Tuesday, September 3, 2013

தாங்க முடியாத தலைவலிக்கு இயற்கை வீட்டு மருந்துகள்

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.

கிராம்பும் உப்பும் கலந்த கலவை :

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...