Thursday, October 24, 2013

குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதிக்கும் டயப்பர்

குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்' அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.

சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி?

* டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள்.

* டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். * குறிப்பிட்ட நேரத்தில் டயப்பரை மாற்றவேண்டும். சிறுநீர், மலம் கழித்திருந்தால் அதிக நேரம் டயப்பரை மாற்றாமல் இருக்கக்கூடாது.

* சிலவகை டயப்பர்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதை கட்டியிருக்கும் சருமப் பகுதியில் சிவப்பு திட்டுக்கள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டை பயன்படுத்த வேண்டாம்.

* டயப்பர் இறுகக்கூடாது. இறுக்கமாக இருந்தால், குழந்தையை அது அவஸ்தைக்குள்ளாக்கும். கால், இடுப்பு பகுதியில் இறுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தென்பட்டால் அதைவிட சற்று பெரிய அளவிலான டயப்பரை பயன்படுத்துங்கள்.

* சருமத்தில் சிவப்பு திட்டுகள் தென்பட்டால் `ஸிங்க் ஆக்சைடு' கொண்ட ஆயின்மென்ட் பயன்படுத்தலாம். நாள் முழுக்க டயப்பர் பயன்படுத்தக்கூடாது. தினமும் சிறிது நேரமாவது சாதாரண ஆடையுடன் குழந்தையை வைத்திருங்கள்.

* வெளியே குழந்தையை தூக்கி செல்லும்போது காட்டன் துணியை மடக்கி, குழந்தைக்காக பயன்படுத்துவது நல்லது.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...