Wednesday, September 25, 2013

குங்குமப் பூவில் மருத்துவகுணம் உள்ளது

கருவில் இருக்கும் குழந்தை 'கலராக' பிறக்கும் என்று பலரும் குங்குமப்பூவை சாப்பிடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மிக அதிக விலைகொண்ட நறுமணப் பொருட்களில் ஒன்று குங்குமப்பூ. அதன் மருத்துவகுணம் அதற்கு விலை உயர்ந்த மதிப்பைக் கொடுத்துள்ளது. அதிலுள்ள சத்துக்களை பார்ப்போம்...

குங்குமப்பூ என்பது நிஜமான மலரல்ல. 'குரோகஸ் சட்டைவஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்ட தாவர மலரின், சூல்முடிகளே 'குங்குமப்பூ' ஆகும். இதன் வழக்கு மொழிப் பெயர் 'சப்ரான்'. தெற்கு ஐரோப்பாவை தாயக மாகக் கொண்டது குங்குமப்பூ. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் மிகுதியாக விளைகிறது.
சப்ரான் மலர்களில் இருந்து பெறப்படும் 'குங்குமப்பூ', சப்ரனால் எனும் குறிப்பிடத்தக்க எண்ணெய்ப் பொருளைக் கொண்டுள்ளது. இது எளிதில் ஆவியாகக் கூடியது. இதே போல சினியோல், பென்னத்தனால், பைனேன், பார்னி யோல், ஜெரனியால், லைமோனின், பி-சைமேன், லினா லூல், டர்பைனென்4 போன்ற எண்ணெய்ப் பொருட்களும் உள்ளன.

இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது. நோய் எதிர்ப்புத் தன்மை வழங்கும், உடற்செயல்களை ஊக்குவிக்கும். 'ஆல்பா குரோசின்' என்னும் நிறமிப் பொருள் குங்குமப் பூவில் உள்ளது. இதுவே சூல்முடிகளுக்கு பொன் நிறத்தை அளிக்கிறது.

ஸி-சான்ந்தின், லைகோபின், ஆல்பா-பீட்டா கரோட்டீன் போன்ற நிறமிகளும் குங்குமப் பூவில் காணப்படுகிறது. இவையே உணவுப் பொருட்களுக்கு நிறமூட்டுகிறது. அது மட்டுமல்லாமல் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் செயல்படுகிறது. மனஅழுத்தம், புற்றுநோய் மற்றும் நோய்த் தொற்றுகளில் இருந்து காக்கும் திறனை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வழங்குகின்றன.

நோய்க் கிருமிகள் பெருகாமல் தடுக்கும் 'ஆன்டி செப்டிக்' மருந்து தயாரிப்பில் குங்குமப்பூ பயன்படுகிறது. குங்குமப்பூ செரிமானத்திற்கு துணை புரியும். சோர்வு நீக்கும் தன்மையும் குங்குமப் பூக்களுக்கு உண்டு. தாமிரம், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, இரும்பு, செலினியம், துத்தநாகம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுப் பொருட்கள் குங்குமப்பூவில் காணப்படுகிறது.

பொட்டாசியம் தாதுவானது, உடற்செல்கள் வள வளப்புத் தன்மையுடன் இருக்க அவசியம். மேலும் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. மாங்கனீசு மற்றும் தாமிர தாதுக்கள் நோய் எதிர்ப்பு நொதிகளின் செயல்பாட்டிற்கு துணை புரியும். இரும்புத்தாது சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு அத்தியாவசியமானது.

'வைட்டமின்-ஏ', 'போலிக் ஆசிட்', ரிபோபிளேவினன், நியாசின், வைட்டமின்-சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் குங்குமப்பூவில் காணப்படுகிறது.

பயன்பாடுகள்

* சோர்வு நீக்கும் மருந்துப் பொருட்கள், புற்றுநோய் மருந்துகள், ஜீரண மருந்துகள் தயாரிப்பில் குங்குமப்பூ பயன்படுகிறது.

* சமையல் அறையில் பல வகைகளில் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது. அரைத்து பொடியாகவோ, அரைக்காமலோ குழம்புகளில் சேர்க்கிறார்கள். உணவுக்கு நறுமணம், நிறம் தருகிறது குங் குமப்பூ.

* வென்னீரில் குங்குமப்பூவை போட்டு குடிநீராக பயன்ப டுத்தும் பழக்கமும் சிலரிடம் இருக்கிறது. பாலுடன் குங்குமபூப் பொடியை சேர்த்து பருகும் பழக்கமும் பரவலாக உள்ளது.

* பல்வேறு பானங்களிலும், ஐஸ்கிரீம் மற்றும் கேக் தயாரிப்பிலும், நிறம் மற்றும் வாசனைக்காக குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...