Saturday, December 20, 2014

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரைகள்

மனிதனின் உணவுப்பழக்கம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. அன்றாடம் சாப்பிடும் உணவு சத்தானதா, உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடியதா அல்லது கெடுதல் தரக்கூடியதா? என்று ஆராய்ந்து சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு.

வயிற்றுப்பசியை போக்க ஏதோ ஒன்று சாப்பிட கிடைத்தால் போதும். அந்த நேரத்தில் சாப்பிட்டுவிட்டு பின்பு அதை மறந்து விடுவோம். உடலுக்கு சரிவிகிதத்தில் சத்துகள் கிடைக்கவில்லை என்றால் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பரபரப்பான உலகத்தில் சத்தான உணவுகளைத் தேடி எந்த நேரமும் அலைய வாய்ப்பில்லை. ஆனால், கீரைகளில் இல்லாத சத்துக்களே கிடையாது என்று கூறலாம். நாள்தோறும் குறைந்த அளவிலாவது ஏதாவது ஒரு கீரை உணவை எடுத்துக் கொண்டால், உடலுக்கு ஆரோக்கியம் பெருகும்.

அரிசி சாதத்தைப் போன்று, கீரை உணவையே சாப்பிட வேண்டிய நிலை இனி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு கீரைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டு இருக்கிறது. கீரையை குழம்பாகவோ, கூட்டாகவே அல்லது சூப்பாக செய்தும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...