Tuesday, November 18, 2014

மணைவியின் ஆலோசனையும் மதிக்கத் தக்கதே !

நமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சினைகளை நமது வாழ்வில் சத்திக்க நேரிடுகிறது. அந்தப் பிரச்சினைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல்,அல்லது தெரியாமல் நாம் கஷ்டப் படும் போது தீர்வுகளை நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள் சிக்கள்களுக்கான தீர்வுகளை கேட்பார்கள். பெண்களிடம் ஆலோசனைகளை கேட்க்கக் கூடாது, கேட்பது அபசகுனம்,அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும் போன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது. இது போன்றவர்கள் நபியவர்களின் வாழ்வில் இருந்து நிறையவே படிப்பினை பெற வேண்டியுள்ளது. ஏன் என்றால் நபியவர்களே தங்கள் மணைவியரிடத்தில் தனக்குத் தேவையான ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது. அப்படியிருக்க நாம் ஏன் பெண்களிடம் நமக்கு தேவையான சிறந்த ஆலோசனைகளை

மகிழ்ச்சியான குடும்ப வாழ்வும், மார்க்கப் பற்றுள்ள தம்பதியும்


அல்லாஹ் மனித இனத்தை ஆண் பெண் என ஜோடியாக படைத்ததே அவர்கள் இரு சாராரும் இன்பமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கே ஆகும். அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம் என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர். (அல்குர்ஆன் 7: 189) கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டு திருமண உறவு தலாக்கில் முறிந்து போகக் கூடிய சவால்களை இன்று அநேகமான முஸ்லிம் குடும்பங்கள் எதிர் கொண்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம்

Tuesday, October 14, 2014

உடல் ஆரோக்கியத்திற்கு அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம்

வளர் இளம்பருவத்தினர் மட்டுமல்லாமல், எல்லா வயதினருக்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். மிதமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்பைக் குறைக்கும்;

மன அழுத்தத்தைக் குறைக்கும்; தசைகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து உறுதிப்படுத்தும். ஒரு காலத்தில் 40-50 வயதில் வந்த மாரடைப்பு, சர்க்கரை நோய் இன்று 20-30 வயதிலேயே வந்துவிடுகிறது. இளம்பருவத்தில் தங்களுடைய உடலைப் பராமரிக்கத் தவறியதன் விளைவுதான் இது.

13 வயதில் இருந்து 19 வயதுக்குட்பட்ட பெரும்பாலானவர்கள்

தண்ணீர் குடிங்க நோய் வருவதை தவிர்க்க

சிறுவயதில் இருந்தே தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் உடல் வளர்ச்சியும், சுறுசுறுப்பான வாழ்க்கையும் அவர்களுக்கு அமையும். பெரியவர்கள் தினமும் 8 தம்ளர் தண்ணீர் குடித்தால் பலநோய்கள் வராமல் தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

சிறுநீரகம் நன்றாக வேலை செய்யவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மூட்டு வலி, முதுகு வலி பாதிப்பை தவிர்க்கவும், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல தண்ணீர் அருந்துவது உடல் வலியினை நன்கு குறைக்கும்.

கழிவுப் பொருட்கள் தண்ணீர் உதவியால் `லிம்பாடிக் குழாய்களின்' மூலம் குடல், சிறுநீரகம் வழியாக வெளியேறுகின்றது. நன்கு தண்ணீர்

பிஸ்தா இதயதை காக்கும்

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.

பகலில் தூங்குவது நல்லதா?

 பகல் உறக்கம் என்பது பொதுவாக நல்லதல்ல என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. எனினும், தற்போதைய காலச் சூழலில், பலரும் இரவில் பணிக்குச் சென்றுவிட்டு பகலில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இது போன்றவர்களைத் தவிர்த்து, அதிகம் பேசுபவர், பயணம் செய்பவர்கள், அதிக தூரம் நடைப் பயணம் செய்பவர்கள், மதுபானம் அருந்துபவர்கள், அதிக உடலுறவில் ஈடுபடுபவர்கள், தலையில் பொருட்களைச் சுமந்து செல்பவர்கள், அதிக கோபம், வருத்தம்,

பயம் போன்றவற்றால் உடல் தளர்ந்தவர்கள், ஆஸ்துமா, விக்கல், வயோதிகர், குழந்தைகள், பலவீனமுள்ளவர்கள், காச நோய், உடல் வலியால் வேதனைப்படுபவர், அஜீரணம், விபத்தில் அடிபட்டவர், எலும்புமுறிவு, பகல் தூக்கத்தை பழக்கமாக்கிக் கொண்டவர் ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் பகலில் தூங்கக் கூடாது.

எந்த எண்ணெய் உடலுக்கு நல்லது

விலை அல்லது விளம்பரத்தில் கூறப்பட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து வாங்குகிறார்கள். ஆனால், உடலுக்கு எந்த விதமான எண்ணெய் ஒத்துப் போகும் என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெயாக தற்போது சூரிய காந்தி எண்ணெய் அதிகரித்து வருகிறது.

இந்த எண்ணெய்யில் அமிலம் அதிகம் உள்ளது. தீய கொலஸ்ட்ராலை மட்டுமன்றி, நல்ல கொலஸ்ட்ராலையும் குறைப்பதால், சூர்ய காந்தி எண்ணெய்யை தொடர்ந்து உபயோகிக்கப்பதால், நமது உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்காமலேயே போய்விடுகிறது. இதனால், உடல் பல்வேறு கோளாறுகளை சந்திக்கிறது.

சூரிய காந்தி எண்ணெயில் அதிகமாக இருக்கும் அமிலத்துடன்,

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...