Friday, January 30, 2015

ஊட்டச்சத்து நிறைந்த சிவப்பு கீரை

கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பச்சை நிறம் கொண்ட கீரைகளை விட கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

குறிப்பாக சிவப்பு கீரையில் அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது. கூடுதலாக சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிராம் கீரையிலும் 45 கிலோ கலோரி, புரதம் 3.5 கிராம், 0.5 கிராம் கொழுப்பு, 6.5 கிராம் கார்போஹைட்ரேட், 267 மி.கி கால்சியம், பாஸ்பரஸ் 67 மில்லி கிராம், இரும்பு 3.9 மில்லி கிராம் உள்ளது.

எந்த வகையான கீரையாக இருந்தாலும் அவை ரத்தசோகை, வறிற்று கடுப்பு, கபம், நோய் எதிர்ப்புசக்தி, கல்லீரல் போன்றவற்றிக்கு தீர்வு தருகிறது. சிவப்பு கீரை புற்றுநோயை தடுப்பதோடு மட்டுமல்லாமல் கீரையில் நார்சத்துகள் கொண்டுள்ளதால் மலச்சிக்கல், செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது. அதிக வெப்பத்தில் கீரையை சமைக்கும் போது கீரை சேதமடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

கீரை வேகவைக்கும் போது சேதமடைந்தால் கீரையில் உள்ள பெஸ்பன் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு போதை மருந்தாக செயல்படும். நார்சத்து உணவான கீரை பெருங்குடல், புற்றுநோய், நீரிழிவு, அதிக கொழுப்பு, எடைகுறைத்தல் போன்றவைக்கு சிவப்பு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

ரத்தசோகை உள்ளவர்கள் சிவப்பு கீரையை சுத்தம் செய்து உப்பு சேர்த்த வேக கைவைத்து ஜீஸ் செய்து சாப்பிடலாம். நோய் வராமல் தடுக்க தினமும் 100 கிராம் கீரையை ஒரு வேளையாவது உணவில் சேர்த்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்வோம்.. ஏதேனும் நோய் இருந்தாலும் கூட கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...