Saturday, January 12, 2013

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில்

Friday, January 11, 2013

வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

முருங்கை கிரையின்மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய...

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

Wednesday, January 9, 2013

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

Saturday, January 5, 2013

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப்

Thursday, January 3, 2013

மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum)

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

Wednesday, January 2, 2013


அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

அன்பானவர்களே,சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.

அமீரகத்தில் (Dubai)இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று. துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...