Monday, May 6, 2013

கீரையில் உள்ள சத்துக்கள்

முளைக்கீரை : இரும்பு 22.9 மி.கி., கால்ஷியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும். (கீரையைச் சிறிது நேரமே வேகவைக்கவும்)

அகத்திக் கீரை : கால்ஷியம் 1130 மைக்ரோ கிராம், இரும்பு 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. ரத்தசோகை, எலும்பு வலுக்குறைவு ஆகிய நோய்கள் வராமல் காக்கும். (மூடப்பட்ட பாத்திரத்தில் வைத்துச் சமைக்கவும்)

பொன்னாங்கண்ணி : இரும்பு 1.63 மி.கி, கால்ஷியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன. இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகை உண்டாகும். கால்ஷியம் குறைவால் பற்களும் எலும்பும் வலிமை குறையும். (பச்சைக் கீரைகளை அதிக நேரம் வதக்க வேண்டாம்)

பசலைக் கீரை : வைட்டமின் ஏ 5580 மைக்ரோகிராம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு 1.14 மி.கி., பொட்டாஷியம் 306 மி.கி ஆகியவை உள்ளன. பார்வைக் கோளாறைக் தடுக்க உதவும் வைட்டமின் ஏ உடல் சோர்வைத் தடுக்க உதவும் பொட்டாஷியச் சத்து ஆகியவை பசலைக் கீரையில் உள்ளன.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...