Friday, July 18, 2014

சரும நோய்களை விரட்டும் கிர்ணிப்பழம்

புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ் மெக்னீஷியம், இரும்புச் சத்து என சகலத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கிர்ணிப்பழம், உடல் குளிர்ச்சிக்கும் உகந்தது. இத்தனை சத்துக்களை கொண்டிருப்பதால், எளிதில் இது ஜீரணமாகாமலும் போகலாம். அதனால் எப்போதும் இதனுடன் வெல்லத்தை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

* உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழத் துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள், கண்கள் பிரகாசிக்கும்.

* கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும்.
* மலச்சிக்கலுக்கு அருமருந்து கிர்ணிப்பழம், இதன் காயை கூட்டு, குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.

* சிறுநீரகத்தில் உள்ள கல்லையும் கரைய வைக்கும் வல்லமை கிர்ணிப்பழத்துக்கு உண்டு. எனவே, சீஸன் சமயங்களில் கூடுமானவரை இதைத் தவிர்க்காமல் சாப்பிட்டுவிடுங்கள்.

* இரண்டு டீஸ்பூன் கிர்ணிப்பழ விழுதை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்துவர... இளம் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

* கிர்ணிப்பழத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் அண்டாது.

* சின்னச் சின்ன விஷப் பூச்சிக்கடிக்கு கிர்ணிப்பழ விதை பவுடரைப் பூசினால் நிவாரணம் கிடைக்கும்.

* கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...