Tuesday, April 21, 2015

சர்க்கரை நோயாளிகளின் உன்னதமான உணவு வெள்ளரிக்காய்

வெள்ளரியில் அதிக அளவிலான விட்டமின் கே சத்து அடங்கியிருக்கின்றது. இது எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவுகின்றது. விட்டமின் கே அல்ஸைமர் என்னும் மறதி நோய் வராத வண்ணம் மூளை நரம்புகளுக்கு ஊட்டசத்தாகவும் விளங்குகின்றது.

* 100 கிராம் வெள்ளரியில் 96 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து அடங்கியுள்ளது. சாதாரண நீரை விட பல்வேறு ஊட்டசத்துக்களை இது உள்ளடக்கி இருப்பதால் கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தையும், வியர்வையால் ஏற்படும் சோர்வையும், வெயிலின் கொடுந்தாக்கத்தால் ஏற்படும் மூளை வறட்சி அதனால் உண்டாகும் மயக்க நிலை இவற்றினின்று விடுதலை தரும் வகையில் விரட்டியடிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. வயதானவர்களின் மூளை நரம்புகளில் சிதைவு ஏற்பட்டு மறதி நிலை வராத வண்ணம்

* வெள்ளரிச் சாற்றில் அதிக அளவு “பொட்டாசியம்” மற்றும் “மெக்னீஷியம்”, சிறிதளவே ஆன “சோடியம்” அடங்கியுள்ளது. பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம் ஆகிய இம்மூன்றும் ஒருசேர நமக்குக் கிடைக்கின்ற போது நமது ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தக் கூடியதாக அமைகின்றது. வெள்ளரியை தாராளமாகப் பயன்படுத்தும் போது ரத்த அழுத்தம் குறைந்த நிலையிலும் ரத்த அழுத்தம் மிகுந்த நிலையிலும் அதைச் சமப்படுத்தும் உன்னத மருந்தாக நமக்குப் பயன்தருகின்றது.

* வெள்ளரிச் சாற்றில் இயற்கையிலேயே “ஆல்கலைன்” என்று குறிக்கப் பெறும் சுண்ணாம்புச்சத்து மிகுந்துள்ளது. அதில் வழவழப்புத் தன்மை தரும் பல்வேறு தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இது அமிலத்துக்கு எதிராக செயல்பட்டு அமிலத் தன்மையின் செயல்திறனை மட்டுப் படுத்தி அதை நீர்மைப்படுத்த உதவுகிறது. இதனால் அமிலச் சுரப்பின் காரணமாகவும், அமிலத் தேக்கத்தின் காரணமாகவும் ஏற்படும் குடற்புண்கள் வராத வண்ணம் பாதுகாக்கப்படுகின்றது.

* வெள்ளரியில் “சிலிகான்” மற்றும் “கந்தகச் சத்துக்களும்” மிகுந்துள்ளன. இவை தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகின்ற சத்துப் பொருள்கள் ஆகும். கருமையான, செழுமையான, மென்மையான தலைமுடி வளர்ச்சிக்கு மேற்கூறிய “சிலிகான்” மற்றும் “கந்தகச்” சத்துக்கள் தூண்டுதலாக அமைகின்றன. உள்ளுக்கு சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் இப்பலன் நம்மைச் சேருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

* வெள்ளரி கணையத்தைச் சரிவர செயல்படுத்துவதற்கும் பயன்தருகின்றது. கணையம் போதிய “இன்சுலின்” சத்தை உற்பத்தி செய்வதால் சர்க்கரை நோயினின்று நமக்கு விடுதலை கிடைக்கின்றது. சர்க்கரை நோயாளிகளின் உன்னதமான உணவுப் பொருளாக வெள்ளரியும் விளங்குகிறது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

* வெள்ளரியில் வெகு எளிதில் சீரணமாகக் கூடிய மாவுச் சத்து அமைந்து இருக்கின்றது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சாதகமான உணவாகின்றது.

