பெண்கள் பகுதி


women-catagory

   

 குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் பெண்கள்

நமது நாட்டில் பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். தற்போது பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர்.

'நாம் இருவர் நமக்கேன் இன்னும் ஒருவர்' என்ற புதுமொழியை உருவாக்கும் பெண்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டனராம். முன்பெல்லாம் குழந்தை பெறுவதில் கணக்கே இருக்காது. உடம்பு தாங்கும் வரை பிள்ளை பெற்றுக் கொள்வார்கள் அந்தக் காலத்துப் பெண்மணிகள். இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் பல குழந்தைகள் அன்று இருந்தனர்.

ஆனால் இன்று 'கூட்டமே' இல்லாத குடும்பங்கள்தான் அதிகமாக உள்ளது. குழந்தை பெற்றுக் கொள்ள இந்தக் காலத்துப் பெண்கள் தயங்க பல காரணங்கள் உள்ளன. வேலைக்குப் போகும் பெண்களாக இன்றைய மகளிர் அதிகளவில் இருப்பதால் வேலைக்கும் போய்க் கொண்டு குழந்தையையும் பார்த்துக் கொள்ள சிரமப்படுகின்றனர்.

குழந்தை பெற்றால் எடை அதிகரித்து அழகு போய் விடும். உடல் தளர்ந்து விடும், உடல் கட்டு குலைந்து விடும். குழந்தைக்காகவே முழு நேரத்தையும் செலவிட வேண்டும். நினைத்தப்படி நினைத்த இடத்திற்கு எல்லாம் செல்ல முடியாது. கணவரை முன்பு போல் கவனிக்க முடியாது. இதெல்லாம் குழந்தை பெறத் தயங்கும் பெண்கள் கூறும் சில காரணங்கள்.

அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் நேரத்தில் பிரசவ லீவு போட்டால் வரவேண்டிய பதவி உயர்வு போய் விடும். இப்படிப் பல காரணங்களை வைத்திருக்கிறார்கள். இதனால் வேலைக்குப் போகும் பெண்கள் முடிந்த அளவுக்கு குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகின்றனர். நம் பாட்டிமார்கள் 12,13 குழந்தைகள் பெற்றனர்.

நம் அம்மாமார்கள் 2 முதல் 5 வரை பெற்றனர். தற்போதுள்ள தலைமுறை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வது சுமையல்ல அதுவும் ஒரு சுகம் தான் என்பதை இந்தப் பெண்கள் உணர வேண்டும்.

தாய்மைப் பேறு என்பது எல்லோருக்கும் கிடைக்காதது. எத்தனையோ பெண்கள் குழந்தைப் பேறுக்கு வழியில்லாமல் மனதுக்குள் ஒடிந்து புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேறு கிடைக்கும்போது அதை தட்டிக் கழிப்பது நிச்சயம் தவறு.

 

  

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை(புர்க்காவை)பெண்கள் நாங்கள் அணியலாமா???
பதில் :மவ்லவி பீ:ஜெய்னுல்ஆபிதீன் {P:J}

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால் பகுதிகளையும் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும். இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது. பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அணிந்தால் அவர்கள் பர்தாவைப் பேணியவர்களாகி விடுவர்.

ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இயல்பான ஆடைகளுக்கு மேல் கூடுதலாக நீண்ட வேறு ஒரு ஆடையைப் பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். இந்தக் கூடுதலான ஆடை தான் பர்தா என்றும் பலர் கருதுகின்றனர். இவ்வாறு ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் கூடுதலாக ஆடைகளை அணிந்து கொண்டால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஆனால் எல்லோரும் இவ்வாறு தான் அணிய வேண்டும் என்றோ இது தான் இஸ்லாமிய பர்தா முறை என்றோ கட்டாய சட்டமாகக் கூறுவது கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பர்தாவிற்கு என பெண்கள் தனியே எந்த ஒரு ஆடையையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆடை வேறு பர்தா வேறு என்றில்லாமல் பர்தா சட்டத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் தங்களது ஆடை முறையை அமைத்துக் கொண்டார்கள்.

இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம். இக்ரிமா கூறுகிறார் :

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முக்காடு அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மைத் துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.

-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! நான் (ஆயிஷா) இறை நம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சை நிற முக்காடுத்) துணியை விடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது'' என்று சொன்னேன். (இதற்கிடையில்)-அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.


அப்பெண்மணி, "(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதை விட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை'' என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.

நூல்: புகாரி 5825

மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்ட பெண் பச்சை நிறத்தில் முக்காடு அணிந்திருந்தார் என்றும் தனது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துக் காட்டினார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இயல்பான ஆடையைத் தான் தங்களது பர்தாவாக ஆக்கினார்கள் என்பதை இதன் மூலம் புரிகின்றோம். பொதுவாக ஆடைகளை அழகாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்கம் போதிக்கின்றது. இந்த அடிப்படையில் ஆண்கள் எவ்வாறு தங்களது ஆடைகளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள உரிமை பெற்றிருக்கின்றார்களோ அது போன்ற உரிமை பெண்களுக்கும் இருக்கின்றது.

