Friday, October 16, 2015

ஜலதோஷத்தை குணப்படுத்தும் நொச்சி

மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம். நொச்சித் தைலம் பல நோய்களைத் தீர்க்கும் நிவாரணியும் கூட. மேலும் நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும்.

இதன் இலையைச் சட்டியில் போட்டு பிறகு அடுப்பில் சூடு செய்து உடம்பு ஏற்கும் அளவு சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும். வலியுள்ள இடத்தில் துவையலாக அரைத்தும் பூசலாம். மண்ணீரல் வீக்கமும் கட்டுப்படும். நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும்.

மூலநோய்க்கு மருந்தாகும், இரத்தத்தை சுத்தப்படுத்தும் பீர்க்கங்காய்

பொதுவாகக் காய், கனிகள் தமக்குள் உடலுக்குப் புத்துணர்வு தந்து சோர்வினைப் போக்கக் கூடிய பல்வேறு சத்துப்பொருட்களை உள்ளடக்கியுள்ளன. இந்த சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கின்றன. காய், கனிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து நோயற்ற வாழ்வுக்கு வழித் துணையாய் அமைகின்றன.

உள்ளுறுப்புகளுக்கு ஊட்டம் தந்து உற்சாகத்துடன் செயல்படச் செய்கின்றன. பச்சைக் காய்கறிகள் ரத்த நாளங்களில் குறிப்பாக இதயத்தைச் சார்ந்த ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்பட்டு மாரடைப்பு

அதிக நேரம் ஏசியில் இருந்தால் எலும்பு தேயும்

அனைவருக்குமே வைட்டமின் மற்றும் புரதக் குறைபாடு, உடற்பயிற்சிகள் செய்யாமல் இருத்தல், குளிர்சாதன வசதி உள்ள இடத்தில் வேலை செய்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்ந்து போகக் கூடும். நமது உடலில் உள்ள எலும்புகள் தேய்வுக்கு உள்ளாகும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் அறிகுறிகள் எதுவும் கிடையாது.

எலும்பு முழுவதும் தேய்வு அடைந்தபிறகுதான் அதற்கான அறிகுறிகள் கொஞ்ச கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பிக்கும். உடல் களைப்பு

தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை சாப்பிட்டால் இரத்த குழாய் அடைப்பு நீங்கும்

மூன்று நாட்கள் தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்

இயற்கையாக கிடைக்க‍க் கூடிய இந்த பேரிச்சம் பழங்களை உட்கொள்ளும் நமக்கு எண்ணிலங்டங்கா பயன்களையும் பலன்களை கொடுக்கும். நல்ல தரமான கொட்டை நீக்கிய பேரிச்சம் பழங்களை எடுத்து

ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவிட்டு, சுத்த‍மான அசல் தேனை, அப்பழங்கள் மூழ்கும்படி, ஊற்றி மூடி விடவேண்டும்.

நாள் முழுவதும் எனர்ஜியுடன் சுறுசுறுப்பாக இருக்க உதவும் உணவு முறைகள்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள கழிவுகள் சரியான முறையில் வெளியேறும். 30 நிமிட உடற்பயிற்சிகளை காலையில் செய்வது அவசியம். காலை உணவாக புரதம், நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஓட்ஸ், ராகி கஞ்சி, முளை கட்டிய பச்சைப் பயறு, சுண்டல், இட்லி, தோசை போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

வயிற்று புண்ணுக்கு அருந்த வேண்டிய உணவுகள்

பெரும்பாலும் வயிற்றுப் புண்ணில் ஏ.எச் பைலோரி என்ற பாக்டீரியா உள்ளது. அதனால் ஏ.எச் பைலோரி கிருமியை அழிக்கின்ற சிகிச்சைகளை முதலில் செய்ய வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்:

நன்றாக வேக வைத்த சாதம், கஞ்சி, மோர் சாதம்
இட்லி (காரமில்லாத சட்னியுடன்) கீரைகள்,காய்கறிகள்
புளிப்பில்லாத பழங்கள்:- ஆப்பிள் சாத்துகுடி, பப்பாளி.

இட்லி, தோசை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள். அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.

இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளன. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். ஆண்மையை

இரத்த சோகையை விரட்டும் வெல்லம்

இரத்தசோகையால் ஆயிரக்கணக்கான பதின்பருவப் பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு. இரும்புச் சத்துக் குறைவுதான் இரத்தசோகைக்கு முக்கியக் காரணம். உடல் வெளுக்கும். நகம் வெளுக்கும்.

முகம் வீங்கும். கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம்

நீண்ட ஆயுளை தரும் மருத்துவ தொழில்நுட்பம்

நீண்டகாலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஆனால் இதற்கு தேவையான உணவு, காற்று நீர், சுற்றுப்புறம் என அனைத்தும் மாசுபட்டு கிடக்கிறது. இதனால் மனித வாழ்க்கையின் ஆயுள் எண்ணப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மனித வாழ்நாளை தள்ளிப்போட தற்போது நவீன மருத்துவமுறைகள் வந்து விட்டன.

இந்த வகையில் ஒரு மனிதனுக்கு தேவையான மாற்று உடல்

பித்தத்தைக் குறைக்கும் வெள்ளரிக்காய்

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.

வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையும் வெள்ளரியில் உண்டு.

இவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத்

இதயத்திற்கு நலம் தரும் எண்ணெய் தன்மையான மீன்கள்

சல்மன், வார்டின், மேகரல் trout and herring போன்றவை எண்ணெய் தன்மையான மீன்களாகும். இவற்றில் இருதயத்திற்கு மிகவும் நல்லதான omega-3 fatty acids என்ற கொழுப்பு கூடியளவு உண்டு. குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் ஒமேகா கொழும்பு பெரிதும் உதவுவதால் கர்ப்பணிகளும் பாலுட்டும் தாய்மார்களுக்கும் அவசியமானது.

அத்துடன் ஒமேகா 3 கொழும்பு அமிலமானது உயர் இரத்த அழுதத்தைக் குறைக்கும், குருதிக் குழாய்களில் (நாடிகள் artery) கொழுப்பு படிவதைத்

தினமும் கொழுப்பை உணவில் சேர்ப்பது அவசியமா?

தினமும் ஓரளவு நல்ல கொழுப்பை உணவில் சேர்ப்பது அவசியம். அவை உடல் நலத்திற்கு நல்லதுசெய்யும்.

அத்தகைய கொழுப்பு மீனிலுள்ள கொழுப்பு, கொட்டைகள், விதைகள். அவகாடோ பழம், ஆலிவ் ஆயில், சூரியகாந்தி எண்ணெய், கோர்ன் எண்ணெய் போன்ற பலவற்றிலும் உண்டு.

அத்தகைய கொழுப்புகள் ஏன் அவசியம்

அவற்றில் விட்டமின் E, செலினியம் உட்பட பல அன்ரி ஒட்சிடனட்ஸ் (antioxidants) உண்டு

மீதமாகும் உணவை வீணாக்காதீர்கள்

இன்று (வெள்ளிக்கிழமை) உலக உணவு தினம். உலக உணவுதினம் என்பது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16-ந்தேதி கொண்டாடப்படுகின்றது. உணவு, உழவு இவற்றுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஐ.நா. சபையால் இது கொண்டாடப்படுகின்றது. உணவு பாதுகாப்பு, உலக உணவு, உலக உழவு முன்னேற்றம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து இதனைக் கொண்டாடுகின்றன.

சுமார் 150 நாடுகளில் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியின் மூலக் கருத்து உலகில் வறுமையையும், பசியையும் நீக்க வேண்டும் என்பதுதான்.

கை கழுவுவதால் மட்டும் பாக்டீரியா விலகாது

கழிப்பறை கதவில் தொடங்கி பேருந்து கைப்பிடி வரை பல இடங்களிலிருந்து கிருமிகள் எளிதாகப் பரவுகின்றன. பொதுவாகவே நமது உடலின் மேல் பகுதியில் ‘கமன்சல்ஸ்’ என்ற பாக்டீரியாக்கள் அதிகம். சுற்றியுள்ள காற்று, உட்கொள்ளும் இறைச்சி போன்றவற்றாலும் பாக்டீரியாக்கள் கைகளில் தொற்றிக்கொள்ளும். தொடர்ந்து உடலின் பல பகுதிகளுக்குப் பரவும்.

விரைவில் எண்ணிக்கையில் பெருகி நோய்களை ஏற்படுத்தும். கைகழுவுவது இத்தகைய பாதிப்புகளை தடுக்கிறதா என்று

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...