Saturday, December 20, 2014

சோர்வை தவிர்ப்பது எப்படி?

சோர்வு ஏற்படுவது ஏன்? அதனை தவிர்ப்பது எப்படி? என்பதற்கான ஆலோசனைகளை டாக்டர் கமலி ஸ்ரீபால் உங்களுக்காக வழங்குகிறார்.

* போதுமான அளவு தூக்கமின்மை என்பது ஒருவரின் சக்தியினை எடுத்துவிடும். சாதாரண வேலை கூட கடும் உழைப்பாக தெரியும். ஆக, சோர்வை நீக்க முதல் முயற்சியாக எட்டு மணி நேர தூக்கம் ஒருவருக்கு அவசியம்.

* திடீரென உடற்பயிற்சியை ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்துதலும் அல்லது உடற்பயிற்சியே செய்யாதிருத்தலும் ஒருவரை மிகவும் சோர்வானவராக ஆக்கும். உடற்பயிற்சியே தேவையான பிராண சக்தியையும், சத்துக்களையும் திசுக்களுக்கு எடுத்துச்செல்லும்.
* போதுமான நேரம் தூங்குபவர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் இருப்பார்கள்.

* போதுமான அளவு தூங்குபவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வார்கள்.

* போதுமான அளவு தூங்குபவர்கள் உடல் வீக்கங்கள் எளிதில் குணமடைய பெறுவார்கள்.

* போதுமான அளவு தூங்குபவர்களுக்கு உருவாக்கும் திறன் கூடுகின்றது.

* போதுமான அளவு தூங்குபவர்கள் எதிலும் வெற்றி பெறுவார்கள்.

* போதுமான அளவு தூங்கும் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள்.

* போதுமான அளவு தூங்குபவர்களின் கவனிக்கும் திறன் கூடுகின்றது.

* போதுமான அளவு தூங்குபவர்களுக்கு எப்போதுமே ஆரோக்கியமான அளவு எடை இருக்கும்.

* போதுமான அளவு தூங்குபவர்கள் மன உளைச்சல் குறைவாக காணப்படுபவர்.

* போதுமான அளவு தூங்குபவர்கள் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் விபத்துகள் மிக மிக குறைவு.

* போதுமான அளவு தண்ணீர் குடிக்கா விட்டால் உடலில் அதிக அளவு சோர்வு ஏற்படும். உடலில் 2 சதவீத நீர் குறைந்தாலே உடலில் அதிக பாதிப்பு ஏற்படும். உங்களுக்கு இரும்புச் சத்து குறைவாக இருக்கின்றதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

* அடர்த்த பச்சை கீரைகள், கொட்டை வகைகள், வைட்டமின் `சி' இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், மருத்துவ பரிசோதனை செய்து, இரும்புச்சத்து போதுமான அளவு இருக்கின்றதா என்பதனை அறிந்து தேவைப்பட்டால் மாத்திரையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

* பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தாலும், முகம் வெளிர்ந்து இருந்தாலும் மாடி ஏறி, இறங்கும்பொழுது மூச்சு வாங்கினாலும், இருதயம் தடதடத்தாலும் உங்கள் காலினை நீங்கள் அசைத்துக் கொண்டே இருந்தாலும், அடிக்கடி தலைவலி ஏற்பட்டாலும், உணர்ச்சிவசப்பட்டாலும், முடி கொட்டினாலும், நீங்கள் முழுமையான சைவ உணவுக்காரராக இருந்தாலும், உங்களுக்குத் தைராய்டு பிரச்சனை இருந்தாலும், உங்களின் நாக்கின் தோற்றம் மாறியிருந்தாலும்... உங்களது ரத்தத்தில் இரும்புச் சத்தினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் எதனையும் சரியாக செய்யவேண்டும் என்ற விடாப்பிடி எண்ணம் கொண்டவரா? கண்டிப்பாக உங்களுக்குச் சோர்வு இருக்கும்.

* நீங்கள் கடுகளவு தவற்றினை மலை அளவு பார்க்கும் குணம் கொண்டவரா?

* ரொம்ப கவலைப்படுவீர்களா?

* உங்களுக்கு அதிக அஜீரண கோளாறு ஏற்படுகிறதா?

* சிறு விஷயங்கள் கூட மயக்கம் கொள்ளும் அளவுக்கு பாதிக்கின்றதா?

* உங்கள் திறமையை நீங்களே சந்தேகப்படுகின்றீர்களா?

* எப்போதும் உடல் வலி இருக்கின்றதா? கண்டிப்பாக நீங்கள் மன உளைச்சல் உடையவர்கள். இதனை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள்.

* நீங்கள் காலை உணவை தவிர்ப்பவரா? கண்டிப்பாய் உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். எனவே, காலை உணவாக நல்ல புரத உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் அதிக கலோரி சத்துள்ள ஜங் (jung) உணவினை உண்ணும் பழக்கம் உடையவரா? தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் உடல் எப்போதும் சோர்வாகவே இருக்கும்.

* `நோ' என்று சொல்ல உங்களுக்குத் தெரியவில்லையா? இதன் காரணமாக, எல்லோரது வேலை சுமைகளையும் உங்கள் தலையில் சுமத்தப்படுகிறதா? தீராத சோர்வு உங்களுக்கு இருக்கும்.

* சுத்தம் இல்லாத, தேவையான இடம் இல்லாத குப்பை குவிந்திருக்கும் அலுவலகமா? உடல் சோர்வு ஓடி வந்துவிடும்.

* விடுமுறையிலும் விடாது வேலை செய்வேன் என்று மார்தட்டிக் கொள்பவரா? சோர்வு உங்களுக்குள் குடிபுகுந்துக் கொண்டுவிடும்.

* இரவில் மது குடிப்பவரா? என்றென்றும் சோர்வு தான்.

* தூங்கப்போவதற்கு முன்னால், கம்ப்யூட்டரில் உங்கள் தபால்களை செக் செய்பவரா? மனதிற்கு ஓய்வு இல்லாததால் தூக்கத்திலும் மனம் இதனையே நினைத்துக்கொண்டு இருக்கும். ஆகவே, மறுநாள் முழுவதும் சோர்வாகவே இருக்கும்.

* காபி குடித்தால்தான் எனக்கு வேலை ஓடும் என்று அடிக்கடி காபி குடிப்பவராப இதனால் உடல், மூளை இரண்டும் சோர்ந்துவிடும் இவற்றை தவிருங்கள்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...