பொதுவாகப் பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று திருக்குர்ஆன் கூறும் அதே வேளையில் வெளிப்படையான அலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கின்றது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் (24:31)

மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்ற அலங்காரங்களை அன்னிய ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

பெண்களின் ஆடைகளில் வெளிப்படையான அலங்காரம் என்பது அவர்கள் அணியும் ஆடையைத் தான் குறிக்கும். தேவை கருதி இந்த அலங்காரத்தை மட்டும் வெளிப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆடைகளில் இரண்டு வகைகள் இருக்கின்றது. சாதாரண ஆடைகள் பிறருடைய கவனத்தை ஈக்கும் வகையில் அமைந்த ஆடைகள். பிறரை ஈர்க்கும் வகையில் அமைந்திராத சாதாரண அலங்காரங்கள் உள்ள ஆடைகளை பெண்கள் அணிவதைத் தான் மேற்கண்ட வசனம் அனுமதிக்கின்றது.

எந்த ஆடைகள் மிகவும் கவர்ச்சியாகவும் பிறர் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கின்றதோ அது போன்ற அலங்கார ஆடைகளைப் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்பு அணிந்துவரக் கூடாது. எனவே பெண்கள் அணியும் பர்தா என்பது பொதுவாக மக்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வகையில் உள்ள அலங்காரங்களைக் கொண்டிருந்தால் அதை அணிவது தவறல்ல. எந்த வகையான அலங்காரங்கள் மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி காட்டக்கூடியதாகவும் பிறர் கவனத்தை தன்பால் ஈர்க்கக் கூடியதாகவும் அமைந்துள்ளதோ அது போன்ற அலங்காரங்கள் உள்ள பர்தாவை அணியக் கூடாது.




கர்ப்பிணி சகோதரிகளின் கவனத்திற்கு..........!!
இறைவனின் படைப்பில் அனைத்து உயிர்களும் இயற்கையான சுகப்பிரசவமாகவே படைக்கப்பட்டுள்ளது.

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் எனக்கு சிசேரியன்தான் ஆச்சு என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. அந்தக் காலத்தைப் போல பிரசவ வலி எடுத்து, பிரசவிக்கும் வேதனையை அனுபவித்து, மறு பிறவி எடுத்து, கடும் போராட்டத்துக்குப் பின்னர் பெற்றெடுத்த குழந்தையின் முகம் பார்த்து பட்ட வேதனையையெல்லாம் அப்படியே மறந்து பூரிப்புடன் மகி்ழ்ச்சிப் பெருக்கில் அயர்ந்து போகும் பாக்கியம் நிறையப் பெண்களுக்குக் கிடைகப்பதில்லை. அதற்குக் காரணம், பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியன் எனப்படும் அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறுவதுதான்.

அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் சுகப் பிரசவமே நடைபெறுகிறது. பிரச்சினை என்று வந்தால் மட்டுமே அங்கு சிசேரியனுக்குப் போகிறார்கள். ஆனால் 99 சதவீத தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன்தான் கடைப்பிடிக்கப்படுகிறது.

இருப்பினும் இயற்கையான அதாவது சுகப் பிரசவமே நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இப்போதும் கூட சுகப் பிரசவம் சாத்தியமானதுதான். அதற்கு சில வழிமுறைகளை கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதைச் செய்தாலே போதும், சுகப் பிரசவமாக முடியும் என்கிறார்கள் அவர்கள்.

ஆரோக்கியமாக இருங்கள் :

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான முறையில் இருக்க பெண்கள் முயல வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இதன் மூலம் உடல் தெம்பு அதிகரிக்கும், மன வலிமையும் கட்டுக்கோப்பாக இருக்கும். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது 40 யானைகளை கட்டி இழுப்பதற்குச் சமம் என்பார்கள் பெரியவர்கள். எனவே அந்த அளவுக்கு நமது உடலில் தெம்பும், வலிமையும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்தானே. நல்ல சத்தான, போஷாக்கான, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட்டு வருவது அவசியம்.

சாப்பிடுவதில் நேரம் தவறாமை :

சாப்பிடுவதில் நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். மேலும் சரியான உணவையே சாப்பிடுவது அதை விட முக்கியமானது. பசி வரும்போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நெடு நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு டைம் வைத்துக் கொண்டு அந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது. மேலும் டாக்டர்கள் கூறும் ஆலோசனைப்படி டயட்டைக் கடைப்பிடிப்பதும் நல்லது. கூடுமானவரை சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

நிறைய தண்ணீர் குடியுங்கள் :

அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டியது இன்னொரு முக்கியமான விஷயம். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கும் நல்லது செய்கிறதாம். ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமாம்.

நிறைய நடங்க :

மற்ற சமயங்களில் எப்படியோ, கர்ப்ப காலத்தில், அதாவது தொடக்க மாதங்களுக்குப் பிறகு கர்ப்பிணிப் பெண்கள் நிறைய நடக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கிறோம், அதிகமாக வேலை செய்யக் கூடாது என்று அமைதியாக உட்கார்ந்தே இருந்தால் ஆபத்து. நீங்கள் கர்ப்பமாகத்தான் இருக்கிறீர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை. எனவே கர்ப்ப காலத்திலும் நடை பயிற்சி உள்ளிட்டவை தேவைதான். அதை கைவிடக் கூடாது. வழக்கம் போல வேலைகளைச் செய்யலாம், காலை அல்லது மாலையில் நன்றாக நடக்கலாம். இல்லாவிட்டால் முதுகுப் பிடிப்பு உள்ளிட்ட பல சிரமங்களை சந்திக்க நேரிடுமாம். பிரசவ தேதிக்கு கடைசி நாள் வரை நடக்கலாமாம். நடைபயிற்சியானது, இயற்கையான பிரசவத்திற்கான பாஸ்போர்ட் என்கிறார்கள் டாக்டர்கள்.

