Friday, April 5, 2013

பழங்களை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்?

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் செரிக்கும். உணவு ஜீரணமாக கூடுதல் நேரமாகும். உணவு செரிக்காத நிலையில் உடனே பழம் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானம் ஆகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் பழம் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது.

பழங்களைத் தனியாக சாப்பிடாமல். அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸாகக் குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது சரியல்ல. பழங்களை ஜூஸாக சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச் சத்து நிறைய கிடைக்கும்.

காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்குப் புத்துணர்ச்சியும் தெம்பும் கிடைக்கும் .

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...