Friday, November 2, 2012

குர்'ஆன் உண்மையில் யாருக்கு சொந்தம்...?


முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இன்று அல்குர்ஆன்தங்களுடைய வேத நூல் எனவே அது தங்களுக்குறியதேஎன்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அதனால் அதனை முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் அதனை அவர்களுக்கு கொடுக்க மறுத்து விடுகின்றனர். அவர்கள் அசுத்தமானவர்கள்; எனவே அவர்கள் அதைத் தொடக்கூடாது என்று சட்டம் வகுத்துள்ளனர். எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆனைப் படித்து
விளங்கி அதிலுள்ள உயர்ந்தகருத்துகளை அறியும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் குர்ஆனை தங்களுடைய நூல் என்று சொந்தம் பாராட்டுவதால் அவர்களும் அதை நம்பி தங்களுக்கும் குர்ஆனுக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஆனால் குர்'ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்...

6:90 .....இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.


81:27. இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.


அவர்கள் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத குடும்பங்களில் பிற்ந்திருந்தாலும் சரி, முதலில் பிறப்பினால் நாங்கள் முஸ்லிம்கள்; அதனால் குர்ஆனுக்குச் சொந்தக்காரர்கள் என்ற வாதத்தை முஸ்லிம்கள் விட்டுவிட வேண்டும். பண்பில்லா, மனித நேயம் மறந்த மக்களால் மிகக் கேவலமாக இழிவாக மதிக்கப்படக்கூடிய ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலும், அவர் இந்த குர்ஆனின் போதனைகளை ஏற்று அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஒப்புக்கொண்டு அவனை மட்டுமே வணங்கி அவனிடம் மட்டுமே தனது தேவைகளைக் கேட்டு, படைக்கப்பட்ட மலக்குகள், அவுலியாக்கள், இமாம்கள், பெரியார்கள், முன்னோர்கள், மூதாதையர்கள் ஆகிய படைப்பினங்களை வணங்குவதை விட்டும், அவர்களிடம் தனது தேவைகள் குறித்து முறையிடுவதை விட்டும், தனது வேண்டுதல்களை வைப்பதை விட்டும் முற்றிலுமாக விலகிக்கொண்டாரோஅவரே அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...