உடற்பயிற்சி :

கர்ப்ப காலத்தின்போது சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த ஆலோசனையின் பேரில் எடுப்பது முக்கியமானது. உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் இது உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறதாம். மேலும் பெண்களின் பிறப்புறுப்பை இளக்கமாக வைத்திருக்கவும், இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும் என்பதும் மருத்துவர்களின் கருத்து.

ஆலோசனை வகுப்புகள் :

உடல் ரீதியான பலம் மட்டுமல்லாமல் மன ரீதியான பலமும் மிக அவசியம் என்பதால் கர்ப்பிணிகளுக்காகவே இப்போது ஆங்காங்கு நடத்தப்படும் ஆலோசனை வகுப்புகளுக்குப் போய் அட்வைஸ் கேட்கலாம். மேலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கூட இதுபோன்ற வகுப்புகளை நடத்துகிறார்கள். அங்கு போகலாம். பிரசவம் என்றால் என்ன, எப்படி பிரசவம் நடைபெறுகிறது, குழந்தை எப்படி உருவாகி, எப்படி பிறக்கிறது, பிரசவத்தின்போது என்னென்ன செய்வார்கள், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்வது பிரசவம் குறித்து நமது மன நிலையை பக்குவப்படுத்த பெரிதும் உதவும்.

அந்தக் காலத்தில் வீட்டில் தவறாமல் ஒரு பாட்டி இருப்பார். குடும்பத்தில் யாராவது கர்ப்பம் தரித்தால் அந்தப் பாட்டிதான் ஆலோசகராக இருந்து பல அறிவுரைகளைக் கூறி தெம்பூட்டுவார். அது போக தனக்குத் தெரிந்த பாட்டி வைத்தியத்தை செய்து கர்ப்பிணிகளுக்குப் பேருதவியாக இருப்பார். என்ன சாப்பிட வேண்டும், எப்படி உட்கார வேண்டும், எப்படி எழுந்திருக்க வேண்டும், எப்படி படுக்க வேண்டும் என்பது முதல் கொண்டு அனைத்திலும் உதவியாக இரு்பபார்.

ஆனால், இப்போது பாட்டிளை எல்லாம் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் 'போட்டு விட்டனர்' இந்தக் கால தலைமுறையினர். எனவே இதுபோன்ற முக்கியமான அட்வைஸ்களைப் பெறும் வாய்ப்பு இப்போது கிட்டத்தட்ட இல்லாமலேயே போய் விட்டது. எனவே படித்தோ, நெட்டில் பார்த்தோ, டாக்டர்களிடம் கேட்டோதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இருந்தாலும் சிசேரியனை தவிர்த்து இயற்கையாக பிரசவிக்க முடியும் என்ற நம்பிக்கையை மனதில் வரித்துக் கொண்டு அதற்கான வழிகளை உரிய ஆலோசனையின் பேரில் கடைப்பிடித்தால் நிச்சயம் நீங்களும் சுகமாக, இயற்கையாக பிரசவிக்கலாம் இறை அருளால்.



பெண் நறுமணத்துடன் வெளியேறுதல்

பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அஹமத்)

வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் -அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே- கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி, பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

திருமணங்களிலும் பெண்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளப்புறப்படும் பெண்கள் நறுமணங்களும் சந்தனப் புகையும் இட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனதை ஈர்க்கும் நறுமணங்களை பூசிக் கொண்டு கடை வீதிகளிலும், வாகனங்களிலும், ஆண், பெண் இருபாலரும் கலக்கும் இடங்களிலும் உலாவருகின்றனர். அல்லாஹ்தான் இப்பெண்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்!

வெளி இடத்திற்கு செல்லும் பெண்கள் நிறம் வெளிப்படையாக தெரியக் கூடிய, அதே சமயம் அதிக மணமற்ற நறுமணங்களை மட்டுமே பயன்படுத்த பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ -உனது தண்டணையால்- பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக!

தாயத்தை கட்டாதீர்கள்


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)


இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)









புதுப்பெண்ணே புதுப்பெண்ணே, இதையும் பாரு...!

சமீபத்தில் தான் உங்களுக்கு திருமணமாகி புகுந்த வீடு வந்திருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்குத்தான்.

புதிய இடம், புதிய சூழல், கணவர் வீட்டில் அறிமுகம் இல்லாத மனிதர்கள் என்று பலருக்கும் நீங்கள் ஆரம்பத்தில் காட்சிப் பொருளாகத்தான் தெரிவீர்கள். உங்கள் சொல், செயல் எல்லாமே ஆரம்பத்தில் அவர்கள் பார்வைக்கு போகும். நீங்கள் அறிந்திராத நேரத்தில் உங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த இடத்தில் தான் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்பட வேண்டும். புகுந்த வீட்டில் உங்கள் விஷயமாய் எந்த செய்தி உங்கள் காதுக்கு வந்தாலும் அதைப்பற்றி நீங்கள் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளக் கூடாது. இதெல்லாமே நீங்கள் குடும்பத்தை அனுசரித்துப் போகிற பெண்ணா என்பதற்கான ரகசிய தேர்வாகக்கூட இருக்கும்.