* வெள்ளரி உடல் எடையைக் குறைக்கக் கூடிய உணவாகவும் நமக்கு உதவுகின்றது. வெள்ளரி தன்னுள் மிகக் குறைந்த எரி சக்தியையும் மிக அதிகப்படியான நீர் சத்தினையும் பெற்று இருப்பதோடு பல்வேறு ஊட்டச்சத்துக்களும் போதிய பலத்தை உடலுக்குத் தருவதாக அமைந்து தேவையின்றி அதிக உணவு உண்பதைத் தவிர்த்து உடலை இளைக்கச் செய்ய உதவுகின்றது.

* வெள்ளரியை போதிய அளவு உண்பதினால் ரத்தத்தில் கலந்திருக்கும் “யூரிக் அமிலம்” அளவைக் குறைக்க இயலும் என்று நவீன ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. மேலும் சிறுநீர்ப் பைகளில் இதன் மூலம் உண்டாகும் கற்கள் தவிர்க்கப் பெறுகின்றன.

* வெள்ளரியின் மேல் படிந்துள்ள தோல் “சிலிகா” என்னும் வேதிப் பொருளையும் “டயட்டரிஃபைபர்” என்னும் நார்ச்த்துப் பொருளையும் கொண்டுள்ளது. இதிலுள்ள “சிலிகா” என்னும் சத்து தோலின் திசுத் தொடர்புக்கு மிகவும் உதவியாக விளங்குகிறது. மேலும் நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உதவுகின்றது.

ஒரு கப் வெள்ளரி (அ) சுமார் 133 கிராம் வெள்ளரியில் புரதச் சத்து 825 மி.கி., நீர்ச்சத்து 126 கிராம், பைட்டோ ஸ்டிரால்ஸ் 19 மி.கி., எரிசத்து 18 மி.கி., கார்போ ஹைட்ரேட் 3.9 கிராம், நார்ச்சத்து 798 மி.கி., மாவுச்சத்து 605 மி.கி., சர்க்கரை 2 கிராம், கொழுப்பு சத்து 180 மி.கி., ஒமேகா கொழுப்பு சத்து 24.7 மி.கி., விட்டமின் ‘ஏ’ 118, விட்டமின் ‘சி’ 4 மி.கி., விட்டமின் ‘ஈ’ 40 மி.கி., விட்டமின் ‘கே’ 16 மைக்ரோ கிராம், ‘தயாமின்’ 39 மை.கி., ரிபோஃப்ளேவின் 39 மை.கி., நியாசின் 90 மி.கி., விட்டமின் ‘பி6’ 61 மை.கி., போலிக் அமிலம் 14 மை.சி., “போன்டோதெனிக் அமிலம்“ 332 மை.கி., “தோலின்” 8 மி.கி., ‘கால்சியம்’ 20 மி.கி., இரும்பு சத்து 333 மை.கி., மெக்னீஷியம் 17 மி.கி., பாஸ்பரஸ் 30 மி.கி., பொட்டாசியம் 188 மி.கி., சோடியம் 2.7 மி.கி., சிங்க் 246 மை.கி., செம்பு 101 மை.கி., செலினியம் 0.27 மை.கி., ஃப்ளூரைட் 1.7 மை.கி. என்னும் அளவில் சத்துக்கள் செரிந்துள்ளன.

மேற்கூறிய சத்துக்களை வெள்ளரி பெற்றிருப்பதால் சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் 100 கிராம் வெள்ளரிச் சாறு சாப்பிட்டால் உடனடியான புத்துணர்வு ஏற்படும்.

* வெயில் காலத்தில் வெளியே சென்று சூரியக் கதிர்களின் தாக்கத்தால் தோலின் வெடிப்பு ஏற்படும், கருமை வண்ணம் உண்டாகுதல், சுறுக்கங்கள் தோன்றுதல் என்று எந்த பிரச்சினையானாலும் சிறிது வெள்ளரித் துண்டை புதிதாக எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தின்மேல் லேசாகத் தேய்ப்பதால் தோல் பழைய ஆரோக்கியத்தைப் பெறுவதோடு சுறுக்கங்களும் மறைந்து போகும்.

* வெள்ளரிச் செடியின் இலையை சிறிது சீரகம் சேர்த்துக் கலந்து வறுத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு வெருகடி அளவு உள்ளுக்கு சாப்பிட தொண்டைப் புண், தொண்டைக் கட்டு, குரல் கம்மல் போன்ற தொண்டை நோய்கள் குணமாகும்.

