Sunday, September 4, 2016

பாகற்காய் மலச்சிக்கலை தீர்க்கும்

மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் மற்றும் ரத்தைபோக்கை கட்டுப்படுத்தக் கூடியதும், மலச்சிக்கலை தீர்க்கவல்லதும், வயிற்று புழுக்களை வெளியேற்ற கூடியதும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக  விளங்குவதுமான பாகற்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். 
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பாகற்காய் மிகுந்த கசப்பு சுவை உடையது. கசப்பாக இருந்தாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது. பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நார்ச்சத்து கிடைக்கிறது. மலச்சிக்கலை

துளசி காய்ச்சலை குணப்படுத்தும்

காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன. தொண்டைக்கட்டு, உடல் வலி, பசியின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம். கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, மிளகுப்பொடி, பனங்கற்கண்டு. கீழாநெல்லியின் இலை, தண்டு, காய் உள்ளிட்டவற்றை ஒருபிடி அளவுக்கு

தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்

தலைமுடி அழகுக்கு அடையாளமாக விளங்குகிறது. இளமையில் ஏற்படும் வழுக்கை, இளநரையால் மன உளைச்சல் ஏற்படுகிறது. பொடுகு, முடிகொட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை போக்குவது, முடி கருமையாக வளர்வதற்கான தைலம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.     
சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி முடிகொட்டுவதை தடுக்கும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம், நல்லெண்ணெய், ஜடாமாஞ்சில். ஒரு

உடல் பருமனை குறைக்கும் கொள்ளு

உடல் பருமனால் பல்வேறு தொல்லைகள் வருகிறது. மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்றவை ஏற்படும். உடல் உழைப்பு இல்லாதது, அதிக கவலையால் உடல் பருமன் ஏற்படும். இது, சங்கடமான நிலையை ஏற்படுத்தும். உள் உறுப்புகள் விரைவில் சோர்ந்து போகும். உடல் பருமனை தடுப்பது அவசியம். உடல் வியர்க்கும்படி 30 நிமிடங்களாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது அவசியம். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், உடல் பருமனை குறைப்பது குறித்து பார்க்கலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கான கஞ்சி தயாரிக்கலாம். 

உயிரணு குறைபாடுகளை போக்கும் முருங்கை

ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவதால் குழந்தை இல்லாமல் போகிறது. இப்பிரச்னையை சரிசெய்வது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். முருங்கை பூவை பயன்படுத்தி உயிரணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், முருங்கை பூ, பால், பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விடவும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூ சேர்த்து வதக்கவும். பால் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

Friday, September 2, 2016

எந்தெந்த பழங்களில் அதிகளவு இரசாயனம் கலந்துள்ளது

இன்று நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கள் மற்றும் பழங்களில் பல இராசயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. நாம் இன்றைக்கு உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்கள் எந்த அளவு பாதகம் விளைவிப்பதாக உள்ளன என்பதை கீழே பார்க்கலாம்.

“திராட்சைக் கொத்துகள் ரசாயன உரங்களில் முக்கி எடுக்கப்படுவதால் தான் திராட்சை மீது வெள்ளைப் படிமம் இருக்கிறது. இது உடல்நலத்துக்கு கேடானது. திராட்சை மட்டுமல்ல... இன்றைய சூழலில் நாம் சாப்பிடுகிற அத்தனை உணவுப் பொருட்களுமே விஷம்தான்’’. 

வாழை :

ஏழைகளின் நண்பன் என்று சொல்லும வாழைப்பழங்களை விரும்பிச் சாப்பிடுகிறோம். எத்திலின் வாயுதான் வாழையை இயல்பாகப் பழுக்க வைக்கிறது. அடைக்கப்பட்ட ஒரு அறைக்குள் வாழைப் பழங்களை வைத்து, அதனுள் எத்திலினை செயற்கையாகத் திணிக்கிறார்கள்.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் ஜவ்வரிசி

ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்

ஜவ்வரிசி என்றாலே நாம் சாப்பிடக் கூடிய பாயாசம் நம் மனக் கண்களுக்கு முன் சட்டென்று வந்து போகும். ‘சாகோ பாம்’ என்ற ஒரு வகைப் பனைமரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது.

கார்போஹைட்ரேட் எனும் சத்து அதிகமுள்ள ஜவ்வரிசி ஒரு ஆரோக்கியமான உணவாகும். பாயாசம் தவிர, கேக், உப்புமா மற்றும் சூப்புகளிலும் ஜவ்வரிசி பயன்படுத்தப்படுகிறது.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...