிறுநீரில் படிகங்கள் உருவாகி அவை பின்னர் சிறுநீரகக் கற்களாக மாறுவதைத் தடுக்கிறது.

* எலுமிச்சை சாற்றில் பொட்டாசியம் சத்து மிகுந்திருப்பதால் மானுடர்க்கு ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு வாந்தி, குமட்டல், மயக்கம் ஆகியவற்றைத் தணிக்க வல்லது.

* எலுமிச்சைசாறு நுண் கிருமிகளை விரட்ட வல்லது. பூஞ்சைக் காளானைப் போக்க வல்லது. துர்நாற்றத்தை நீக்கக் கூடியது.

* தொண்டைக்கட்டு ஏற்பட்ட போது அல்லது தொண்டையில் தொற்று நோய் கண்ட போது உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது வழக்கம். அதற்குப் பதிலாக எலுமிச்சை சாற்றை சிறிது நீரில் கலந்து வாய் கொப்பளிப்பதால் விரைவில் குணம் தெரியும்.

* எலுமிச்சை சாற்றை சிறிது நேரம் வாயில் அடக்கி வைப்பதால் பல்வலி போவதோடு ஈறுகளினின்று ரத்தம் கசிவது நிற்கும்.

100 கிராம் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ சத்துக்கள்:

100 கிராம் எலுமிச்சம் பழ ரசத்தில் 50 கிராம் நீர்சத்து, 1.0 கிராம் கொழுப்புச்சத்து, 1.4 கிராம் புரதச்சத்து , 11கிராம் மாவுச்சத்து , 0.8கிராம் தாதுப்பொருட்கள் , 1.2 கிராம் நார்ச்சத்து , 0.80 மி.கிராம் சுண்ணாம்புச்சத்து, 0.2மி.கிராம் பாஸ்பரஸ், 0.4மி.கி இரும்புச்சத்து, 12மி.கிராம் கரோட்டீன், 0.2 மி.கி தயாமின், 0.1 மி.கி நியாசின், 1.8 மி.கி விட்டமின் ஏ, 1.5மி.கி விட்டமின் பி, 63.0 மி.கி விட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...