Thursday, January 17, 2013

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத்தோற்றுவிக்கிறது.

இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட

எலும்பு வலிமைக்கு என்ன செய்யலாம் !!

நமது உணவுப் பழக்கவழக்கம் தான் நம் உடம்பில் உள்ள எலும்புகள் உறுதியாவதற்கும், உடைவதற்கும் காரணமாகிறது. சரியான ஊட்ட உணவு எலும்புகளுக்கு கிடைக்காவிட்டால் அதுவே எலும்புகள் வலுவிழந்துபோகக் காரணமாகி விடுகிறது.

உணவு உட்கொள்ளாமல் புறக்கணித்தல், குறைந்த கலோரி உள்ள உணவுகளை உட்கொள்ளுதல், கால்சியம்அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விலக்குதல், அதிக கலோரி உள்ள உணவுகளைஉட்கொண்டு ஊட்டச்சத்து உணவுகளை தவிர்த்தல் ஆகிய காரணங்கள் நாளடைவில் எலும்புகளுக்கு கேடுவிளைவிக்கும் வேலையை செம்மையாக செய்துவிடுகின்றன.

இன்றைய அவசர உலகில் பலரும் காலை உணவை தவிர்க்கின்றனர். அதற்கெல்லாம் ஏது நேரம் என்று பலரும்பெருமையுடன் சொல்லிக் கொள்வதும் உண்டு. காலை உணவு அத்தியாவசியமானது.

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் !

குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுத்து வளர்க்க வேண்டும். உணவில் பொதுவாக புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் என்னும் ஐந்து வகையான முக்கிய உணவுச் சத்துகள் அடங்கியுள்ளன.

குழந்தையின் உணவில் இந்த ஐந்து வகையான முக்கிய ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பல வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவர்.

உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான புரதம் பால், முட்டை, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பட்டாணி போன்ற உணவுப்

சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை

உயிருக்கு ஆபத்தான உணவு வகைகளை தவர்ப்பது நல்லது !!

வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பி
ட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

`இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை

நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!

ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.

குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.
அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ, இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.

மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ளது !!!

பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.

ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், சாராசரியாக மனித ஆயுளை 10 சதவீதம் அதிகரிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். பழங்களை, குறிப்பாக ஆப்பிளை தேடிச்செல்லும் வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றின் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகமாக இருப்பதன் மூலமும் இது உறுதியாகி உள்ளது.

பீட்ரூட்டில் உள்ள எண்ணற்ற மருத்துவக் குணங்கள் !!!

பீட்ரூட்யில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

சர்க்கரை நோய்க்கு கோவக்காய்!

சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். முதல் ரக சர்க்கரைநோய் இளம் வயதிலும் வரலாம்; முதிய வயதிலும் வரலாம். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் கட்டாயமுள்ளது. இரண்டாம் ரக நோயாளிகள் மாத்திரை சாப்பிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இது இளம் வயதில் வராது. உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும். சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க

தேன்

இயற்கையாகவே இனிப்பானதும், ஆரோக்கியத்திற்கும் தேவையானவற்றையும் கொண்டது தேன்.

தேனீக்கள் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கும் தேனானது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தடிமல், காய்ச்சல், சிறுவெட்டுக்காயம் போன்றவற்றிக்கு கைமருந்தாக பயன்பட்டு வந்திருக்கின்றது.

தேன் ஒரு தடிப்பான, இனிப்பான, தேனீக்களால் தயாரிக்கப்படும் பானமாகும். இது சீனியை விட குறிப்பிடதக்க அளவில் அதிகம் இனிப்பானதாகும்.

தேனீக்கள் தமது தேவைக்காக தேனைச் செய்து பாதுகாத்து வைக்கின்றன. கூட்டாக வாழும் தேன் கூட்டில் இராணித் தேனீ, வேலையாள் தேனீ, ஆண் தேனீ என மூன்று வகையான தேனீக்களுண்டு. வேலையாட் தேனீக்கள், மலர்களிலுள்ள தேனையும், மகரந்த மணிகளையும் சேர்த்து (கால்களில் மகரந்தம் கொண்டு செல்லும்

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இஞ்சி

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

பப்பாளி இலை

இன்றைய சூழ்நிலையில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் புதிய தகவலாக ‘பப்பாளி இலைச்சாறு கொடுத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அனுபவரீதியில் முயற்சித்துப் பார்த்து வெற்றி அடைந்துள்ளனர்.

