Tuesday, April 21, 2015

உயிரை குடிக்கும் சிகரெட் உயிரை குடிக்கும் சிகரெட்

ஒரு 'தம்' போட்டாத்தான் வேலை ஓடும். ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... இதோ வந்து விடுகிறேன் என்று பெரிய பெரிய அதிகாரிகள் வரை அவ்வப்போது எழுந்து சென்று வருவதை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். சிகரெட்டை பற்ற வைத்து... இழுத்து.... வாய்க்குள் சூழும் புகையை சுருள் சுருளாய் வெளியே ஊதி விடும்போது அதென்னவோ இதயமே இலகுவாகி விட்டது போன்ற ஒரு மிரமை ஏற்படுகிறது.

மெத்த படித்தவர்களை கூட மொத்தமாய் கட்டி போட்டு இருக்கும் மோக பேய்கள்தான் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள்.

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் புதிய தகவல்

மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப்–2 நீரிழிவு நோய்

பழுப்பு அரிசியே ஆரோக்கியத்திற்கு நல்லது

வெள்ளையனை மட்டுமல்ல வெள்ளை அரிசியையும் வேண்டாம் எனச் சொன்னவர் மகாத்மா காந்தி. ‘பழுப்பரிசியே நல்லது‘ என 70 வருடங்களுக்கு முன்பே அவர் வலியுறுத்தினார். உணவுப்பற்றாக்குறை குறித்த பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்த காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் ஆலையில் அரைத்த, குருணை அற்ற, வெளுத்த அரிசியை மட்டும் விநியோகிக்கச் சொல்கின்றர்.

ஏறத்தாழ 10 சதவிகிதம் அரிசி வீணாகிறது என்று நெல் விவசாயிகள் வருந்திச் சொல்கின்றனர். எனவே பழுப்பு கைக்குத்தல் அரிசிதான் நல்லது. அதைச் சாப்பிடுங்கள் என்று கூறினார். பழுப்பரிசி எனும் பிரவுன்

இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்

• தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலம் (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தினமும் 2 முதல் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது.

• காபி : காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கு அன்றைய பொழுதே தொடங்காது. காபியில் உள்ள ‘கேஃபஸ்டால்’ (Cafestol), கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய

சர்க்கரை நோயாளிகளின் உன்னதமான உணவு வெள்ளரிக்காய்

வெள்ளரியில் அதிக அளவிலான விட்டமின் கே சத்து அடங்கியிருக்கின்றது. இது எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவுகின்றது. விட்டமின் கே அல்ஸைமர் என்னும் மறதி நோய் வராத வண்ணம் மூளை நரம்புகளுக்கு ஊட்டசத்தாகவும் விளங்குகின்றது.

* 100 கிராம் வெள்ளரியில் 96 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து அடங்கியுள்ளது. சாதாரண நீரை விட பல்வேறு ஊட்டசத்துக்களை இது உள்ளடக்கி இருப்பதால் கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தையும், வியர்வையால் ஏற்படும் சோர்வையும், வெயிலின் கொடுந்தாக்கத்தால் ஏற்படும் மூளை வறட்சி அதனால் உண்டாகும் மயக்க நிலை இவற்றினின்று விடுதலை தரும் வகையில் விரட்டியடிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறது.

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

* வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது.

* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள்

உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ...

மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...