* இரண்டு அல்லது மூன்று வெள்ளரி இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து சுவைக்கென போதிய சர்க்கரை சேர்த்துக் குடித்து வர சிறுநீரைப் பெருக்கி எளிதில் வெளியேற்றும்.

* வெள்ளரிப் பிஞ்சுகளை பசுமையாவே உண்பதால் உடலின் வெப்பம் தணிந்து நாவறட்சியும் குணமாகும்.

* வெள்ளரியின் விதைகளை மேல் தோல் நீக்கிப் பொடித்து வெருகடி அளவு எடுத்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு வன்மையைத் தருவதோடு தாது விருத்தியை அதிகரிக்கச் செய்யும்.

* வெள்ளரி விதையைத் தோலுடன் சேர்த்துப் பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி தீநீராக்கி சிறிது சர்க்கரை சேர்த்துக் குடிக்க சிறுநீரைப் பெருக்கி வெளித்தள்ளும். இதனால் கை கால்களில் ஏற்படுகின்ற வீக்கம் தணியும்.

* வெள்ளரி இலைச்சாறு வாந்தியை உண்டு பண்ணக் கூடியது. குழந்தைகளின் பசியின்மையைப் போக்கிப் பசியைத் தூண்டக் கூடிய விதத்தில் வெள்ளரிச் சாறு 5 முதல் 10 மி.லி. வரை உள்ளுக்குக் கொடுக்க வாந்தியுண்டாகி வயிற்றிலுள்ள அழுக்குகள் வெளியேறி பசி உண்டாகும்.

* 5 முதல் 10 கிராம் வெள்ளரிக் கொடியின் வேரை எடுத்து பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி உடன் தேனோ பனை வெல்லமோ சேர்த்துக் குடிக்க சிறுநீர் தாராளமாய் வெளியேறி வீக்கங்கள் கரையும் சிறுநீரகமும் பலம் பெறும்.

* வெள்ளரி வித்து 28 கிராம் அளவு எடுத்து நன்கு பொடித்து எவ்வகையிலேனும் உள்ளுக்கு சாப்பிட்டு அதைத் தொடர்ந்து பேதி மருந்தாக ஏதேனும் ஒன்றை (விளக்கெண்ணெய் போன்றது) உள்ளுக்குக் கொடுப்பதால் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள், தட்டைப் புழுக்கள், கீரிப்புழுக்கள் என்று சொல்லக் கூடிய பல்வேறு புழுக்களும் வெளியேறி வயிறு சுத்தமாகி ஆரோக்கியம் பெருகும்.

* வெள்ளரிக்காயை அன்றாடம் உணவோடு சேர்த்துக் கொள்வதால் ஈரல் பலம் பெறும். உடல் உஷ்ணத்தினால் வரும் காமாலை போன்ற நோய்கள் வாராது தடுக்கப்படும். தோலும் பலம் பெறும், பொலிவு பெறும்.

* வெள்ளரிக்காயில் சிலிகான் மற்றும் கந்தகச் சத்து மிகுந்து இருப்பதால் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதாலும் அடிக்கடி வெள்ளரிக் காயை அரைத்து தலைக்குத் தேய்த்து மசாஜ் செய்து முப்பது நிமிடங்கள் கழித்துத் தலைக்குக் குளிப்பதால் தலைமுடி கொட்டுவது, பொடுகு, தலைமுடி உடைவது போன்ற குற்றங்கள் நீங்கி தலைமுடி செழுமையாகவும், மென்மையாகவும், முனைகள் உடையா வண்ணமும் தோன்றும்.

* வெள்ளரிப்பிஞ்சு உண்பதால் எல்லா நலனும் பெருகும். முற்றிய காய்கள் வாதத்தை அதிகரிக்கும், கனிகளோ சீதள சம்பந்தமான நோய்களை விருத்தி செய்யும் என்பதால் இவற்றை மனதில் இறுத்தி அன்றாடம் வெள்ளரியைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வுக்கு அடிகோல வேண்டும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...