Tuesday, November 6, 2012

இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்?

எதற்காக மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டோம். இந்த கேள்வி அனைத்து மனிதனுக்கும் ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் பதில் திருப்திகரமானதா என்றால் பெரும்பாலும் கேள்விக்குறியே.
 

முஸ்லிமாகிய நாம் அல்லாஹ்வை வணங்குவதற்காக என்று சொல்வோம். ஆனால் எதற்காக அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று கேட்டால் கேள்வியே பதிலாக வரும்.

இதை ஒரு மேற்கத்திய நபரிடம் கேட்டால் அவர் இவை அனைத்தும் பரிணாம வளர்ச்சியே (Evolution) என்பார்.மாடுகள், நாய்கள் எதற்காக படைக்கப்பட்டன, எந்த ஒரு நோக்கமுமில்லை. அது போலவே மனிதன் படைக்கப்பட்டதும் எந்த ஒரு நோக்கத்திற்காகவுமில்லை என்று சொல்வார்.இறைவன் ஏன் மனிதனை படைக்க வேண்டும் என்ற கேள்வி வருவதற்கு முன் இறைவன் எத்ற்காக படைக்கிறான்? என்ற கேள்வியும் வரவே செய்கிறது.

لَخَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.அல் குர்ஆன் (40:57)

இந்த இறைவசனம் மூலம் நமக்கு இறைவன் இந்த வானத்தையும் பூமியையும் படைத்தான், அந்த படைப்பு மனிதர்களைவிட சிறந்ததென்று தெரிய வருகிறது. ஆகவே இறைவன் ஏன் படைக்கிறான் என்ற கேள்வி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு சிற்பி இருக்கிறான் ஆனால் அவன் சிலை எதுவும் செதுக்கவில்லை. நாம் அவனை சிற்பி என்று ஏற்றுக்கொள்வோமா? ஒரு ஓவியன் இருக்கிறான் ஆனால் அவன் எந்த ஓவியமும் வரையவில்லை நாம் அவனை ஓவியன் என்று ஏற்றுக்கொள்வோமா. ஆக ஒரு நல்ல சிற்பியென்றால் அவனது சிலையை பார்த்தே நாம் முடிவுசெய்கிறோம். ஒரு நல்ல ஓவியனென்றால் அவனது ஓவியத்தைப் பார்த்தே முடிவு செய்வோம்.

ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ

அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.அல் குர்ஆன் (6:102)

அல்லாஹ் மிகத்தெளிவாக இந்த வசனத்திலே அவனே படைப்பாளன் என்று கூறுகிறான்.

அல்லாஹ் தன்னை ஹாலிக் (படைப்பாளன்) என்று கூறிக்கொள்கிறான். அதை மனிதர்களாகிய நாம் உணர்வதற்காக அனைத்தையும் படைக்கிறான், படைத்துக்கொண்டே இருக்கிறான்.

அல்லாஹ் படைக்கிறான் சரி. இதிலென்ன அதிசயம் இருக்கிறது மனிதன் கூடத்தான் படைல்கிறான் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லக்கூடும். அல்லாஹ்வின் படைப்பிற்கும் மனிதனுடைய படைப்பிற்கும் உள்ள வித்தியாசத்தயும் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுடைய படைப்பு என்பது ஏற்கனவே இந்த உலகத்தில் இருக்கக் கூடிய பொருளை வேறு ஒரு பொருளாக படைப்பது. இரும்பைக்கொண்டு Screw (ஸ்குரூ) தயார் செய்வது,இரும்பை மனிதனால் தயார் செய்ய முடியாது. கல்லைக் கொண்டு சிலையை தயார் செய்வது, கல் உடைத்து எடுக்கப்படும் பாறையை மனிதனால் தயார் செய்ய முடியாது. ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பு என்பது ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றை படைப்பது.இந்த பிரபஞ்சம் எப்படி படைக்கப்பட்டதோ அதுபோல (Big Bang Theory).

இங்கே மற்றொரு முக்கியமான விஷயத்தை அனைவரும் கவனிக்க வேண்டும். எப்படி ஒரு சிலையை பார்த்து நாம் சிற்பியை தெரிந்து கொள்கிறோமோ, ஒரு ஓவியத்தை பார்த்து ஓவியரை தெரிந்து கொள்கிறோமோஅதுபோல இறைவனின் படைப்புகளை பார்த்து நாம் இறைவனை உணர்ந்து கொள்கிறோம் அவ்வளவே.

சிலையை பார்த்து சிற்பியை தெரிந்து கொள்வதனால் சிலை நிச்சயம் சிற்பியாகிவிட முடியாது. ஓவியத்தை பார்த்து ஓவியரை தெரிந்து கொள்வதனால் ஓவியம் ஓவியராகிவிட முடியாது.சிற்பி சிற்பிதான் சிலை சிலைதான்.ஓவியர் ஓவியர்தான் ஓவியம் ஓவியம்தான். அதுபோல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளும் நமக்கு அல்லாஹ்வை அவனின் ஆற்றலை உணர்த்துகின்றன. ஆனால் படைக்கப்பட்ட எந்த பொருளும் அல்லாஹ் ஆக முடியாது.

