Sunday, September 11, 2022
உங்கள் சிந்தனைக்கு
இறைவனின் படைப்பில் அதிசயிக்கத்தக்க ஒரு படைப்புதான் மனித மூளையாகும். மிருகங்களுக்கும் மூளை இருக்கின்றன ஆனால் அவற்றினால் இவ்வுலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. மனிதனது மூளை மட்டுமே தொடர்ந்தும் காலத்தைக் கடைந்து கச்சிதப்படுத்திக் கொண்டிருக்கின்றது!
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்டது
கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?
புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட
நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நறை போட
இறத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட
இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது!
Wednesday, August 31, 2022
மனிதப்படைப்பின் நோக்கம்
மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மட்டும் ஏன் தான் இந்த மனித இனம் சிந்திக்காமல் இருக்கின்றதோ நமக்குத் தெரியவில்லை!
இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், ஏதாவது ஒரு பொருள் உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் நிறைவேறாத போது அது ஓரங்கட்டப்படுவதையும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். எனவே நிச்சயமாக மனிதப்படைப்பிற்க்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கத்தான் வேண்டும் என்பதனை உலக நடப்புக்களே நமக்கு உணர்த்துகின்றன.
சுகமான சுமைகள்!
கடமை மறந்த மானிடா!
உன் - மடமையை ஒரு முறை அசைபோட்டுப் பார்
அடித்தளத்தை இடித்துவிட்டா
அடுக்கு மாடி கட்டப்பார்க்கிறாய்?!
சரிந்து கொண்டிருக்கிறது உன் எதிர்காலம்!
அதை சரிக்கட்டினால் உனக்குப் பொற்காலம்
வாழ்வதும் வீழ்வதும் உன் முடிவிலே..
முடிவெடு, இன்றே இனியதோர் விடைகொடு!
உன் வாழ்க்கையைச் செதுக்கிச் செப்பனிடு
ஊன், வினையற்று உருமாறு.
ஊருலகம் உனக்கு ஊன்று கோலன்று..
உண்மையே உனை உறுதியாக்கும்!
டீவியும், டிஷ் வாழ்க்கையும்
நீ உறவாடும் புதிய உறவுகள்!
உன் நிஜ உறவுகளை அவை சிதைக்காமலிருக்கட்டும்!
அதை சரிக்கட்டினால் உனக்குப் பொற்காலம்
வாழ்வதும் வீழ்வதும் உன் முடிவிலே..
முடிவெடு, இன்றே இனியதோர் விடைகொடு!
உன் வாழ்க்கையைச் செதுக்கிச் செப்பனிடு
ஊன், வினையற்று உருமாறு.
ஊருலகம் உனக்கு ஊன்று கோலன்று..
உண்மையே உனை உறுதியாக்கும்!
டீவியும், டிஷ் வாழ்க்கையும்
நீ உறவாடும் புதிய உறவுகள்!
உன் நிஜ உறவுகளை அவை சிதைக்காமலிருக்கட்டும்!
Monday, August 22, 2022
ஹலாலான உழைப்பின் சிறப்பு
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.
தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)
உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும்,
கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம்
நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரியவராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
Tuesday, August 9, 2022
உலர் திராட்சைகள் ஊக்கமளிக்கும்
உலர் திராட்சைகள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்க உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவை உடல் வலிமை. அதிலும் குறிப்பாக தொலை தூர ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம். இப்படியான தாக்குப்பிடிக்கத் தக்க உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் செய்யும் விடயம்.
Subscribe to:
Posts (Atom)
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...
பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...
-
தினம் ஒரு கப் கேரட் ஜூஸ் போதும். மருத்துவரை மறந்து விடலாம். உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத...
-
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு பரவியது . மிளகு ஒரு ...
-
சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு த...
-
கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். மு...
-
சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல்...
-
இன்றைய சூழ்நிலையில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் புதிய தகவலாக ‘பப்பாளி இலைச்சாறு கொடுத்தால் தட்ட...


.jpg)



.jpg)