Sunday, September 4, 2016

உடல் பருமனை குறைக்கும் கொள்ளு

உடல் பருமனால் பல்வேறு தொல்லைகள் வருகிறது. மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்றவை ஏற்படும். உடல் உழைப்பு இல்லாதது, அதிக கவலையால் உடல் பருமன் ஏற்படும். இது, சங்கடமான நிலையை ஏற்படுத்தும். உள் உறுப்புகள் விரைவில் சோர்ந்து போகும். உடல் பருமனை தடுப்பது அவசியம். உடல் வியர்க்கும்படி 30 நிமிடங்களாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது அவசியம். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், உடல் பருமனை குறைப்பது குறித்து பார்க்கலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கான கஞ்சி தயாரிக்கலாம். 
கொள்ளுவை லேசாக வறுத்து பொடி செய்ய வேண்டும். புழுங்கல் அரிசியை உடைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் புழுங்கல் அரிசி சம அளவு கொள்ளுப்பொடி எடுக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு தட்டிபோடவும். நீர்விட்டு கஞ்சிப் பதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும். கொழுப்பு சத்தை கரைக்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு. ஊட்டச்சத்து மிக்கது. கொள்ளு, கொடம்புளி ஆகியவை தலா 15 கிராம் எடுத்து கொதிக்க வைத்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும். 

கொள்ளுவை பயன்படுத்தி சூரணம் தயாரிக்கலாம். கொள்ளுபொடி, சீரகப் பொடி, சுக்குப் பொடி, நன்னாரி பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சூரணமாக சாப்பிடலாம் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இதனால் உடல் எடை குறையும். மாதவிலக்கு கோளாறு இருப்பவர்களுக்கு அதிக எடை கூடும். கொள்ளு மாதவிலக்கை தூண்டக்கூடிய தன்மை கொண்டது. நன்னாரி உஷ்ணத்தை ஏற்படுத்தி கொழுப்பை கரைக்கும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. காய்கறிகளை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் தேனீர் தயாரிக்கலாம். 

ஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு தட்டிப்போடவும். ஒரு ஸ்பூன் முள்ளங்கி பசை, ஒரு ஸ்பூன் கத்திரிக்காய் பசை, மிளகுப்பொடி, சிறிது மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிக்கும்போது உடல் நன்றாக வியர்க்கும். தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். கத்திரிக்காய் அற்புதமான உணவாக விளங்குகிறது. இதில் கந்தக சத்து, விட்டமின் சி உள்ளிட்டவை உள்ளது. முள்ளங்கி பல்வேறு சத்துக்களை கொண்டது. உடலில் படிந்திருக்கும் கொழுப்பை குறைகிறது.  

தக்காளியை பயன்படுத்தி முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தக்காளியில்  சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இது, அற்புதமான மருந்தாகிறது. தக்காளியின் மேல்தோலை மட்டும் எடுத்து சுருக்கம் உள்ள இடத்தில் போட்டுவைப்பதாலோ, கூழாக்கி பூசுவதாலோ முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...