உங்களை தங்கள் வீட்டுப் பெண்ணாக தேர்ந்தெடுத்தவர்கள் எடுத்த எடுப்பிலேயே வந்து திருமணத்துக்கு நாள் குறித்து விடவில்லையே..! உங்கள் குடும்பம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட பிறகு தான் உங்களைப் பெண் பார்க்கவே வந்தார்கள். பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் உங்களிலும் உங்கள் குடும்பத்திலும் இருப்பதாக உணர்ந்ததால் மட்டுமே தங்கள் வீட்டுப் பெண்ணாக ஏற்றுக் கொண்டார்கள்.

இருக்கட்டும். அப்புறம் ஏன் இந்த மாதிரியான பரிசோதனை? அங்கே தான் விஷயமே இருக்கிறது.

பெற்றவர்களின் குணநலன்கள் பலவும் பிள்ளைகளிடம் அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்டிருக்கும். அதில் சந்தேகம் இல்லை.

'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை' என்ற பழமொழி வந்த பின்னணியும் அதுதான். அதோடு அப்போதெல்லாம் பெண்கள் வயதுக்கு வந்து விட்ட அடுத்தகட்டமாய் திருமணம் பற்றிய சிந்தனை மட்டுமே பெற்றோர் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அதுவரை தங்கள் பிள்ளைகளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வார்கள்.

இப்போது அப்படியா? பெண்கள் படிக்கிறார்கள். கல்லூரிக்குப் போகிறார்கள். படிப்பை முடித்ததும் வேலை கிடைத்து அதையும் செய்கிறார்கள். இந்த காலகட்டங்களில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் குணநலன்கள் என பலவற்றையும் இவர்களும் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சம்பாதிக்கும் பெண்கள் தங்கள் தொழில் நிமித்தமாய் நட்பு ரீதியில் ஆண்களுடனும் பேசிப்பழக வேண்டியிருக்கிறது. இப்படி அனுதினம் வழுக்குப்பாறை ஏறி ஏறி திருமணம் வரை ஒரு ரேஸ் வாழ்க்கையை தொடரும் பெண்களுக்கு பெற்றோரின் குணநலன் மட்டுமே பிரதானமாக இருக்குமா?

சமிபத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் இது. அந்தப் பெண் தன் தோழியிடம் போனில் பேசும்போது எதிர்பாராமல் ஒரு புது வார்த்தையை பிரயோகித்து இருக்கிறாள். அந்த வார்த்தை அவர்கள் குடும்பத்தில் யாரும் அறிந்திராதது. அது நல்ல வார்த்தையா அல்லது கெட்ட வார்த்தையா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

மகள் பேசி முடித்ததும் குற்றச்சாட்டு மாதிரி இல்லாமல் இயல்பாக பேசுவதுபோலவே மகளிடம் அந்த வார்த்தைக்கான அர்த்தம் கேட்டார் அம்மா. மகளோ சிரித்தபடி, 'அது எங்கள் நட்பு வட்டத்தில் உபயோகிக்கும் ஒரு கெட்ட வார்த்தை. அதன் அர்த்தம் வேண்டாமே' என்று சொல்லி சிரித்திருக்கிறாள்.

தங்களைத் தாண்டிய ஒரு வெளிவட்டம், இன்னொரு உலகத்தை அவர்களிடம் அறிமுகப்படுத்தி விடுகிறது. இதனால் பலர் அல்ல, சிலராவது தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தில் இருந்து விலகிப் போகும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் தான் குடும்பம் பார்த்து பெண் எடுத்தாலும் புது மருமகளின் வெளிநட்பு எந்த அளவுக்கு அவளை பற்றிப் பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதமாய் அந்த புது மருமகள் கவனிக்கப்படுகிறாள்.

இதுபற்றித் தெரிந்தாலும் புது மருமகள் அதைப்பற்றிக் கண்டு கொள்ளாமல் தனது புதிய குடும்பத்தின்மீது தனது அக்கறையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திக்கொண்டாலே இந்த மாதிரியான சந்தேகச் சாயல்கள் தோன்றி வேகத்திலேயே மறைந்து போகும் மின்னல் போல் ஓடிவிடும் என்பது நிச்சயம்.
பொய் சொல்கிறார் தெரியுமா? 





பெண்களே! எப்பொழுதெல்லாம் உங்கள்கணவர் பொய் சொல்கிறார் தெரியுமா?

கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று ''என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு?'' என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?. உடனே ''சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா'' என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். ''சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே. நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு 'அதை'ப் பார்க்கணும்'' என்பார்கள்.

இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான். ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே உணர்வார்கள்.

அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். இருந்தாலும், சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம்.

கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் சில ஆண்கள்.

இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை மனதில் கொள்வது நல்லது.







































































































































































































































































































































































































































































கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்






குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க


ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்....? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, http://www.facebook.com/l/125d3zRz3kxDR9pgEDRs7ShMW0g;ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா....? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸும் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?






இல்லவே இல்லை...! மனைவியின் எதிர்பார்ப்பே வேறு விதமானது. அவள் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்று கணவன் தெரிந்து கொண்டாலே அவர்களுடைய இல்லற வாழ்க்கை இன்னும் அன்னியோன்யம் கூடியதாக அமையும்!






கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள் இவை தான்






இதோ ஆண்களே... உங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள இதைப் படியுங்கள்....






அன்பாக பிரியமாக இருங்கள்... அதுவே ஆயிரக்கணக்கான மதிப்புள்ள புடவைகள் தராத மகிழ்ச்சியைத் தரும்!.






