Friday, November 16, 2012

தேனின் மருத்துவ குணங்கள்

மலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும்.

தேன் எவ்வாறு உருவாகிறது?


நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால்

உண்மை அதுவல்ல... மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு , தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை.

தேனிலுள்ள சத்துக்கள்:

200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு

Wednesday, November 14, 2012

சளித் தொல்லை பாடாய்ப் படுத்துகிறதா?

உங்கள் குடும்பத்திலோ தெரிந்தவர்களுக்கோ சளித்தொல்லையா? இக்கட்டுரையைப்படித்து தீர்வுக்கு வழி காணுங்கள். நோயைக் கொடுப்பவனும் அல்லாஹ், சுகப்படுத்துபவனும் அல்லாஹ். அதே சமயம் முயற்சி செய்வது நமது கடமை.
ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது.

முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.

Monday, November 12, 2012

இரவு நன்றாக தூங்க உதவும் உணவுகள்!

இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சி, நமக்கெல்லாம் நல்லா தெரிஞ்ச வாழைப்பழத்தை மலச்சிக்கல் இல்லாம இருக்குறதுக்காகத்தான் சாப்பிடனும்னு சொல்லி கொடுத்திருக்காங்க. ஆனா, இனிமே இரவு நல்லா உறங்கனும்னா நாம எல்லாரும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுறது நல்லதுன்னு சொல்றாங்க ஆய்வாளர்கள்!

ஏன்னா, இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நெறைய இருக்குதாமாம். அதுமட்டுமில்லாம, எல்-ட்ரிப்டோபான் (L-tryptophan) அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குதாம். இந்த எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5-HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிடும். அதன்பிறகு இந்த 5-HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

மெலடோனின் என்ன செய்யும்னுதான் உங்களுக்கு இப்போ நல்லாத்தெரியுமே! அதனால இனிமே தூங்க போறதுக்கு முன்னாடி மறக்காம ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க, சரியா?

சர்க்கரை நோயும் - நபிவழி மருத்துவமும்

"நாம் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்'' (அல்குர்ஆன் 26:80)
 
மேற்கண்டபடி நோய்க்கான நிவாரணத்தை தானே தருவதாக அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான்.
 
இதேபோல நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், எல்லா நோய்களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள்.

கடந்த 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் வளர்ச்சி கண்டு வரும் யுனானி மருத்துவம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இரவு நன்றாக தூங்க உதவும் உணவுகள்!

உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில நாம இன்னிக்கு பார்த்த, மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான். இல்லீங்களா?

ஆனா, கதகதப்பான பால் மட்டும் பழசுன்னு நெனக்கிறேன். ஆமாங்க, சின்ன வயசுலேர்ந்து “ஒரு டம்லர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்” அப்படீன்னு சொல்லிதான் நமக்கெல்லாம் அம்மா காய்ச்சின பாலை கொடுத்திருப்பாங்க, இல்லீங்களா?
 ஆனா, நம்ம அம்மாவுக்கு அந்த பால்ல இருக்குற எந்த வேதியல் மூலப்பொருள் காரணமா நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! இப்போ அம்மாவா இருக்குற உங்கள்ல பலருக்கு அந்த வாய்ப்பு நம்ம விஞ்ஞானிகள் மூலமா கிடைச்சிருக்கு.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...