Friday, July 18, 2014

விளாம்பழம், அல்சரைப் போக்கும் அருமருந்து

தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

* விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

* தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

மாரடைப்பைத் தடுக்கும் நார்ச்சத்து உணவுகள்

இன்று மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. இதற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை மாற்றம் போன்ற பல விஷயங்களை மருத்துவர்கள் காரணமாகக் கூறுகின்றனர். அதிலும் மாரடைப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள், அதுகுறித்த அச்சத்துடனே காலத்தைத் தள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில், மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பிரிவு ஆய்வு நடத்தியது.

உடலுக்கு குளிர்ச்சி தரும் சீரகம்

சீரகம் நற்சீரகம், காட்டு சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என பல வகைப்படும். நற்சீரகமும் பெருஞ்சீரகமும் உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும். மற்றவை மருந்தாக மட்டுமே பயன்படும். சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தும்முன் அதை நச்சு நீக்கிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக சீரகத்தை சுண்ணாம்பு நீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து உலர்த்தி புடைத்து சுத்தப்படுத்தி வைத்துக்கொண்டு மருந்துக்கு உபயோகப்படுத்துவது சிறந்த முறையாகும். சீரகத்தின் மருத்துவ குணங்கள்:-

கொத்தமல்லி விதையை போல சீரணிக்கும் சக்தியுள்ளது. நற்சீரகம் அசோசகம், வயிற்று வலி, பீலிகம் (கெட்டிப்பட்ட சளி), காசம்

தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்க

கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட். வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

* வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம். விரைவில் குணமடையும்.

* தினமும் ஒரு கேரட் சாப்பிடலாம். அதிகமாக சாப்பிட்டாலும் பித்தமாகிவிடும். பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

* வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.

கைகளை கழுவுவது அவசியமா?

நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது கை கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம்.

ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம். இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது. பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள்.

வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டிற்குள் நுழைவார்கள். ஆனால் இந்தப் பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது. நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்துவிட்டோம்.

சரும நோய்களை விரட்டும் கிர்ணிப்பழம்

புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ் மெக்னீஷியம், இரும்புச் சத்து என சகலத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கிர்ணிப்பழம், உடல் குளிர்ச்சிக்கும் உகந்தது. இத்தனை சத்துக்களை கொண்டிருப்பதால், எளிதில் இது ஜீரணமாகாமலும் போகலாம். அதனால் எப்போதும் இதனுடன் வெல்லத்தை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

* உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழத் துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள், கண்கள் பிரகாசிக்கும்.

* கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...