Sunday, May 5, 2013

லால்பேட்டை நகருக்கு வரலாற்று நிகழ்ச்சி வருகிறது….

அஸ்ஸலாமு அலைக்கு(வரஹ்).....

சரித்திரம் படைத்து,சன்மார்க்க கோட்டை என பெயரெடுத்து, ஊரின் விருந்தோம்பலை உலகுக்கு உணர்த்திய ஜாமிஆ மன்பவுல் அன்வார்.தரணி எங்கும் பரவி மார்க்கப் பணியாற்றும் மகத்துவம் மிக்க ஆலிம் பெருமக்களை உருவாகித் தருகின்ற மாபெரும் கல்வி நிறுவனத்தின் 150-வது ஆண்டு விழா இதோ நம்மை எதி நோக்கி வருகின்றது…

பிடி அரிசியும்,வெற்றிலை மகிமை பணமும் நமதூர் ஜாமிஆவின் புகழ் மனம் பரவ வித்திட்டதை எக்காலத்திலும் எவராலும் மறந்து விட முடியாது.பொருளாதாரத்தின் உச்சியில் இல்லாதிருந்த காலத்திலேயே மண்ணின் மைந்தர்கள் மனம் கமழும் மதரஸாவை, தங்களை அர்ப்பணித்து வளர்த்த பெருந்தகைகள் தான் நமது குடும்பத்தின் முன்னோர்களும்,மூதாதையர்களும்!இப்பெரும் பணியில் நம் மக்கள்

தங்களை ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவு தான் அல்லாஹ்வின் அருள் நிறைந்து நிம்மதியோடு வாரிசுகள் வளமுடன் வாழ்ந்து வருவதை பறைசாற்றுகிறது.அல்ஹம்துலில்லாஹ்!

ல்லாக் கல்வியும் காலத்திற்க்கேற்ப புதிய உருவாக்கத்தில் வந்தாலும், மார்க்கம் என்பது உலகம் அழியும் வரை ஒன்று தானே? அப்படியானால் அந்த மார்க்கத்தை அறிந்து கொள்ளும் கல்வியும் ஒன்றாகத் தானே இருக்க முடியும்?

என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோடு நெஞ்சுயர்த்தி நிற்கும் மதரஸாக்களுக்கு முன் வடிவம் தந்து எல்லா நிலையிலும் முன்மாதிரியாகத் திகழும் நமது ஜாமிஆமன்பவுல் அன்வாரின் மகிமையை இந்த வளர்ந்து விட்ட விஞ்ஞான உலகிற்கு நினைவூட்ட நமக்கு கிடைத்திருக்கும் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன் படுத்த ஜாமிஆவின் 150-வது ஆண்டு விழாவை பயன்படுத்த தக்க தருணம்.

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன் இன்று பெரும்பகுதி மக்கள் இருக்கும் நமது ஊர் மக்கள்,என்றைக்கும் மதரஸாவின் முன்னேற்றத்தை விரும்பக்கூடியவர்கள் தான் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை./ஊரின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் மதரஸாவின் மீதும் அதே அளவிற்கு அக்கறை இருக்கும் என்பது லால்பேட்டை மக்களுக்கு எழுதப்படாத விதி..

இந்த சத்திய வரிகளுக்கு உயிர் கொடுக்க இன்றைய ஜாமிஆவின் நிர்வாகம்என்ன செய்யப் போகிறது..? நூற்றாண்டு விழாவை குதூகலமாக நடத்திய நமது ஜாமிஆ 150-வது ஆண்டை நடத்த என்ன திட்டம் வகுத்துள்ளது என்பதையும் அரிய ஆவலாக இருப்பவர்கள் பலர்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...