Monday, November 12, 2012

இரவு நன்றாக தூங்க உதவும் உணவுகள்!

உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில நாம இன்னிக்கு பார்த்த, மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான். இல்லீங்களா?

ஆனா, கதகதப்பான பால் மட்டும் பழசுன்னு நெனக்கிறேன். ஆமாங்க, சின்ன வயசுலேர்ந்து “ஒரு டம்லர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்” அப்படீன்னு சொல்லிதான் நமக்கெல்லாம் அம்மா காய்ச்சின பாலை கொடுத்திருப்பாங்க, இல்லீங்களா?
 ஆனா, நம்ம அம்மாவுக்கு அந்த பால்ல இருக்குற எந்த வேதியல் மூலப்பொருள் காரணமா நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! இப்போ அம்மாவா இருக்குற உங்கள்ல பலருக்கு அந்த வாய்ப்பு நம்ம விஞ்ஞானிகள் மூலமா கிடைச்சிருக்கு. ஆமாங்க, வாழைப்பழத்துல இருக்குற எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறதாம். அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்குதாம். அதுமட்டுமில்லாம, பாலில் அதிக கால்சியம் இருப்பது உங்களில் பலருக்கு தெரியும்னு நெனக்கிறேன். இந்த கால்சியமும் உறக்கத்தை தூண்டும் அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்!

ஆக, உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகள சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, சரிங்களா? ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகள சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்!


என்னங்க, திடீர்னு எல்லாரும் காணாமப் போய்ட்டீங்க?


ஓ……செர்ரி பழங்கள்ல ஆரம்பிச்சி பால் வரைக்கும் வீட்ல இருக்குதான்னு தேட ஆரம்பிச்சிட்டீங்களா? சரி சரி, இதையெல்லாம் சாப்பிட்டு நல்ல உறங்கி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்குங்க……!

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...