Saturday, December 20, 2014

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை பழம்

பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரிச்சை. தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். அன்றாடம் பேரிச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது.

100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும். மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.

வைட்டமின் சி அதிகம் உள்ள பச்சைப்பட்டாணி

பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய phytonutrients, தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகியவை அடங்கியுள்ளன. பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பட்டாணியில் கலோரிகள் குறைவு.

100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லை. புரதம் நிறைந்தது. கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது. பட்டாணியில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அவசியம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரைகள்

மனிதனின் உணவுப்பழக்கம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. அன்றாடம் சாப்பிடும் உணவு சத்தானதா, உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடியதா அல்லது கெடுதல் தரக்கூடியதா? என்று ஆராய்ந்து சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு.

வயிற்றுப்பசியை போக்க ஏதோ ஒன்று சாப்பிட கிடைத்தால் போதும். அந்த நேரத்தில் சாப்பிட்டுவிட்டு பின்பு அதை மறந்து விடுவோம். உடலுக்கு சரிவிகிதத்தில் சத்துகள் கிடைக்கவில்லை என்றால் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பரபரப்பான உலகத்தில் சத்தான உணவுகளைத் தேடி எந்த நேரமும் அலைய வாய்ப்பில்லை.

இதயத்தை வலிமையாக்கும் வாழை

`
இயற்கை குளுக்கோஸ்' என்று கொண்டாடப்படும் வாழைப்பழம் நமக்கு வைட்டமின்-ஏ, ஈ போன்றச் சத்துக்களைத் தருகிறது.

* இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெறும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும், மூட்டு வலி, வாத நோய் இருப்பவர்கள் பச்சை வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

* தினமும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடல் நிலை சரியில்லாமல் போய் மெள்ள மெள்ள மீண்டும் வருபவர்கள்

உடல் அதிக சூடாவது ஏன்?

உடம்பு ரொம்ப சூடாகுது என்பது அநேகரால் சொல்லப்படும் ஒரு பாதிப்பு. இதற்கான பொதுவான காரணங்கள்...

* இறுக்கமான ஆடை
* ஜுரம்
* தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்தல்
* கடும் உழைப்பு
* மருத்துவ காரணங்கள்
* சில மருந்துகள்
* நரம்புக் கோளாறுகள்

அதிக வெய்யில் உடலின் உஷ்ணம் குறைய வழிமுறைகள்

* இளநீர் குடிக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை குறைக்கும் கத்திரிக்காய்

கத்திரிக்காய் இல்லாமல் தென்னாட்டு சமையலே இருக்காது என்னும் வகையில் சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்திரிக்காயின் மருத்துவ குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.

கத்திரிக்காய் வலியைப் போக்கும் தன்மையுடையது, காய்ச்சலைப் போக்கக் கூடியது, சோர்வைப் போக்கக் கூடியது, வீக்கத்தைத் தணிக்கக் கூடியது, கொழுப்பைக் குறைக்கக் கூடியது, ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது, ரத்த வட்ட அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது, கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...