Thursday, January 17, 2013

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத்தோற்றுவிக்கிறது.

இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட

எலும்பு வலிமைக்கு என்ன செய்யலாம் !!

நமது உணவுப் பழக்கவழக்கம் தான் நம் உடம்பில் உள்ள எலும்புகள் உறுதியாவதற்கும், உடைவதற்கும் காரணமாகிறது. சரியான ஊட்ட உணவு எலும்புகளுக்கு கிடைக்காவிட்டால் அதுவே எலும்புகள் வலுவிழந்துபோகக் காரணமாகி விடுகிறது.

உணவு உட்கொள்ளாமல் புறக்கணித்தல், குறைந்த கலோரி உள்ள உணவுகளை உட்கொள்ளுதல், கால்சியம்அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விலக்குதல், அதிக கலோரி உள்ள உணவுகளைஉட்கொண்டு ஊட்டச்சத்து உணவுகளை தவிர்த்தல் ஆகிய காரணங்கள் நாளடைவில் எலும்புகளுக்கு கேடுவிளைவிக்கும் வேலையை செம்மையாக செய்துவிடுகின்றன.

இன்றைய அவசர உலகில் பலரும் காலை உணவை தவிர்க்கின்றனர். அதற்கெல்லாம் ஏது நேரம் என்று பலரும்பெருமையுடன் சொல்லிக் கொள்வதும் உண்டு. காலை உணவு அத்தியாவசியமானது.

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் !

குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுத்து வளர்க்க வேண்டும். உணவில் பொதுவாக புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் என்னும் ஐந்து வகையான முக்கிய உணவுச் சத்துகள் அடங்கியுள்ளன.

குழந்தையின் உணவில் இந்த ஐந்து வகையான முக்கிய ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பல வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவர்.

உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான புரதம் பால், முட்டை, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பட்டாணி போன்ற உணவுப்

சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை

உயிருக்கு ஆபத்தான உணவு வகைகளை தவர்ப்பது நல்லது !!

வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பி
ட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

`இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை

நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!

ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.

குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.
அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ, இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.

மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ளது !!!

பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.

ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், சாராசரியாக மனித ஆயுளை 10 சதவீதம் அதிகரிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். பழங்களை, குறிப்பாக ஆப்பிளை தேடிச்செல்லும் வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றின் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகமாக இருப்பதன் மூலமும் இது உறுதியாகி உள்ளது.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...