மனது புண்படும்படி பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உள்ள பிரியத்தைக் கூட சில சமயங்களில் குறைத்துவிடக் கூடும். அது போல அடிக்கடி கோபப்படவும் செய்யாதீர்கள்.






சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. பல கணவன்மார்கள் இதைத்தான் பெரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உப்பு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், இன்னிக்கி சமையல் சூப்பரா இருக்கு என்று முதலில் பாராட்டிவிடுங்கள். அப்புறம் மெதுவாக கொஞ்சம் உப்பைக் குறைச்சு போட்டிருக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி விஷயத்தைப் புரிந்து கொண்டு அடுத்த முறை இன்னும் சூப்பராக சமைப்பார்!






எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. பலர் முன்னிலையில் திட்டவோ, மரியாதைக் குறைவாகவோ பேசாதீர்கள். இது உங்கள் அன்யோன்யத்தைக் குறைத்துவிடும்.






உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு மனைவியுடன் செல்லுங்கள். அது மனைவிக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதாக தோன்றச் செய்யும்.






எந்த ஒரு விஷயத்தையும் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.






மனைவி சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். காதுக்கு வைரத்தோடு வாங்கித் தருவதைவிட சந்தோஷம் தரும் விஷயம் இது.






மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நிறைய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.






மனைவி வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசித்துப் பாராட்டுங்கள்.






மாதம் ஒரு முறையாவது வெளியில் கூட்டிக் கொண்டு போங்கள். உங்கள் பேரிலுள்ள கோபம்கூட ஓடி விடும்.






பிள்ளைகள் படிப்பில் அக்கறை கொண்டு உதவி செய்யுங்கள். அப்படிச் செய்தால் மனைவிக்கு இன்னும் உங்கள் மீதுள்ள காதலை அதிகப்படுத்தும்.






இரவு விழித்து அழும் குழந்தையைப் பார்ப்பதில் உங்களுக்கு இருக்கும் அதே கஷ்டம் போலத்தான் உங்கள் மனைவிக்கும் இருக்கும். எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்.






மனைவி உடல்நலம் இல்லாமல் இருக்கும் பொழுது அக்கறையுடன் உடன் இருந்து கவனியுங்கள். அவளுடைய சின்னச்சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்து சிறு சிறு உதவிகள் செய்தாலே அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.






அம்மாவிடம் காட்டும் பாசத்தை மனைவியிடமும் காட்டுங்கள். தாயளவுக்கு தாரமும் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்தான்!






எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள். குடும்பத்தில் பல குழப்பங்களைத் தடுக்க இது உதவும்.






மனைவியின் பிறந்த நாளை அவரைக் கேட்காமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு கட்டாயம் ஏதாவது சிறு பரிசாவது வாங்கிக் கொடுங்கள். அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் பரிசாகக் கொடுக்கலாம்.






ரொம்ப முக்கியமான விஷயம் இது... மனைவியிடம் பொய் பேசாமல் இருங்கள்.


கடைசியாக... கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கணவனையே மனைவி கடவுள் தனக்குத் தந்த பெரும் வரமாக நினைப்பாள்.






பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!














(மணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக)

ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா......!


ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத... புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். ஆகவே, ஓரளவுக்காவது அந்த புரியாத புதிரை புரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சி.




கட்டுரையின் கடைசியில்... உங்கள் சந்தோஷத்துக்காக ஒரு... ?!




சரி...! ஆராய்ச்சிக்கு வருவோம்;




ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், ஆனால் விவாதங்களில் அவர்களால் வெல்ல முடிவதில்லை என்பது தற்போதைய ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.




ஆண்களின் மூலையை விட பெண்களின் மூலை சிறியதாக இருந்தும் கூட பெண்களே பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவின் பல்டமோர் நகரத்து பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.


ஆண் பெண் இருபாலாரின் சிறுமூலை பெருமூலை என்ற இருமூலைகளிலும் பேச்சில் ஈடுபடக்கூடிய பகுதிகளை அந்த ஆராய்சியாளர்கள் ஒத்துப் பார்த்தார்கள். அவ்விரு பகுதிகளிலும் பெண்களே அதிக அடர்த்தியான உயிரணுக்களைப் பெற்றிருந்தனர்.பெண்கள் ஏன் அதிக பேசும் திறனை பெற்றிருக்கின்றனர் என்பதை விளக்க இந்த ஆராய்சி உதவுகிறது என்று தாமஸ் க்ளாபர் கூறினார்.


கல்வியாலும் சுற்றுப்புற சூழலை அமைக்கிற காரணிகளாலும் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசும் திறனை பெற்றனர் என்ற நம்பிக்கைக்கு இந்த ஆராய்சியின் முடிவுகள் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.


ஆனால் விவாதம் என்று வந்து விடுமானால் பெண்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் வல்லவர்கள். நூறு சதவிதம் சரியான பக்கத்தில் இருந்து கொண்டு பெண்கள் விவாதம் புரிந்தாலும் அவர்கள் கிட்டத்தட்ட எப்போதும் தவறான பக்கத்தில் இருப்பதாகவே பிறரால் பார்க்கப்படுகிறார்கள் என்பதை ஒரு ஆராய்சி உறுதி செய்கிறது.


