Friday, September 20, 2013

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

உடல் எடையை குறைக்கும் இந்திய உணவு பொருட்கள்

உலகில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனானது ஏற்படுவதற்கு அதிகப்படியான கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால், கொழுப்புக்களானது உடலில் ஆங்காங்கே தங்கி, உடல் எடையை அதிகரித்து விடுகிறது.

மேலும் தற்போதைய வாழ்க்கை முறையில் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறது. கடைகளில் விற்கப்படும் எந்த ஒரு உணவையும் ஆரோக்கியம் என்று கருதி சாப்பிட முடியாது. அதுமட்டு மல்லாமல், கடைகளில் கொழுப்பில்லாத உணவுகள் என்று குறிப்பிட்டு விற்கப்படும் உணவுகளில் தான் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது.

எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், உண வுகளில் கவனமாக இருப்ப வராக இருந்தால், இந்திய உணவுப்பொருட்கள் என்று

ஆரோக்கியமான வழியில் சமைத்து சாப்பிடுவது எப்படி?

இன்றைய சூழலில் நம் ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது பெரிய விஷயமாகிவிட்டது. வேகமாக செல்லும் மக்கள் இப்போது நம்பியிருப்பது ஃபாஸ்ட் ஃபுட்டை தான். பின் எப்படி ஆரோக்கியம் நிலைக்கும்ப சரி, ஆரோக்கியத்தை காக்க வேண்டுமா? இந்த வருட இறுதிக்குள் உடல் எடை குறைய வேண்டுமா?

அல்லது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா அதற்காக ஒன்றும் கடுமை வாய்ந்த உணவுப் பழக்கத்தை கடை பிடித்து ஐஸ்க்ரீம், கேக் போன்ற டெசர்ட்களை தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

அதற்கு பதிலாக அன்றாடம் உண்ணும் உணவுகளில் சிறு மாற்றங்களும், சமைக்கும் முறையில் சிறிய மாற்றங்களையும் கொண்டு வந்தால் போதுமானது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, கலோரிகளை குறைத்து

Wednesday, September 18, 2013

ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள்

உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும்.

இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.

அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும். எனவே தான், கடைகளில்

Friday, September 13, 2013

இளமை தோற்றத்தை தக்கவைக்கும் 14 உணவுகள்

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உணவிலிருந்து. உடுத்தும் உடையிலிருந்து கவனமாக இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதால், முதுமைத் தோற்றத்தைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது என்பது தேவையான ஒன்று. அன்றாடம் நாம் உழைத்து சேமிப்பது அனைத்தும் வயிற்றுக்கு தான். எனவே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள் வது மிகவும் அவசியம்.

இதயத்தை வலுவாக்கும் கம்பு

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர்.

காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர்.

நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும்.

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள்

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...