டாக்டர் ஒருவரின் மகன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ‘பப்பாளி இலைச்சாறு கொடுத்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அனுபவரீதியில் சிலர் அந்த டாக்டரிடம் சொல்ல… அதை அவர் முயற்சித்துப் பார்த்துள்ளார். ஆச்சரியப்படும் வகையில் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவரின் மகன் டெங்கு பாதிப்பிலிருந்து மீண்டார்.

இந்தத் தகவலை தன்னுடைய சக டாக்டர்களிடம்

நலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சை

உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது.
தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக

சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?

தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.
சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.
காய வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள். காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியை போட்டு கலக்கி, தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி விடலாம்.
வெந்தயத்தை நன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை3 தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல் ஆக்கி காலை, இரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும்.

இதனுடன் தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம் சாப்பிட்டு வந்து பின் மாத்திரை களை நிறுத்திவிட்டு வந்தயப்

Wednesday, January 16, 2013

சாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்!

உடல் பெருத்து விடும் என்ற பயத்திலேயே பல இளம் பெண்கள் ஆசை இருந்தாலும் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். குழந்தைகளுக்கு வாங்கித் தருவதற்கு பெற்றோரும் யோசிப்பார்கள். ஆனால், ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அதன் காரணமாக சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது என்றும், அதனால் உடல் எடை குறைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

‘‘உண்ணும் உணவின் கலோரியை சமநிலைப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தையும் சாக்லெட் கொடுக் கிறது’’ என்கிறார்கள் அங்குள்ள ஆராய்ச் சியாளர்கள். ‘‘பெரும்பாலான சாக்லெட்டுகளில் பால் பொருட்களும் சர்க்கரையும் அதிகம் கலந்திருக்கும். இவை அதிக கலோரிகளைத் தருவதால் உடல் எடை கூடிவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அதிக கலோரிகள்

Sunday, January 13, 2013

தினம் ஒரு கப் கேரட் ஜூஸ்

தினம் ஒரு கப் கேரட் ஜூஸ் போதும். மருத்துவரை மறந்து விடலாம்.

உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.
குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.
காரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும்.
காரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும். காரட் சாறுடன் ஏழு எட்டு பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும்.

கம்பு உணவே மருந்து

சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு !! அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து !!

கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.

வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும் இதனை, சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும்.

துளசி பயன் தரும் மருத்துவ குணம்

அனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு செடி துளசி

1) இதன் வேறு பெயர்கள்:

துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)

4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

வெந்தயம் – கீரை மருத்துவப்பயன்கள்

இதன் தாயகம் கிழக்கு ஐரோப்பா மற்றும் எத்தியோப்பியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெந்தயம் அதிகமாகப் பயிரிடும் நாடுகள் இந்தியா, பாகீஸ்தான், நேபாள், பங்களாதேஷ், அர்ஜென்டினா, எகிப்து, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி, மொராக்கோ மற்றும் சைனா. உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வெந்தயத்தை வீடுகளில் தொட்டிகளில் கூட வளர்க்கலாம். தண்ணீர் அதிகம் தேங்கக்கூடாது. கடல் கரை சார்ந்த மணற்பாங்கான இடங்களில் நன்கு வளர்கிறது. நன்சை நிலத்திலும் புன்சை நிலத்திலும் வளரும். இதற்கு வெய்யிலும் தேவை. இது ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்..
இதன் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன்படுத்தலாம். பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதை தான் வெந்தயம்.

மிளகு மருத்துவப் பயன்கள்

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு பரவியது . மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் இதுவே மிளகு. இதன் கொடியை கட்டிங் செய்து இனப்பெருக்கம் செய்யலாம்.

மருத்துவப் பயன்கள்-

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதை குறிக்கவே “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்றார்கள் நம் முன்னோர்கள்.

பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்க்காது.

ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து

சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

கொத்தமல்லி

கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும்.
இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.

வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை

கரும்பில் நிறைய நன்மைகள்

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!

மஞ்சள் காமாலை

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும்

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...