Tuesday, October 8, 2013

வண்ண வண்ண காய்கறிகள்

எல்லா காய்கறியும் நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை தருது. அதுல முக்கியமாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள காய்கறிகள்ல என்ன சத்துக்கள் இருக்குன்னு பார்ப்போமா... முதல்ல வெள்ளை நிறக் காய்கறிகளைப் பற்றி பார்ப்போம். வெங்காயம், பூண்டு, முள்ளங்கி போன்ற காய்கறிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இதை சாப்பிடும்போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் கிடைக்குது. அப்புறம், கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகுது. குறிப்பாக, வெங்காயம், பூண்டு போன்றவற்றில் சல்பைடுகள் நிறைய இருக்குது. மேலும், ஆல்லிசின் என்ற வேதிப்பொருளும் இதில இருக்குது. இவை உடலில் கட்டிகள் ஏற்படாமல் தடுக்குது. ரத்த கொழுப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுது. அதேபோல் முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருக்குது. ஈரப்பதம் நிறைந்த இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்குது. முள்ளங்கி இயற்கையான மலமிளக்கியாக செயல்படுது. தோல், கண்கள் போன்றவற்றில் உள்ள குறைபாட்டைப் போக்க உதவுது.

இப்போ, ஆரஞ்சு நிறத்துல காய்கறிகளும், பழங்களும் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த காய்கறிகளில் பீட்டா கரோட்டின், வைட்டமின் `சி' மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் இருக்குது. கண்பார்வைத்திறனை அதிகரிக்குது. புற்றுநோய் ஆபத்தைத் தடுக்கக் கூடிய சக்தியும் இவற்றிற்கு உண்டு.

இதுபோன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், உடம்பில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கலாம். மேலும், ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறவங்க, ஆரஞ்சு பழம், கேரட், பப்பாளி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்த அளவுக் குறையும். அதேபோல, மூட்டு சம்பந்தமான வலியையும் போக்க உதவுது.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...