Friday, November 16, 2012

தேனின் மருத்துவ குணங்கள்

மலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும்.

தேன் எவ்வாறு உருவாகிறது?


நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால்

உண்மை அதுவல்ல... மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு , தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை.

தேனிலுள்ள சத்துக்கள்:

200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான சத்துப்பொருள்கள் தேனில் உள்ளன. இதிலிருந்தே தேனின் மகத்துவத்தை நாம் அறியலாம். அதாவது ஒன்றரை கிலோ மாமிசம், மற்றும் ஒன்றே கால் லிட்டர் பால் அளவிற்கு 200 கிராம் தேனில் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இது ஆச்சர்யம் கலந்த உண்மை.

யார் யாரெல்லாம் பருகலாம்?

தேனை யார் யாரெல்லாம் பருகலாம் என்ற விதிமுறையெல்லாம் கிடையாது. சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய்வாய்ப்பட்டவர்களும் பருகலாம். பிணி தீர்க்கும் மருந்துதான் தேன். அந்தக் காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனைதான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தேனோடு மற்ற மருந்துகளை உண்ணக்கொடுப்பர்.

தேன் சாப்பிடுவதால் இரத்திலுள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) அதிகரிக்கிறது. குடல்புண்கள், ஜூரம், இருமல், இருதய நோய்கள்(Ulcer, fever, cough, heart disease) போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம், சீதிபேதி (Indigestion, DYSENTARY) போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

வயிற்றைச் சுத்தப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. இதிலுள்ள பொட்டாஷியம் மூட்டு வலையைப் போக்குகிறது.

வயதான பெரியவர்கள் அளவுடன் தேனை சாப்பிட்டு வர நீண்ட காலம் உடல்நலக் கோளாறில்லாமல் வாழ முடியும். குழந்தைகளுக்கு தேனை இரண்டு டீஸ்பூன் அளவுக்கு உணவில் கலந்து கொடுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று உபாதைகள் (Constipation, stomach problems) அனைத்தும் நீங்கிவிடும்.

தூக்கத்தைத் தூண்டும் தேன்:


குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டீஸ்பூன் அளவு தேனைக் கொடுத்தால், அதுவே தூக்கத்தை தூண்டும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தேன் தேனீக்கு மட்டுமல்ல.. மனிதனுக்கும் சிறந்த உணவாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல், இரைப்பை (Heart, lung, gastric) ஆகிய உறுப்புகளை வலுப்படுத்தும். அதோடு இரத்த நாளங்களிலும், குடலிலும்(Blood vessel, bowel ) சேருகின்ற அழுக்குகளை அகற்றி கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

தேன் சிறுநீர் அடைப்பை (Urinary obstruction ) நீக்கும்
தேன் மலச்சிக்கலை(Constipation) குணப்படுத்தும்
கபத்தால் (Phlegm ) ஏற்படும் இருமல் போன்ற நோய்களுக்கு தேன் ஒரு சிறந்த நிவாரணி.

இளம்சூடான பாலில் சிறிதளவு தேன்கலந்து பருகினால் உறக்கம் உங்களைத் தழுவும்.
பெரும்பாலான மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கிய மருந்துப்பொருளாக சேர்க்கப்பட்டிருக்கும்.
தேனைப் பற்றிய ஒரு சில பயன்மிக்க தகவல்கள்:

தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.
மாதுளம் பழச்சாறுடன் (Pomegranate fruit) தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உருவாகும்.

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
இஞ்சியுடன் (Ginger) தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.
ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
ரோஜாப்பூ குல்கந்தில் (Smooth rose) தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தனியும்.

நெல்லிக்காயுடன் (Indiangosseberry) தேன் கலந்து சாப்பிட ‘இன்சுலின்’ சுரக்கும்.

கேரட்டுடன் தேன்(Honey) கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.
இவ்வளவு பயனை அளிக்கும் தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் பற்றிய ஒரு சில தகவல்களையும் தெரிந்துகொள்வோமே..!

தேனீக்கள் பற்றிய சிறப்புத் தகவல்கள்:

மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது தேனீக்கள்.

புயல் (Storm) வருவதை முன்கூட்டியே உணரும் சக்தி தேனீக்கு உண்டு.
தேன் எடுக்கப் போகாத தேனீ ஆண் தேனீ.
ஒரு கிலோ தேனுக்கு ஆறு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் பூக்களை தேனீக்கள் சந்திக்கின்றன.

தேனீக்களின் எச்சமே (Residue of the bees) நாம் சுவைக்கும் தேன்.
ஒரு தடவை கொட்டியவுடன் தேனீ தனது கொடுக்கை இழந்துவிடும்.
தேனீ ஒரு சைவ உண்ணி
ஐந்து கண்களைக் கொண்டது தேனீ. எனவே தேனீயின் பார்வை மிக கூர்மையாக இருக்கும்.

தேனீக்களுக்கு இரைப்பைகள் இரண்டு.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான தேனீக்கள் உண்டு.
தேனீக்கள் வாழும் கூடுகள் அதனுடைய தேன்மெழுகினால் ஆனவையே.
தேனீக்கள் மூன்று வகைப்படும். (ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ, இராணித் தேனீ)

ஏராளமான நுண்ணறைகள் கொண்டது தேன்கூடு. மூன்று வகை தேனீக்களும் தனித்தனி அறைகளிலேயே வாழும்.

இன்றைய அறிவியல் உலகம் கண்டறிந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது....

நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக்குர்ஆன் 16:69)

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...