Thursday, November 14, 2013

குழந்தைகளின் தூக்கம் வித்தியாசமானது

* குழந்தைகளின் தூக்கம் வித்தியாசமானது. குழந்தைகளின் தூக்கத்தை கட்டுப்படுத்துவது மூளையின் ஹைப்போதலாமஸ் என்ற பகுதி. இது தூக்கத்தை மட்டுமின்றி உணவு, சுபாவம், இதயம், சருமம், கிட்னி, ஹார்மோன் செயல்பாடு போன்றவைகளையும் ஆளுமை செய்கிறது. அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் மேற்கண்ட உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கும்.

* பெரியவர்கள் ஒரு இரவு தூங்காவிட்டால், மறுநாள் காலையில் தூங்கி அதை ஈடுசெய்துகொள்வார்கள். குழந்தைகளால் அது முடியாது என்பதால், தூக்கமின்மை குழந்தைகளை வெகுவாக பாதிக்கும்.

* இரண்டு மாதம் வரை குழந்தைகள் 10 முதல் 19 மணிநேரம் தூங்கும். மூன்றில் இருந்து 12 மாதம் வரை 13 மணி நேரம் வரை தூங்கும். ஒரு வயது முதல் மூன்று வயது வரையும் கிட்டத்தட்ட அதே காலஅளவில் தூங்கும். நான்கு முதல் 12 வயது வரை, பத்து மணி நேரம் தூங்குவார்கள்.

* குழந்தைகள் தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்பட்டால், ஆகாரத்தில் குளறுபடி, சுபாவத்தில் மாற்றங்கள், ஹார்மோன் செயல்பாட்டில் சிக்கல்கள் தோன்றும்.

* கைக்குழந்தைகள் சரியாக தூங்காததற்கு சில காரணங்கள் இருக்கின்றன. பசி மற்றும் குறைந்த அளவு ஆகாரம் உட்கொண்டிருப்பது. உணவு உட்கொண்ட பிறகு சரியாக தட்டி, வாயுவை வெளியேற்றாமல் இருப்பது. பால் வயிற்றில் இருந்து நெஞ்சுப் பகுதியில் ஏறி வருதல். புட்டிப்பால் ஏற்படுத்தும் அவஸ்தை. வயிற்று வலி. மலத்துவார பகுதி வீக்கம். பூச்சி தொந்தரவு.

* ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு சிறுநீர்தொற்று, அதிக நேரம் கம்ப்யூட்டர், டெலிவிஷன் பார்ப்பது, பயம் போன்றவைகளால் தூக்கம் வராது.

* ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இரவில் எத்தனை மணிக்கு தூங்கச் செல்கிறதோ, மறு நாள் காலை அதே நேரத்திற்குவிழிக்கும். அதாவது இரவு எட்டு மணிக்கு தூங்கினால், காலை எட்டு மணிக்கு விழிக்கும். சில குழந்தைகள் வெளிச்சத்தின் விளைவாக சீக்கிரத்திலே விழித்து விடுவதும் உண்டு.

* 2 முதல் 4 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மதிய உணவுக்கு பிறகு தூங்கும். அந்த வாய்ப்பை அம்மாக்கள் பயன்படுத்தி குளிக்கவோ, ஓய்வெடுக்கவோ செய்துகொள்ளவேண்டும்.

* ஓரளவு குழந்தைகளுக்கு பக்குவம் வந்த பின்பு, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செய்யவேண்டும். இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உடலைக் கழுவி, தூக்கத்திற்கு குழந்தைகளை தயார்ப்படுத்திவிட வேண்டும்.

* குழந்தைகளை தூங்க வைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவைகளை மனோரீதியாக தூக்கத்திற்கு தயார்ப்படுத்தவேண்டும். ‘இன்னும் சிறிது நேரத்தில் நீ குளிக்கவேண்டும். பின்பு தூங்கவேண்டும்’ என்று கூறி தூங்க வைத்திடுங்கள். உடலை கழுவ மிதமாக சுடும் நீரை பயன்படுத்துங்கள்.

* பசியோடு தூங்கவைக்க முயற்சிக்காதீர்கள்.

* தூங்க செல்வதற்கு முன்பு காபி போன்ற பானங்களை பருக கொடுக்காதீர்கள்.

* குழந்தைகளின் படுக்கை அறையில் மிதமான வெளிச்சம் இருக்கட்டும்.

* படுக்கை அறையில் புகை பிடிக்கக்கூடாது.

* குழந்தைகள் சரியாக தூங்காவிட்டால் கோபம் வரும். முரண்டுபிடிப்பார்கள். திடுக்கிட்டு விழிப்பார்கள். தூக்கத்தில் நடப்பார்கள்.

* உறக்கம் மிக முக்கியமானது. அதன்மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...