Tuesday, January 1, 2019

குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு எடை இருக்கவேண்டும்


பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கொழுகொழுவென குண்டாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், குண்டான குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என்று நினைத்தால் அது தவறானது.

இன்றைய குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் டி.வி, வீடியோ கேம்ஸ், மொபைல் என்று வீட்டிற்குளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். ஆனால், ஃபிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் இருந்தால்தான் ஒபிஸிட்டியைத் தவிர்க்க முடியும். அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாவது

Saturday, September 24, 2016

கம்பீரமாக வாழ கம்பு

நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய ஒரு தானியம் கம்பு. சிறந்த சத்துக்கள் கொண்ட இது வசதியற்றோருக்கு உதவும் சிறு தானியமாக ஒரு காலத்தில் இருந்தது. இன்று உடல் நலம் காக்க வேண்டி அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றது. 
அதிக நார்சத்து மிகுந்தது என்பது இதன் கூடுதல் சிறப்பு அம்சம். 

இதில் நோய்களை எதிர்க்கும் ரசாயனங்கள் உள்ளன. 

* கொழுப்பை குறைக்கின்றது. 

* நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கின்றது. 

* ஃபோலேட், இரும்பு, மக்னீசியம், காப்பர், ஸிங்க், வைட்டமின் ஈ, பி சத்து பிரிவு, தயமின், ரிபோ ஃளேவன், நியாசின் சத்துக்கள் கொண்டது. 

ஏப்பம் செரிமானத்தின் அறிகுறியா?

ஏப்பம் வெளிப்படுதல் என்பது செரிமானத்தின் அறிகுறியாக நம்பப்படுகிறது. அதே வேளையில், பொது இடங்களில், இயல்பை மீறி அளவு கடந்த ஏப்பம் வெளிப்படுவது அநாகரிக செயலாகவே அடையாளம் காணப்படுகிறது.

ஏப்பம் எதனால் வருகிறது? அது செரிமானத்தின் அடையாளமா? ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடையை கீழே பார்க்கலாம்.

‘‘நாம் உணவு சாப்பிடும்போதும், தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர் அருந்தும்போதும், சிகரெட் பிடிக்கும்போதும், மூச்சை இழுக்கும்போதும் ஏராளமான காற்று நமது வயிற்றினுள் செல்கிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

கொசுக்கடியால் பரவும் டெங்கு வைரஸ் டெங்கு ஜுரத்தினை உண்டாக்குகின்றது. பாதிக்கப்பட்ட 3-4 நாட்களில் ஜுர அறிகுறிகள் தெரியும். தலைவலி, உடல் வலி என்று ஆரம்பிக்கும் இது 2-4 நாட்களுக்குள்ளும் கட்டுப்படலாம். சிலருக்கு ரத்த கசிவினை ஏற்படுத்தி ஆபத்தான நிலையிலும் கொண்டு விடலாம். ஜுரத்தினால் குறைந்த அளவு ப்ளேட்லட்ஸ் எண்ணிக்கை ரத்தத்தில் ஏற்படும் பொழுது, ரத்த அழுத்த நிலை அதிகம் குறையும் பொழுது இது உயிரிழப்பு வரை கொண்டு செல்ல முடியும்.

நாவற்பழத்தின் நன்மைகள்

நாவற்பழம் நாம் அன்றாடம் சாப்பிடும் பழம் அல்ல. ஆனால் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.

நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை. இதன் விதைகளை நிழலில் உலர்த்தித் தூள் செய்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

Sunday, September 4, 2016

பாகற்காய் மலச்சிக்கலை தீர்க்கும்

மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் மற்றும் ரத்தைபோக்கை கட்டுப்படுத்தக் கூடியதும், மலச்சிக்கலை தீர்க்கவல்லதும், வயிற்று புழுக்களை வெளியேற்ற கூடியதும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக  விளங்குவதுமான பாகற்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். 
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பாகற்காய் மிகுந்த கசப்பு சுவை உடையது. கசப்பாக இருந்தாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது. பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நார்ச்சத்து கிடைக்கிறது. மலச்சிக்கலை

துளசி காய்ச்சலை குணப்படுத்தும்

காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன. தொண்டைக்கட்டு, உடல் வலி, பசியின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம். கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, மிளகுப்பொடி, பனங்கற்கண்டு. கீழாநெல்லியின் இலை, தண்டு, காய் உள்ளிட்டவற்றை ஒருபிடி அளவுக்கு