தங்களிடம் எதிர்வாதம் புரியும்படி ஆண்களை தூண்டிவிடுகிற போதெல்லாம் பெண்கள் வாதம் புரிய தயாராகி விடுவார்கள், தான் உணர்சி வசப்பட்டு விட்டதாக தங்களுக்கு தாங்களே ஒரு சாயத்தைப் பூசிக் கொண்டு வாதத்தை நிறுத்திக் கொள்வார்கள்.


பிரிட்டானிய மனநோய் மருத்துவர் டாக்டர் எலிசபெத் மேப்ஸ்டோன் என்பவர் குறிப்பாக 600 நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் அவ்விரு பாலாருக்கும் இடையே நடக்கக் கூடிய வாய்த்தகராறுகளை டைரியில்; எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். 15 வருடங்களாக அந்த தகராறில் பயன்படுத்திய வார்த்தைகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.


நியாயமாகவும் காரணத்தோடும் நடப்பதாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள், கோபம், அச்சம் இது போன்ற மற்ற உணர்வுகளுக்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்களாக பெண்களை நடத்துகிறார்கள் என்று எலிசபெத் கூறுகிறார்.

பெண்கள் ஆண்களோடு செய்யும் விவாதங்களில் உணர்வுபூர்வமான அறிவுப்பூர்வமற்ற தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க முயற்சிக்கும் போது திணறிப் போய் விடுகிறார்கள், அதனாலேயே அவர்களது வாதம் எடுபடாமல் போய் விடுகிறது.


எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு.




அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான்.






கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வய துக்குரிய பெண்களிடம், ''எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்'' என்ற கேள்விக்கு நான்கு குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று பதில் கூறினர்.

அவர்கள் கூறிய நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விஷயங்கள், உடல் ரீதியான கவர்ச்சி, கருணை உள்ளம் இவையே பெண்கள்'டிக்' செய்த குணங்கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு பெண்கள் என்றால் மிகவும் விருப்பமான விஷயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நீண்ட நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டமில்லாத ஆண்களையே பிடிக்குமாம்!


நிர்வாகத் திறன் என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை குணத்துடன் செயல்படும் பெண்கள் நிச்சயமாக இறைவனின் அருட் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.




நிதி நிர்வாகத்திலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி விஷயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர் பெண்கள். வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஆபரணங்கள் மற்றும் கார் வாங்குவதில் கூட துல்லியமாக கணித்து வாங்குவதில் பெண்கள் கில்லாடிகள்! தொலை நோக்குப் பார்வையில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது என்பதே நிதர்சன உண்மை.




இன்றைய நவநாகரீகப் பெண்கள் இணையதளம், ஈமெயில் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு லண்டன் சர்வே. அதுமட்டுமின்றி, ஷாப்பிங், பயணம் போன்ற அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத் துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள்.




பெண்கள் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்கிறார்கள் கணவன்மார்கள். அவர்கள் ஒரு வீட்டையோ அல்லது மனிதர்களையோ ஒரு முறை பார்த்தாலே போதும், துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.




அதேபோல் தங்களுடைய கணவன்மார்களின் தவறுகளை… மனதில் இருக்கும் விஷயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அதனால்தான் கல்யாணமான ஆண்கள், தங்கள் மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.




இன்றைய அவசர உலகில் சைக்கிள், டூவீலர், கார் மற்றும் இதர வாகனங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். இந்த வாகனங்களை ஆண்கள் ஓட்டும்போது அதிக வேகம், போதை, கவனமின்மை போன்ற காரணங்களால் 77 சதவீதம் விபத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஆனால் பெண்கள் இந்த வாகனங்களை ஓட்டும்போது விபத்து என்பது மிகமிக குறைவு என்பது பெண்களுக்கான போனஸ் குணம் என்கிறது அந்த ஆய்வு.

உடல் ஆரோக்கியத்திற்கான விஷயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். குறிப்பாக பற்கள் விஷயத்தில்… உணவுகளை மட்டுமே பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆரோக்கியம் கெடும் வாய்ப்பு குறைவு. மேலும் பெண்கள் எப்போதும் பற்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.


எப்போதுமே பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். மேலும் எதையும் நன்கு யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் என்பதும் குறைவு. இதனால் அவர்கள் அடிக்கடி சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கி முழிப்பதில்லை என்பதும் பெண்களுக்கான சிறப்பு.

கல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களுடைய ''டிகிரியில்'' கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். படிக்கும் விதத்திலும் ஆண்களைவிட பெண்கள் வித்தியாசப்படுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தேர்வுக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு வரை, அதிகாலை என்று படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையே படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.சரி... எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?


பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம்.


ஆனால் ஆண்கள் அப்படியில்லை… பல நாட்கள் துவைக்காத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சாக்ஸ், அலசப்படாத தலை முடி மற்றும் உடை விஷயங்களில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட ஆண்களை பொதுவாகவே பெண்கள் வெறுக்கின்றனர். பொது இடங்களில் கூடும்... பேசும் கூட்டங்களில் பெண்களின் பேச்சு மிகவும் தெள்ளத்தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டம், வாடிக்கையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட இடங்களில் பெண்களின் பேச்சும், செயலும் நாளுக்குநாள் மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பெண்களின் உடல் நலம் மற்றும் மன உறுதி.


அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாத நபரிடம், தேவையில்லாமல் பேசும் பலவீனம் பெண்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகை, மது, சூது போன்ற கெட்ட விஷயங்களிலும் பெண்களுக்கு நாட்டமில்லாததால் இவர்களுடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை. பெண்களைப் புரிந்து கொள்ளாத எந்த ஆணின் வாழ்க்கையும் இனிக்காது என்பது எதார்த்தமான உண்மை. கணவன் மனைவிக்கிடையில் நகைச்சுவை உணர்வு இருந்தால் அங்கு சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்!


இதோ ஒரு நகைச்சுவை காட்சி உங்களுக்காக!



மனைவி: ''என்னங்க, துவரம் பருப்பு இல்லை.


மல்லி இல்லை. தேங்காய் எண்ணெய் இல்லை.


ஜீனி இல்லை. ஆஃபிஸிலிருந்து வரும்போது


வாங்கிட்டு வாங்க...'' கணவன்: ''ஏன்டி, ஆஃபிஸ் போகும்போது,


''இல்லை, இல்லை''ன்னு சொல்லி


எரிச்சலைக் கிளப்புற?''


புத்திசாலியான மனைவியின் பதில்: ''என்னங்க, துவரம் பருப்பு டப்பா காலியா இருக்கு.


மல்லி டப்பா காலியா இருக்கு.


தெங்காய் எண்ணெய் பாட்டில் காலியா இருக்கு.


ஜீனி டப்பா காலியா இருக்கு... இப்ப ஓகேயா?''






Posted by: Abu Safiyah






பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
















(மணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக)

ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா......!


ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத... புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். ஆகவே, ஓரளவுக்காவது அந்த புரியாத புதிரை புரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சி.




கட்டுரையின் கடைசியில்... உங்கள் சந்தோஷத்துக்காக ஒரு... ?!




சரி...! ஆராய்ச்சிக்கு வருவோம்;











பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!!!






(மணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக)


ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா......!


ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத... புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். ஆகவே, ஓரளவுக்காவது அந்த புரியாத புதிரை புரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சி.


கட்டுரையின் கடைசியில்... உங்கள் சந்தோஷத்துக்காக ஒரு... ?!





சரி...! ஆராய்ச்சிக்கு வருவோம்;





ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், ஆனால் விவாதங்களில் அவர்களால் வெல்ல முடிவதில்லை என்பது தற்போதைய ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.


ஆண்களின் மூலையை விட பெண்களின் மூலை சிறியதாக இருந்தும் கூட பெண்களே பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவின் பல்டமோர் நகரத்து பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.


ஆண் பெண் இருபாலாரின் சிறுமூலை பெருமூலை என்ற இருமூலைகளிலும் பேச்சில் ஈடுபடக்கூடிய பகுதிகளை அந்த ஆராய்சியாளர்கள் ஒத்துப் பார்த்தார்கள். அவ்விரு பகுதிகளிலும் பெண்களே அதிக அடர்த்தியான உயிரணுக்களைப் பெற்றிருந்தனர்.பெண்கள் ஏன் அதிக பேசும் திறனை பெற்றிருக்கின்றனர் என்பதை விளக்க இந்த ஆராய்சி உதவுகிறது என்று தாமஸ் க்ளாபர் கூறினார்.


கல்வியாலும் சுற்றுப்புற சூழலை அமைக்கிற காரணிகளாலும் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசும் திறனை பெற்றனர் என்ற நம்பிக்கைக்கு இந்த ஆராய்சியின் முடிவுகள் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.


ஆனால் விவாதம் என்று வந்து விடுமானால் பெண்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் வல்லவர்கள். நூறு சதவிதம் சரியான பக்கத்தில் இருந்து கொண்டு பெண்கள் விவாதம் புரிந்தாலும் அவர்கள் கிட்டத்தட்ட எப்போதும் தவறான பக்கத்தில் இருப்பதாகவே பிறரால் பார்க்கப்படுகிறார்கள் என்பதை ஒரு ஆராய்சி உறுதி செய்கிறது.


தங்களிடம் எதிர்வாதம் புரியும்படி ஆண்களை தூண்டிவிடுகிற போதெல்லாம் பெண்கள் வாதம் புரிய தயாராகி விடுவார்கள், தான் உணர்சி வசப்பட்டு விட்டதாக தங்களுக்கு தாங்களே ஒரு சாயத்தைப் பூசிக் கொண்டு வாதத்தை நிறுத்திக் கொள்வார்கள்.


பிரிட்டானிய மனநோய் மருத்துவர் டாக்டர் எலிசபெத் மேப்ஸ்டோன் என்பவர் குறிப்பாக 600 நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் அவ்விரு பாலாருக்கும் இடையே நடக்கக் கூடிய வாய்த்தகராறுகளை டைரியில்; எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். 15 வருடங்களாக அந்த தகராறில் பயன்படுத்திய வார்த்தைகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.


நியாயமாகவும் காரணத்தோடும் நடப்பதாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள், கோபம், அச்சம் இது போன்ற மற்ற உணர்வுகளுக்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்களாக பெண்களை நடத்துகிறார்கள் என்று எலிசபெத் கூறுகிறார்.


பெண்கள் ஆண்களோடு செய்யும் விவாதங்களில் உணர்வுபூர்வமான அறிவுப்பூர்வமற்ற தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க முயற்சிக்கும் போது திணறிப் போய் விடுகிறார்கள், அதனாலேயே அவர்களது வாதம் எடுபடாமல் போய் விடுகிறது.


எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு.


அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான்.


கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வய துக்குரிய பெண்களிடம், ''எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்'' என்ற கேள்விக்கு நான்கு குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று பதில் கூறினர்.


அவர்கள் கூறிய நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விஷயங்கள், உடல் ரீதியான கவர்ச்சி, கருணை உள்ளம் இவையே பெண்கள் 'டிக்' செய்த குணங்கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு பெண்கள் என்றால் மிகவும் விருப்பமான விஷயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நீண்ட நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டமில்லாத ஆண்களையே பிடிக்குமாம்!


நிர்வாகத் திறன் என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை குணத்துடன் செயல்படும் பெண்கள் நிச்சயமாக இறைவனின் அருட் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.





நிதி நிர்வாகத்திலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி விஷயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர் பெண்கள். வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஆபரணங்கள் மற்றும் கார் வாங்குவதில் கூட துல்லியமாக கணித்து வாங்குவதில் பெண்கள் கில்லாடிகள்! தொலை நோக்குப் பார்வையில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது என்பதே நிதர்சன உண்மை.





இன்றைய நவநாகரீகப் பெண்கள் இணையதளம், ஈமெயில் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு லண்டன் சர்வே. அதுமட்டுமின்றி, ஷாப்பிங், பயணம் போன்ற அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத் துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள்.





பெண்கள் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்கிறார்கள் கணவன்மார்கள். அவர்கள் ஒரு வீட்டையோ அல்லது மனிதர்களையோ ஒரு முறை பார்த்தாலே போதும், துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.


அதேபோல் தங்களுடைய கணவன்மார்களின் தவறுகளை… மனதில் இருக்கும் விஷயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அதனால்தான் கல்யாணமான ஆண்கள், தங்கள் மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.


இன்றைய அவசர உலகில் சைக்கிள், டூவீலர், கார் மற்றும் இதர வாகனங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். இந்த வாகனங்களை ஆண்கள் ஓட்டும்போது அதிக வேகம், போதை, கவனமின்மை போன்ற காரணங்களால் 77 சதவீதம் விபத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஆனால் பெண்கள் இந்த வாகனங்களை ஓட்டும்போது விபத்து என்பது மிகமிக குறைவு என்பது பெண்களுக்கான போனஸ் குணம் என்கிறது அந்த ஆய்வு.


உடல் ஆரோக்கியத்திற்கான விஷயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். குறிப்பாக பற்கள் விஷயத்தில்… உணவுகளை மட்டுமே பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆரோக்கியம் கெடும் வாய்ப்பு குறைவு. மேலும் பெண்கள் எப்போதும் பற்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.


எப்போதுமே பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். மேலும் எதையும் நன்கு யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் என்பதும் குறைவு. இதனால் அவர்கள் அடிக்கடி சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கி முழிப்பதில்லை என்பதும் பெண்களுக்கான சிறப்பு.


கல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களுடைய ''டிகிரியில்'' கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். படிக்கும் விதத்திலும் ஆண்களைவிட பெண்கள் வித்தியாசப்படுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தேர்வுக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு வரை, அதிகாலை என்று படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையே படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.சரி... எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?


பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம்.


ஆனால் ஆண்கள் அப்படியில்லை… பல நாட்கள் துவைக்காத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சாக்ஸ், அலசப்படாத தலை முடி மற்றும் உடை விஷயங்களில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட ஆண்களை பொதுவாகவே பெண்கள் வெறுக்கின்றனர்.


பொது இடங்களில் கூடும்... பேசும் கூட்டங்களில் பெண்களின் பேச்சு மிகவும் தெள்ளத்தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டம், வாடிக்கையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட இடங்களில் பெண்களின் பேச்சும், செயலும் நாளுக்குநாள் மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பெண்களின் உடல் நலம் மற்றும் மன உறுதி.


அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாத நபரிடம், தேவையில்லாமல் பேசும் பலவீனம் பெண்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகை, மது, சூது போன்ற கெட்ட விஷயங்களிலும் பெண்களுக்கு நாட்டமில்லாததால் இவர்களுடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை.











பெண்களைப் புரிந்து கொள்ளாத எந்த ஆணின் வாழ்க்கையும் இனிக்காது என்பது எதார்த்தமான உண்மை.

கணவன் மனைவிக்கிடையில் நகைச்சுவை உணர்வு இருந்தால் அங்கு சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்!


இதோ ஒரு நகைச்சுவை காட்சி உங்களுக்காக!






மனைவி: ''என்னங்க, துவரம் பருப்பு இல்லை.


மல்லி இல்லை. தேங்காய் எண்ணெய் இல்லை.


ஜீனி இல்லை. ஆஃபிஸிலிருந்து வரும்போது


வாங்கிட்டு வாங்க...''


கணவன்: ''ஏன்டி, ஆஃபிஸ் போகும்போது,


''இல்லை, இல்லை''ன்னு சொல்லி


எரிச்சலைக் கிளப்புற?''





புத்திசாலியான மனைவியின் பதில்:

''என்னங்க, துவரம் பருப்பு டப்பா காலியா இருக்கு.


மல்லி டப்பா காலியா இருக்கு.





தெங்காய் எண்ணெய் பாட்டில் காலியா இருக்கு.


ஜீனி டப்பா காலியா இருக்கு... இப்ப ஓகேயா?''






என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..


"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக"
அல் குர்ஆன் 14:41.
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.


__._,_.___




No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...