Wednesday, January 8, 2014

கோபத்தைக் கட்டுப்படுத்தும் இனிப்பு பானம்!

இனிப்பான பானங்களை அருந்துவது குறித்துப் பொதுவாக இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலருக்கு எப்போதும் 'ஜில்'லென்று இனிப்பான பானங்களை அருந்துவது பிடிக்கும். சிலரோ- குறிப்பாக சற்று வயதானோர்- இனிப்பான பானத்தை நீட்டினாலே விலகி ஓடுவர்.

ஆனால் இனிப்பான பானங்களைப் பற்றிய ஓர் இனிய தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். அதாவது, இனிப்பான பானங்களைக் குடிப்பதால் கோபம் கட்டுப்படுமாம். தங்கள் ஆராய்ச்சியில் இவ்வாறு கண்டுபிடித்துள்ளதாக உளவியல் ஆய்வு இதழ் ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குளிர்காலங்களில் உடலை வெப்பமாக வைக்கும் உணவுகள்

முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.
குளிர்காலம் வந்தாலே நம்மை பல தொற்றுநோய்கள் தாக்க தொடங்கி விடும். அதனால், நாம் இந்த குளிர் காலங்களில் நாம் உட் கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

இதன் மூலம், குளிர் காலங்களில் ஏற்படும் ஜல தோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். குளிர்காலம் வரத் தொடங்கி விட்டதால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய தருணம் இது தான். உங்கள் அலமாரிகளில் இருந்து கம்பளிகளையும், ஸ்வெட்டர்களையும் எடுத்து தயாராக வைத்திருங்கள்.

'பால் பற்களை' பாதுகாக்கணும்

குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் 'பால் பற்கள்' எனப்படும் தற்காலிக பற்கள் வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும்.

Thursday, January 2, 2014

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு!

குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்:

* குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பால் குறைவான மில்க்ஷேக், சப்பாத்தி, சாண்ட்விச், தானிய சுண்டல், முட்டை, பருப்புசாதம், கலவைசாதம், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

* நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாக குழந்தைகளுக்குக் காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள்.

கணினியில் இருந்து கண்களைக் காக்க

கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புத வழிகள்

ஒரு மனிதனின் சராசரி ரத்த அழுத்தமானது 120/80 என்ற இரண்டு அளவுகளில் கணக்கிடப்படுகின்றது. முதல் அளவானது அவரது இதயம் எந்த அளவிற்கு தமனிகளில் ரத்தததைத் செலுத்துகின்றது என்பதினையும், இரண்டாவது அளவு தொடரும் துடிப்புகளுக்கிடையே இதயமானது சீராக செயல்படுவதைக் கண்டறியவும் உதவுகின்றது.

இந்த அளவானது ஒருவருக்கு 140/90 என்ற அளவு வரை இருக்கலாம். அதனைவிட அதிகரிக்கும்போது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்றவை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் இத்தகைய நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும் வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளனர்.

Tuesday, December 24, 2013

பாகற்காய் மருத்துவ குணம்

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது உடலில் உள்ள ஒருவிதமான வளர்சிதை மாற்றக் கோளாறே ஆகும். எனவும் நீரிழிவை முழுமையாக குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அதிலும் பாகற்காயை நம்பி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை நிறுத்துவதும் கூடாது.

மருந்து மாத்திரைகளுடன் பாகற்காயையும் வேண்டுமானால்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...