இஸ்லாம்

islam

'







இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும். இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'
-குர்ஆன் 31:29
இந்த வசனம் பூமியில் நடைபெறும் இரவு பகல் இயக்கம் என்பது பகலை இரவில் நுழைப்பதாலும் இரவைப் பகலில் நுழைப்பதாலும் ஏற்படுவதாகும் என்று விளக்குகிறது. இதிலிருந்து இரவு பகல் இயக்கத்தைத் தோற்றுவிப்பது புவி மையக் கோட்பாடு அல்ல என்றும் சூரிய மையக் கோட்பாட்டின் படிதான் இரவு பகல் உண்டாகிறது என்றும் ஒரு அறிவியல் அறிஞரைப் போல் குர்ஆன் பேசுகிறது.

புவி மையக் கோட்பாடு என்பது சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாக கொண்டு சுழல்கின்றன எனும் பிழையான தத்துவமாகும். இதைத்தான் பல அறிஞர்களும் உண்மை என்றும் நம்பி வந்தார்கள். இங்கு சூரியன் பூமியைச் சுற்றுவதாக இருந்தால் இரவு எப்போதும் பகலுக்குப் பிறகு ஓடிக் கொண்டிருக்குமே அன்றி அது எங்குமே நகராமல் நிற்பதில்லை. இரவை நகராமல் நிறுத்த முடியாவிடில் அதற்குள் பகலை எவ்வாறு நுழைக்க முடியும்? அவ்வாறே பகலை நகராமல் நிறுத்த முடியாவிட்டால் பகலுக்குள் இரவை எவ்வாறு நுழைக்க முடியும்? ஒரே ஒரு வழியே உண்டு. பகலை விட இரவை விரட்டினால் பகல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அதற்குள் இரவை நுழைத்து விட முடியும். அப்படிச் செய்தால் இரவானது திரும்பத் திரும்ப பகலுன்னுள் நுழையுமே அன்றி பகல் எப்போதுமே இரவுக்குள் நுழையாது. ஆனால் குர்ஆனோ பகலுக்குள் இரவு நுழைவது போல் இரவுக்குள் பகலும் நுழைவதாகக் கூறுகிறது.

எவ்வளவு துல்லியமாக சிறந்த கவனத்தோடு கையாளப்பட்ட இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இப்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதால் மட்டும் பகலோ இரவோ ஏதேனும் ஒன்று ஏதேனும் ஒன்றுக்குள் நுழைய முடிகிறதா? இல்லவே இல்லை. ஏன்? ஏனெனில் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகலும் இரவும் ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த இரண்டு பொருட்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒரு போதும் நுழையாது. எனவே பூமி அதன் அச்சில் சுழலும்போது மட்டுமே பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இரவு பகல்கள் நகராமல் ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்க முடிகிறது.

பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இரவு பகல்கள் கட்டுண்டு நிற்கும்போது பூமியின் பகல் பிரதேசம் பூமியின் சுழற்ச்சியால் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் இரவுக்குள் நுழைய முடிகிறது. அதைப் போல மறுபக்கம் பூமியின் மீதுள்ள இரவுப் பிரதேசம் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் பகலுக்குள் நுழைய முடிகிறது.

'பகலுக்குள் நுழையும் இரவு! இரவுக்குள் நுழையும் பகல்' எவ்வளவு சிறப்பான அறிவியல் ஞானத்தை திருக் குர்ஆனின் மேற்கண்ட வசனம் மிகச் சாதாரணமாகச் சொல்லி செல்கிறது! படிப்பறிவில்லாத முகமது நபியால் இந்த உண்மைகளை எவ்வாறு சொல்ல முடிந்தது என்று நினைத்து ஆச்சரியப்பட்டுப் போகிறோம்.

நன்மை பயக்கும் நபிமொழி .
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு விஷயங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் கொடுக்கப்படும் போது, பாவமானதாக இல்லாதவரை அவ்விரண்டில் மிக இலகுவானதையே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமானதாக இருந்தால், அதை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தூரமாக ஒதுங்கி விடுவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த விஷயத்திலும் தனக்காக எப்போதும் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் சேதப்படும் போது, அல்லாஹ்வுக்காக அவர்கள் பழிவாங்காமல் இருந்ததில்லை (புகாரி, முஸ்லிம்)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''அழ்பாஉ'' என்ற ஒட்டகை இருந்தது. அதை எந்த ஒட்டகையாலும் முந்த முடியாது அல்லது முந்த முயற்சித்தது கூட கிடையாது.

ஒரு காட்டரபி தன் பெண் ஒட்டகை மீது ஏறி வந்து, அதை முந்திவிட்டார். இது முஸ்லிம்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி விட்டது.

இதைக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''உலகில் எந்தப் பொருள் உயர்ந்தாலும், அதை (ஒரு நேரத்தில்) தாழ்த்துவது என்ற கடமை அல்லாஹ்வின் மீது உள்ளது'' என்று கூறினார்கள். (புகாரி)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு சாப்பிட்டால், மூன்று தடவை தன் கை விரல்களை சூப்புவார்கள்.

உங்களின் உணவில் ஒரு சிறு பகுதி கீழே விழுந்து விட்டால்கூட, அதில் உள்ள அசுத்தத்தை நீக்கி, அதை சாப்பிடட்டும், ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம்'என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
மேலும் உணவுத்தட்டு வழித்து உண்ணப்பட வேண்டும் என்றுக் கட்டளையிட்டார்கள். உங்கள் உணவில் எதில் ''பரக்கத்'' உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

'ஓர் ஆட்டின் காலின் கீழ் பகுதி, அல்லது தொடைப்பகுதி ஆகியவற்றை சமைத்து விருந்துக்கு என்னை அழைக்கப்பட்டாலும் நான் அதை ஏற்பேன். எனக்கு ஆட்டின் காலின் கீழ் பகுதியையோ, அல்லது தொடைப் பகுதியையோ அன்பளிப்பாக கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வேன்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அஸ்வத் இப்னு யஸீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வீட்டில் எப்படி நடந்து கொள்வார்கள்? என, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்பட்டது. தன் குடும்பத்தாருக்கு உதவி புரிவதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருப்பார்கள். தொழுகை நேரம் வந்து விட்டால் தொழுகைக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பதில் கூறினார்கள். (புகாரி)
அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''நானும், என் சிறிய தந்தையின் இரண்டு மகன்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தோம். அவ்விருவரில் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள பகுதியில் எங்களை (அதிகாரியாக) நியமியுங்கள்'' என்று கேட்டார். இன்னொருவரும் இதே போல் கூறினார்.அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நிச்சயமாக நாம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இப்பதவியை கேட்கின்ற எவருக்கும், இதை ஆசை கொள்கின்ற எவருக்கும் இந்த அதிகாரத்தை வழங்கிட மாட்டோம்'' என்று கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''ஒரு மனிதர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கூறினார். ''நீர் கோபப்படாதீர்!'' என்று கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். ''நீர் கோபப்படாதீர்!'' என்று பலமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி)

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...