Thursday, May 29, 2014

ரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும் கிராம்பு

ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

எலும்புகளை பலப்படுத்தும் கொய்யா

கொய்யாவின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கொய்யா, அதிக சத்துகளைக் கொண்டதாகத் திகழ்கிறது. கொய்யா கோடைக் காலத்தில்தான் அதிகமாக விளையும். தற்போது உயிரித் தொழில்நுட்ப முறையில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

கொய்யாவில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லிக்கு அடுத்து அதிக வைட்டமின் 'சி' சத்து உள்ள பழம் கொய்யாதான். கொய்யாவின் பிற மருத்துவ குணங்கள்...

நோயின் ஆரம்பமே மலச்சிக்கல் தான். அனைத்து நோய்களின் தாக்கமும்

கோடைக்கு ஏற்ற பாசிப்பயறு

பயறு வகை உணவான பாசிப்பயறு பல்வேறு சத்துகளின் பெட்டகமாக உள்ளது. பண்டைய காலம் முதலே பாசிப்பயறு இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா போன்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த நூற்றாண்டு களில்தான் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளன. புரதம், கார்போஹைட்ரேட்டுடன், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

சைவ உணவுகளின் நன்மைகள்

சைவ உணவுகளைச் சாப்பிடுவது உடல் நலனுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் பட்டியல் இதோ...

நச்சுகள் அகற்றம்:

நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை, முட்டைக்கோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிகவும் முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதேசமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.

எலும்புகளுக்கு வலு:

இறைச்சி, உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பைக் கூட்ட வழிவகுக்கக் கூடியது. மேலும் நமது சிறுநீரகத்துக்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்துவதோடு, எலும்பில் உள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதேசமயம் சைவ உணவில் இந்தப் பிரச்சினை இல்லை.

ரசாயனகல் மாம்பழங்களால் புற்றுநோய் ஆபத்து

தற்போது மாம்பழ சீசனையொட்டி சென்னைக்கு மாம்பழம் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து கார்பைட் எனப்படும் ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்புவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

உணவு பாதுகாப்பு மாவட்ட நியமண அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கோயம்பேட்டில் உள்ள மாம்பழ குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 500 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொத்தவால்சாவடி, தியாகராயநகர் மார்க்கெட்டுகளில் நடந்த சோதனையில் 1100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அதிகாரி லட்சுமிநாராயணன் கூறியதாவது:–

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...