Monday, October 21, 2013

மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்

வெங்காயம் என்றாலே அனைவரும் பயப்படுவது அதிசயம் இல்லாத ஒன்றுதான். வெங்காயம் வெட்டினாலே கண்ணிலிருந்து கண்ணீர் வரும் என்று தான் நாம் அனைவரும் அறிகின்றோம். ஆனால் அவற்றில் இருக்கும் மருத்துவ குணத்தை யாரும் அறிவதில்லை.

இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் வெங்காயம். இவை பூச்சிக்கடி, ஆஸ் துமா, சளி, கபம் போன்ற நோய்களிலிருந்து நம்மை காக்கும். சங்க காலத்திலிருந்தே வெங்காயத்தின் மருத்துவ குணத்தை மருத்துவர்கள் அறிந்துள்ளனர்.

பசியுணர்வு இல்லாதவர்கள் வெங்காயத்தை உண்பதால் பசி உணர்வு தூண் டப்பட்டு, உடலின் அழற்சி நீக்கப்பட்டு, உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றது. வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு மிகவும் நல்லது.

ஈர மணலில் வெங்காயம் வளர்க்கப்படுகின்றது. சுவையான மற்றும் சத்தான சமையலுக்கு வெங்காயம் மிகவும் அவசியம். இதை சுற்றி மற்ற காய் செடிகளை வளர்க்கும் போது இவை நன்றாக வளர்கின்றது. இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த வெங்காயத்தின் சிறப்புகளை பார்ப்போம்.

பற்களுக்கு நல்லது : வெங்காயம் பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 2-3 நிமிடங்கள் வெங்காயத்தை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் கிருமிகளை அழிக்க முடியும்.

இதய நோய்களுக்கு சிகிச்சை : வெங்காயம் ரத்த சிவப்பணுக்களை சுத்திகரித்து, ரத்த அழுத்தத்தை போக்கி, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது. முக்கியமாக இதய நோய் மற்றும் மற்ற இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்கின்றது

பொலிவான சருமம் : வெங்காயச் சாற்றுடன் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து, முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால், பிறகு பாருங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாக காணப்படும்.

இருமலுக்கு சிகிச்சை : வெங்காயம் கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் வெங்காயச்சாறு மற்றும் தேன் கலவையை சம அளவில் எடுத்துக் கொண்டு சாப்பிட்டால், தொண்டை புண் மற்றும் இருமல் குணமடையும்.

பூச்சி கொல்லியாகப் பயன்படுகிறது : பூச்சி கடி இருப்பின் வெங்காய சாறு சிறந்த நிவாரணத்தைத் தரும். அதிலும் தேனீ கடி மற்றும் மற்ற விஷக்கடிகளுக்கு, இதனை பூசி வந்தால், வலி காணாமல் போகும்.

புற்றுநோய் : வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.

காது வலிக்கு நிவாரணம் : காது வலி இருந்தால், அப்போது வெங்காயச் சாற்றினை காதுகளில் ஊற்றினால், காது வலி குறையும். அதிலும் காதில் ஒலி கேட்பது போன்ற இடர்பாடு இருப்பின், பருத்தி கம்பளி மூலம் காதில் வெங்காய சாற்றை ஊற்றினால் போதும் தானாக மறைந்து விடும்.

பாலுணர்ச்சியை அதிகரிக்கும் : வெங்காயம் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு உகந்தது. அதிலும் இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் வெங்காயச் சாறு சேர்த்து ஒரு நாளுக்கு மூன்று முறை எடுத்துக் கொண்டால், லிபிடோ மற்றும் பாலியல் உணர்ச்சியானது அதிகரிக்க தொடங்கி, செக்ஸ் வாழ்க்கை சீராக இருக்கும்.

ரத்த சோகைக்கு சிகிச்சை : ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ரத்த சோகை ஏற்படும். ஆகவே இதை போக்க வெங்காயம் எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக வெங்காய சாற்றுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பருகினால், ரத்த சோகை குணமடையும்.

வயிறு வலி நிவாரணம் : வெங்காயம் வயிறு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வளிக்கும். ஏனெனில் இதில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும், ஆன்டிபாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

சிறுநீர் கோளாறுகளை தீர்க்கும் : சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல் உணர்வு சிலருக்கு ஏற்படும். வெங்காயம் இதற்கு நல்ல தீர்வு தரும். அதற்கு 6 முதல் 7 கிராம் வெங்காயத்தை எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். பின்பு பாருங்கள் சிறுநீர் கோளாறுகள் மறைந்து விடும்.

ஆஸ்துமா : ஆஸ்துமா ஏற்படுத்தக் கூடிய பயோகெமிக்கல் அமைப்பை போக்குவதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே ஆஸ்துமா நோயாளிகள் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை கபம் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.

பொடுகுத் தொல்லை : வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், வெங்காயச் சாற்றினை தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லை குறையும்.

தற்போதைய வெங்காயத்தின் விலை சற்றே கிறங்க வைத்தாலும் அது நிரந்தரம் அல்ல. எனவே நாம் உண்ணும் அனைத்திலும் வெங்காயத்தையும் சேர்த்துக் கொண்டால் நோய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு விஷ முறிவு தன்மையும் அதிகரிக்கும். அத்துடன் நோயற்ற வாழ்க்கையும் வாழலாம்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...