Tuesday, November 27, 2012

"உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியரிடத்தில் சிறந்தவரே" (நபி மொழி ) !!!!


சகோதர்களே இதோ சில டிப்ஸ்
1).முதலில் மனைவி என்பவள் உங்களில் சிறந்த பாதி.(Better Half).ஆதலால்அவர்களது தேவைகளை முழு மனதுடன் பூர்த்தி செய்யுங்கள்.


2).வேலையை அலுவலகத்திலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு வாருங்கள்.

3).அவர்களது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

4).ஒவ்வரு நாளும் நடந்த விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது மனது விட்டு பேசுங்கள்.

5).அவர்களுடைய சிறிய சிறிய ஆசைகளை நிறைவேற்றுங்கள்.

6).உங்களுடைய எண்ணங்களை அல்லது முடிவுகளை அவர்களிடம் திணிக்க முயற்சி செய்யாதீர்கள்.

7).தயவுசெய்து உங்களுடன் எந்த பொருளையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் (அது முக்கியமா அல்லது நான் முக்கியமா என்று)

8).அவர்கள் கணவர்களாகிய உங்களின் மீது உள்ள நம்பிக்கையை தவிர வேறு எவரையும் நம்பமாட்டார்கள்.அது அவர்களுடைய எதிர்கால பயத்தினாலும் மேலும் அவர்களுடைய இயலாமையே தவிர வேறொன்றும் இல்லை.

9).அவர்களுடைய குடும்பத்தினரை பற்றி எப்பொழுதும் நீங்களோ அல்லது உங்களுடய குடும்பத்தினரோ குறை கூறாதீர்கள்.

வரதட்சணை:(கௌரவ பிச்சை / கண்ணை திறந்து இருக்கும் போதே திருடுதல்)


நீங்கள் ஒன்றும் இல்லாத நிலையிலும் உங்கள் பெற்றோர்களை உணவுக்காக பிச்சை எடுக்க விடுவீர்களா?


பிறகு ஏன் நல்ல வேலையும் போதுமான வசதியும் இருக்கும் போது உங்கள் பெற்றோர்களை பிட்சைக்காக பெண் வீட்டுக்கு அனுப்புகிறீர்கள் !!!!!


1).எளிமையான முறையில் திருமணம் செய்யுங்கள்.


2).கௌரவ பிச்சையை நீங்களும் எடுக்காதீர்கள் உங்கள் பெற்றோர்களையும் எடுக்க பெண் வீட்டுக்கு அனுப்பாதீர்கள்(சற்று நினைத்து பார்க்கவும்).

3).வரதட்சணையை மாப்பிள்ளையால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்.ஆதலால் அதை அவமானமாக கருதுங்கள்.

2).நீங்கள் முழுமையாக வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுங்கள்.நீங்கள் அதை எதிர்க்காமல் அமைதியாக இருந்தாலும் உங்கள் வீட்டார் வாங்கும்போது அதற்க்கு முழுமையாக உடன்பட்டவர்கள் ஆவீர்கள்.

3).வரதட்சணையை முற்றிலுமாக புறக்கணியுங்கள்.நீங்கள் அறியாத காலத்தில் வாங்கியிருந்தால் அதை திருப்பி கொடுக்க முயற்ச்சியுங்கள்.

4).நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ அதை உபயோகிகாதவாறு தடுத்து கொள்ளுங்கள்.

5).அவர்கள் உங்களுக்கு முழுமையாக சொந்தமாக இருப்பினும்,அவர்களுடைய பொருள்களின் மீது உரிமை கொண்டாடதீர்கள் அது பணமாகவோ அல்லது நகையாகவோ இருந்தாலும் சரியே.

7).வரதட்சணை பற்றி அதிகமாக அவர்களிடம் பேசுங்கள்.ஏனெனில் நாளை அவர்களும் அதை எதிர்பாக்காதவாறு செய்யுங்கள்.

6).நீங்கள் தெரிந்து கொண்டே அவர்களுக்கு மாறு செய்யாதீர்கள்.

இறுதியாக ,

பொருட்செல்வமும் பிள்ளைச் செலவமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46).

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...