உங்களில் நீங்கள் அல்லாஹ்வை உணருகிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் திடமான கை கால்களை கொடுத்திருக்கிறான். நல்ல கண் பார்வையை கொடுத்திருக்கிறான். யாருடைய உதவியுமில்லாமல் உங்களுடைய உடல் இயக்கம் அழகாக இயங்குகிறது. இங்கே உங்களில் நீங்கள் அல்லாஹ்வை உணருகிறீர்கள் அவனது படைப்பின் ஆற்றலை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒருகாலும் அல்லாஹ் ஆகிவிட முடியாது.

فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்- அல் குர்ஆன் (42:11).

இந்த இறைவசனம் அல்லாஹ்வுக்கு நிகராக எந்த பொருளுமில்லை என்பதை நமக்கு விளக்குகிறது. ஆகவே இறைவனால் படைக்கப்பட்ட பொருட்களினால் நாம் அல்லாஹ்வை உணரவேண்டுமே தவிர படைக்கப்பட்ட எந்த பொருளையும் இறைவனாக்கிவிடக்கூடாது.

இறைவன் ஏன் படைக்கிறான் என்பது நமக்கு இப்பொழுது புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்? (தொடர்ச்சி...) இறைவனை எதற்காக வணங்க வேண்டும்? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை - அல் குர்ஆன் (51:56) அல்லாஹ் குர் ஆனிலே மிகத் தெளிவாக சொல்கிறான் மனிதர்கள் தன்னை வணங்குவதற்காக மட்டுமே படைத்தேன் என்று.

மனிதன் எதற்காக இறைவனை வணங்க வேண்டும்? - நியாயமான கேள்விதானே.


நான் படித்தேன், நான் வேலை தேடினேன், நான் வேலை பார்த்தேன், நான் என் குடும்பத்தை காப்பாற்றுகிறேன். ஒரு வேலை சாப்பாடு என்றாலும் நான் சம்பாதித்துதான் சாப்பிட்டாக வேண்டும். அப்படியிருக்க நான் ஏன் இறைவனை வணங்க வேண்டும்.நியாயமான கேள்விதானே.

நமது உடலிலே 43 ஜொடி நரம்புகள் நம்மை செயல்பட வைக்கின்றன. நமது உடம்பிலுள்ள நரம்புகள் அத்தனையும் வெளியில் எடுத்து ஒரே நேர் கோட்டிற்கு கொண்டு வருவோமேயானால் அது 1,00,000 மைல்கள் நீண்டு கொண்டேசெல்லும் என்பது அறிவியல் உண்மை.நமது பூமியினுடைய சுற்றளவு வெறும் 25000 மைல்கள் மட்டுமே. நமது நரம்புகளை வைத்து இந்த பூமியை 4 முறை சுற்றி வந்துவிடலாம்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 8000 மைல்கள். இந்த பயணத்திற்காக எத்தனை பாதுகாப்புகள், ஏற்பாடுகள் அப்படியிருந்தும் சில நேரங்களில் விமானம் விபத்துக்குள்ளாகி அத்தனைபேரும் உருத்தெரியாமல் போய்விடுவதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.


அப்படியிருக்க நமது அமெரிக்க பயணத்தைவிட பலமடங்கு பெரியதான நமது நரம்புகள் யாருடைய உதவியுமின்றி அழகாக செயல்படுகிறதே. இதற்காக நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டாமா?


ஒருவர் மருத்துவமனையிலே சிறுநீர் வெளியாகவில்லையென அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சிறுநீர் வெளியாக வேண்டுமென்று இலட்சக்கணக்கில் செலவு செய்து மருத்துவர்கள் அவர் சிறுநீர் வெளியாக உதவி செய்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கோ ஒவ்வொறு முறை சிறுநீர் வெளியேற்றப்படும்போதும் உயிர்போகிற வலி. அதற்காக மருத்துவரை திட்டமுடியுமா. திட்டினால் பைத்தியக்காரன் என்றுதானே சொல்லுவோம்.

இலட்சக்கணக்கில் செலவு செய்தும் மருத்துவரால் வலி இல்லாமல் சிறுநீரை வெளியேற்ற முடியவில்லை. ஆனால் ஆயுல் முழுவது, எந்தவித வலியுமின்றி உனக்கு சிறுநீர் வெலியாகின்றதே அதற்காக நீ இறைவனை வணங்க வேண்டாமா?

ஒருவரின் மர்ம உருப்பிலிருந்து இரத்தம் வடிகிறது மிகப்பெரிய துன்பம். ஆனால் அதே மர்ம உருப்பிலிருந்து விந்து வெளியாகும்பொழுது நமக்கு இன்பமாகத்தானே இருக்கிறது. வருகிற இடம் என்னவோ ஒன்றுதான். அது விந்தாக இருந்தால் இன்பம். இரத்தமாகயிருந்தால் துன்பம். நமக்கு இன்பத்தை தருகின்ற அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் அந்த இறைவனை வணங்க வேண்டாமா?

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...